Тёмный

திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 32 I KSS ICF 

  Kamala Vinayagar Sath Sangam
Подписаться 4,3 тыс.
Просмотров 1,3 тыс.
50% 1

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - நாள் 17/06/2024
திருக்கடவூர் வீரட்டம்
பாடல் எண் : 1
பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி யுணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
பாடல் எண் : 2
மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி யாடிடும் பத்தர்க் கென்றும்
கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
பாடல் எண் : 3
பொருத்திய குரம்பை தன்னுட் பொய்ந்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீ ருள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினி லிருப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
பாடல் எண் : 4
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.
பாடல் எண் : 5
தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.
பாடல் எண் : 6
பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை யைவரா லலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.
பாடல் எண் : 7
மாயத்தை யறிய மாட்டேன் மையல்கொண் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.
பாடல் எண் : 8
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.
பாடல் எண் : 9
சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய்யோடு பலபல வாட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
பாடல் எண் : 10
முந்துரு விருவ ரோடு மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவ ரிருடிக ளின்பஞ் செய்ய
வந்திரு பதுக டோளா லெடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@babur3273
@babur3273 2 месяца назад
சிவ சிவ
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 3 месяца назад
ஓம் நமசிவாய
@uglyvulture5172
@uglyvulture5172 3 месяца назад
மதம் வெறுக்கும் மது ××××××××××××××××××× பல்லவி விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒத்துக்காது போதை பானம் பிஞ்சிதனில் வெம்பிய பேரை ஏத்துக்குவான் தரும ராஜன். சரணங்கள் 1. கஞ்சாப் புகை நாற்றம் கெட்ட ஆவிகளை வரவழைக்கும் நஞ்சைக் கண்டு மிரண்டு காக்கும் தேவதைகள் விரைந்தோடும். 2. ஆல்கஹாலில் சோடா ஊத்தக் கலவையின் குண மாற்றம் அறிய வேண்டும் விஞ்ஞானம் உடல் அணுக்களுக்குத் தீமை நிச்சயம். 3. சாராயம் உள்ளே ஊத்தி ஊறுகாயைச் சப்பும் போது இரத்தத்திலே உப்புக் கூடிடும் இதயப் படபடப்பு அதிகரிக்கும் 4. அனுமதி பெற்ற பார்களில் அதிகம் உண்டு திண்பண்டமே உடல் ஒவ்வா விரைவுணவு உடனடியா ஆப்பு வைக்கும். 5. உடல் என்னும் ஒருகாய்க்கு ஒழுக்க மென்னும் உப்புப்போடு நோயில்லா வாழ்க்கை வந்திடும் புனிதம் நோக்கி வாழ்வு மலர்ந்திடும். &&&&&&&❤
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 2,8 млн