ஐயா மிகவும் மகிழ்ச்சி நிறைய விளக்கங்கள் கொடுத்தாங்க என்னுடைய பொண்ணு மற்றும் பையன் இருவருக்குமே இந்த பிரம்மகத்தி தோஷம் இருக்கிறது ஆனால் இதுவரை என்னால் அந்த கோவிலுக்கு செல்ல முடியவில்லை அந்த மகாலிங்கேஸ்வரர் எங்களை எப்போது வரவேற்கப் போகிறார் என்று தெரியவில்லை வாழ்க வளமுடன் ஐயா நீங்கள்
@@vk.murugan2368 மிக விரைவில் தங்களுக்கு நல்ல நேரம் அமைந்து இங்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லலாம். மகாலிங்கம் அருள் கிடைக்கும். வளமுடன், நலமுடன் வாழ்க! 🙏🙏🙏
வணக்கம் அண்ணா 🙏 தோஷ பரிகாரம் செய்ய வரும் கந்தசஷ்டி விரதம் நடைபெறும் நவம்பர் மாதம் 2 ந்தேதி முதல் 6 ந் தேதி புதன்கிழமைக்குள் ஒரு நாளில் வந்து பரிகாரம் செய்யலாமா ? பதில் தாருங்கள் நன்றி 🙏
@@madumethar3402 பரிகாரம் முடிந்த பின் கடைசியாக மூகாம்பிகை சன்னதி அருகில் உள்ள கொடிமரம் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்துள்ள பிரசாதப்பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வேறு எந்த கோயிலுக்கும் செல்லலாம். ஆனால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். தங்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்...என்றும் என்றென்றும் 🙏🙏🙏
பிரார்த்தனையும் அர்ச்சனையும் மட்டுமே போதுமானது. இறைவன் பெயர் சொல்லி பணம் பிடுங்கும் கும்பல். டிக்கெட் 550 நன்கொடையாக கட்டாயம் 200 அன்னதானம் 100 ஐயருக்கு கட்டாயம் 100 மொத்தம் 1000.
நான் இன்றுதான் சென்றேன். பரிகாரம் இல்லாமல், ஈசனை பார்க்க சென்றேன். வடக்கு கோபுர வாசல் வழியில் சென்றேன். மதியம் அபிஷேகம் பார்த்து அம்பாளை பார்த்து, மீண்டும் நந்தியை சுற்றி வந்து அதே வடக்கு வாசல் வழியே சென்றேன். இதில் எதேனும் தவறு இருக்கிறதா என்று கூறவும். அம்மனை பார்த்து மூகாம்பிகை பார்த்து நந்தி வழியாகத்தான் வெளியே வந்தேன்.pls கூறவும்
@@padmaram7402 எந்த தவறுமில்லை.சரியாகத்தான் செய்துள்ளீர்கள். பெரிய நந்தி முன் உள்ள கிழக்கு கோபுர வாயில் வழியாகத்தான் திரும்பி வரக்கூடாது. நீங்கள் வந்தது சரியே. 🙏🙏🙏
பரிகாரம் முடிந்த பின் கடைசியாக மூகாம்பிகை சன்னதி அருகில் உள்ள கொடிமரம் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்துள்ள பிரசாதப்பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வேறு எந்த கோயிலுக்கும் செல்லலாம். ஆனால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். தங்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்...என்றும் என்றென்றும் 🙏🙏🙏
பரிகாரம் செய்யாமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்ய செல்பவர்கள் கோயில் குளத்தில் குளித்து விட்டு வந்தால் போதுமான து. ஆடைகளை தொட்டியில் போட தேவை இல்லை. போட்டாலும் அதில் தவறேதும் இல்லை. அது நமது வசதி மற்றும் விருப்பத்தை பொறுத்தது. 🙏🙏🙏🙏
@@balajib9084 உங்கள் ஜாதகம் முதல் பக்கம் ( ராசி கட்டம்) whatsApp ல் அனுப்புங்கள். 84384 78753 நம்பருக்கு. பார்த்து விட்டு போன் செய்கிறேன். ரூபாய் 101/- Gpay செய்யுங்கள். பரிகாரம் செய்ய வேண்டுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி! 🙏🙏🙏
பரிகாரம் முடித்து விட்டு வேறு கோயில் களுக்கு தாராளமாக செல்லலாம். ஆனால் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். வேறு கோயில்களுக்கு சென்று விட்டு தங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏
கங்கைக்கு நிகராக கருதப்படும் அந்த குளத்தில் குளிப்பது மிகவும் சிறந்தது. தங்களுக்கு செளகரியப்படாத பட்சத்தில் அந்த குளத்தில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு செல்லவும். 🙏🙏🙏
உங்கள் ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. கட்டணம் ரூ 850/- +அர்ச்சனை சாமான்கள், தட்சணை, விளக்கு,பசுவுக்கு கீரை இவை அனைத்தும் சேர்த்து சுமார் 1200/- ஆகும். உங்களால் இந்த பரிகாரம் செய்ய முடியவில்லை என்றால் ரூபாய் 100/-செலுத்தி உப்பு பரிகாரம் செய்து விட்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். மேலும் இது சம்பந்தமாக விபரம் தேவையெனில் போன் செய்யுங்கள். 8438478753 & 9087587775 நன்றி, வணக்கம் 🙏🙏
பரிகாரம் டோக்கன் ( டிக்கெட் ) காலை 7.45 மணிக்கு கொடுக்க ஆரம்பிப்பார்கள். 11.00 மணி வரை அந்த டிக்கெட் வாங்க லாம். ஆனால் 10.00 மணிக்கு மேல் டிக்கெட் எடுத்து பரிகாரம் செய்தால் கோயிலில் தரிசனம் செய்ய நேரம் பத்தாது. எனவே முடிந்த வரை 10.00 மணிக்குள் பரிகாரம் செய்து விட்டு பொறுமையாக சுவாமி தரிசனம் செய்து விட்டு வாருங்கள். நன்றி🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... ஓம் நமசிவாய🙏
@@divyas686 அந்த கோயிலுக்கு வருவதற்கான வாய்ப்பு அமைவதே கஷ்டம். தங்கள் நேரம் நல்லபடியாக அமைந்து வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் உடனே புறப்பட்டு வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லுங்கள். பரிகாரம் செய்ய ஆடிமாதம் தவறில்லை. தாராளமாக செய்யலாம். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏
அந்த தேங்காய் மகாலிங்கம் சுவாமி சன்னதியில் உடைத்து பூஜை செய்து வழங்கப்படுகிறது. அதை தாராளமாக அனைவரும் உபயோகிக்கலாம். குழப்பம் அடைய வேண்டாம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
@@ananthik3130 பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்யும் இடத்தில் கொடுக்கும் விபூதி பிரசாதத்தை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜையில் கலந்து கொண்டவர் மட்டும் அந்த விபூதியை அதே இடத்தில் முழுவதும் உபயோகிக்க வேண்டும். அதை வேறு யாரும் பூசக்கூடாது. மற்றபடி அங்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்த பிரசாதங்களை அனைவரும் உபயோகிக்கலாம். கவலைப்பட வேண்டாம். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய🙏🙏🙏