Тёмный
No video :(

தென்திசையைப் பார்க்கின்றேன் || Thenthisaiyai || தமிழிசைப் பாடல்கள் || Vijay Musicals 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 6 тыс.
50% 1

பாடல் : தென்திசையைப் பார்க்கின்றேன் || ஆல்பம் : தமிழிசைப் பாடல்கள் || பாடியவர் : புஷ்பவனம் குப்புசாமி || இயற்றியவர் : புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் || ராகம் : ராகமாலிகை || தாளம் : ஆதி || முன்னுரை : நா அருணாச்சலம் (தலைவர், தந்தை பெரியார் தமிழிசை மன்றம்) || விஜய் மியூஸிக்கல்ஸ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
Song : Thenthisaiyai Paarkindren || Singer : Pushpavanam Kuppusamy || Lyrics : Puratchikavingar Pavendhar Bharathidasn || Raga : Ragamaliga || Tala : Adhi || Introduction : Na Arunachalam (Leader, Thandhai Periyar Thamizhisai Mandram) || Vijay Musicals || Video : Kathiravan Krishnan
பாடல்வரிகள் || LYRICS :
தென்திசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன்
என்றன்சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்!
அவன்நாமம் இவ்வுலகம் அறியும்! இராவணன்காண்!
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்நெஞ்சகனை,
நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும்
சூழ்ச்சிவிரும்பாத பெருந்தகையை
தமிழ்மறைகள் நான்கும்சஞ்சரிக்கும் நாவானை
வாழ்த்துகின்ற தமிழரைத் தமிழரென்பேன்,
மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும் காழ்ச்சிந்தை,
மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!
ராவ ணன்தன்கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்......

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@Ragupathy007
@Ragupathy007 6 месяцев назад
தமிழ் கடவுள் இராவணன் புகழ் ஓங்குக ❤❤❤ என் சொல்வேன் என் சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்குதடா.
@user-wz1tr5vj4d
@user-wz1tr5vj4d 4 года назад
எம் தாய் தமிழ் இனத்தின் மான்பும் மரபும் இவ்வுலகறிம் காலம் வெகுவிரைவில் நாம் தமிழர்
@reportersubramani2897
@reportersubramani2897 2 года назад
காலை பொழுதில் இந்த காணம் நம் நெஞ்சமெல்லாம் எழிச்சி கொள்ள வைக்கும் பாவேந்தர் பாடல் புஷ்பவனம் குரலில் புகழ் பரப்பும்......
@PaasaThamizhan
@PaasaThamizhan 4 года назад
அற்புதமான வரிகள்....!!!! தமிழன்டா.....🐯🤝💥🔥🐯🤝💥🔥💯🐯💯
@suryakuppusamy3
@suryakuppusamy3 2 года назад
புரட்சி பாடலை பாடிய தங்களை வாழ்த்துகிறேன்
@aravinthrjm1855
@aravinthrjm1855 Год назад
தமிழ் பெருமான்... இராவணன் புகழ் ஓங்குக.... 🙏🙏
@valvetti54
@valvetti54 2 года назад
வாழ்க இராவணன் புகழ்
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26
Thiruvudaiyan Tamizhn Muthukelumbai Kanavillai
6:27
Просмотров 27 тыс.