Тёмный

பிறந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் எவை  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 140
50% 1

பச்சிளம் குழந்தை நோய்அறி பரிசோதனை
தாய்மை அடைந்து உங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது அதிகபட்ச பாதுகாப்புடன் பராமரித்து வந்திருப்பீர்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் இருந்து இயற்கையாகவே கிடைத்துவிடுகிறது. பிறந்தவுடன் குழந்தை வளர்ச்சிக்கு தேவையானவைகள் அனைத்தும் நீங்கள் தரப் போகிறீர்கள்
நிறைய குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கின்றனர் :வளர்கின்றனர்
சில குழந்தைகள் பிறவியிலே கண்டுபிடிக்க கடினமான ஊக்க நீர் குறைபாடுகளுடன் பிறந்து இருக்கலாம். சரியான நேரத்தில் அவை கண்டுபிடிக்கப்படாமல் போனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் அல்லது உடல் மற்றும் மன நலக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். இவ் வகையான நோய்கள் மூலக்கூறு பிழை மற்றும் மரபணு சார்ந்த நோய்கள் என அழைக்கப்படுகின்றன. மிகக்குறைந்த அளவு குழந்தைகளுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உடல் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படலாம்.ஏற்கனவே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் இத்தகைய குறைபாடுகள் உடைய குழந்தைப்பிறப்பினை எதிர்பார்க்க மாட்டார்கள் .அதற்கான வாய்ப்பும் குறைவுதான். அரிதிலும் அரிதாக இக்குறைகள் உடைய குழந்தைகள் ஆரோக்கியமான குடும்பத்திலும் பிறக்கலாம். பிறந்த ஒவ்வொருவருக்கும் இக்குறைகள் உள்ளனவா என கண்டறிதல் அவசியம்.இத்தகைய குறைபாடுகள் உள்ள பெரும்பான்மையான குழந்தைகள் பிறந்தவுடன் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தோன்றுவார்கள்.வழக்கமாகச் செய்யக்கூடிய ஸ்கேன், இரத்த பரிசோதனைகள் சரியாகவே இருக்கும்.
பச்சிளம் குழந்தை நோய்அறி பரிசோதனை உங்கள் குழந்தைக்கு இயக்கு நீர் அல்லது மரபணுசார் நோய் உள்ளதா ?எனக் கண்டறிய உதவுகிறது.
வளர்ந்த நாடுகளின் பொது சுகாதாரத் திட்டங்களில் பச்சிளம் குழந்தை நோய் அறி பரிசோதனை மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உங்களுக்கு எழக்கூடிய பெரும்பான்மையான சந்தேகங்களுக்கு இதோ பதில்கள்!
1.பச்சிளம் குழந்தை நோயறி பரிசோதனை என்றால் என்ன?
பச்சிளம் குழந்தையின் குதிகாலில் இருந்து 4 பொட்டு இரத்தம்மூலம் செய்யப்படக்கூடிய பரிசோதனையே இது ஆகும் ஆரோக்கியமான அனைத்து குழந்தைகளுக்கும் செய்யப்படும் இப்பரிசோதனை மூலம் ஏறத்தாழ 50 வகையான அரிதான ஊற்றுநீர் மரபணு நோய்கள் உள்ளதா? என தெரிந்து கொள்ளலாம். பிறந்தவுடன் சில குறைபாடுகளை கண்டுவிட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை தொடங்கி நோயின் பாதிப்பையும் தடுத்து ஆரோக்கியமாக வாழ உதவலாம் அளவுக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால் குழந்தையின் மூளை மன வளர்ச்சி பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகவே இருக்கும். பிறந்தவுடன் செய்யப்படும் இப்பரிசோதனை மூலம் குறைபாட்டினை கண்டுபிடித்து மருந்துகள் தந்தால் ஆரோக்கியமாக குழந்தையாக வளர்க்கலாம். தைராய்டு பரிசோதனை பச்சிளம் குழந்தை நோய் பரிசோதனையில் ஒன்றாகும்
2 எனது குழந்தை எப்படி பரிசோதிக்கப்படும்?
உங்கள் குழந்தையின் குதிகாலில் நாலு சொட்டு இரத்தத்தை உறிஞ்சி தாளில் ஒற்றி எடுத்து பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்படும்
3. ரத்தப் பரிசோதனை முறை பாதுகாப்பானதா?
ஆம். இது ஒரு சுலபமான பாதுகாப்பான பரிசோதனையாகும் உறிஞ்சு தாளில் ரத்தப் பரிசோதனை என்பது பெரும்பாலான நாடுகளில் செய்யப்படுகிறது.
4. எப்போது இப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்?
குழந்தை பிறந்த 72 மணி நேரத்திற்கு பின்னரும் 15 நாளுக்கு முன்னரே பரிசோதனை செய்யப்பட வேண்டும் 34 வாரம் கடந்த அல்லது 1500 கிராம் எடைக்கு அதிகமான குறைமாத குழந்தைக்கும் இதைச் செய்யலாம்
5. பரிசோதனை முடிவுகளை எப்படி நான் தெரிந்து கொள்வது?
உறிஞ்சு தாளில் அனுப்பப்பட்டுள்ள உங்கள் குழந்தையின் ரத்த பரிசோதனை முடிவுகள் சோதனைக் கூடத்திலிருந்து உங்கள் மருத்துவருக்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்பப்படும் ஏதேனும் குறைபாடு உள்ளது என தெரிய வந்தால் உடனடியாக உங்கள் மருத்துவருக்கு தெரிவிக்கப்படும்.
6.என்னுடைய குழந்தைக்கு பரிசோதனை முடிவுகளில் குறைபாடு உள்ளது என தெரிந்தால் என்ன செய்வது?
குறைபாடுகளை உறுதிசெய்ய அடுத்தகட்டப் பரிசோதனைகள் பற்றி உங்களுக்கு சொல்லப் படும். நீங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டால் மேற்கொண்டு ஆலோசனைகளை அவர் வழங்குவார்
7.இயக்குநீர் குறைபாடுகள் குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு?
கிட்டத்தட்ட 1000 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் இயக்கு நீர் குறைபாடு பாதிப்பு உள்ளது.பிறந்த சில நாட்களுக்குள் இக் குறைபாடுகளை கண்டறிந்து உறுதி செய்து மருத்துவத்தை தொடர்வது மிக முக்கியமானது .பெரும்பான்மையானவை விரைவில் சிகிச்சை எடுத்தால் கட்டுப்படுத்தக் கூடியவை ஆகும்.
8. பரிசோதனைகள் மூலம் எத்தனை வகையான குறைபாடுகளை கண்டறியலாம்?
ஏறக்குறைய 50 வகையான இயக்கு நீர் மற்றும் மரபணு ரீதியான குறைபாடுகளை கண்டறியலாம். அவைகளில் பிறவித் தைராய்டு சுரப்பு குறைபாடு .அட்ரீனல் சுரப்பு குறைபாடு குளுக்கோஸ் 6 பாஸ்பேட் குறைபாடு ஆகியவை முக்கியமானவை ஆகும்.
9. இத்தகைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?
முடியும்.பெரும்பாலான நோய்களுக்கு சிறந்த பலனளிக்கக்கூடிய சிகிச்சை உண்டு. பாதிப்புக்கு ஏற்ப சரியான உணவு (பால் மற்றும்உணவு )மருந்துகள் இதில் அடங்கும் பிறந்தவுடன் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை குறித்த காலத்துக்குள் செய்யப்பட்டால் இக்குழந்தைகளும் ஆரோக்கியமான பாதுகாப்பான செயல்திறன் வாய்ந்த வாழ்க்கை வாழ முடியும்.
10. இயக்கு நீர் குறைபாடுகளை முழுவதும் குணப்படுத்த முடியுமா?
இன்றைய தேதியில் இவ்வகையான குறைபாடுகளுக்கு பூரண குணம் கிடையாது
11.எனது குழந்தைக்கு குறைபாடு இருப்பின் அடுத்த குழந்தையும் பாதிப்புக்கு உள்ளாகுமா?
மரபணு ஆலோசனை மூலம் உங்கள் மருத்துவரோ அல்லது பயிற்சி பெற்ற மரபணு ஆலோசகராக தான் தங்கள் குழந்தைக்கு ஏன் இந்தக் குறைபாடு ஏற்பட்டது ?என்பதற்கு உரிய பதிலை அளிக்க இயலும்‌.
அடுத்து பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு இருக்குமா? என்பதனை அறியவும் மரபணு ஆலோசனை உதவும்

Опубликовано:

 

13 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 116 тыс.
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Мелл хочешь сына от Дилары
00:50