Тёмный

மெகா முன்னாள் மாணவர் சந்திப்பு 2023 | MEGA ALUMNI MEET 2023 | PAJANCOA & RI - KARAIKAL 

nesaganam channel
Подписаться 9 тыс.
Просмотров 722
50% 1

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் கல்லூரி நிறுவன நாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது ஒரு சிறப்பு பார்வை...
நிகழும் சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி - அக்டோபர் 1, மற்றும் 2, 2023 ஞாயிறு, திங்கள் கிழமை இரு நாட்கள்
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைப்பெற்றது.
பஜன்கோவா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து விழாவினை தங்களது மலரும் நினைவுகளால் அலங்கரித்தனர்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் ஒன்றுகூடி குத்துவிளக்கேற்றினர்.
பேராசிரியர் முனைவர். நடராஜன் அவர்கள் துவக்கவுரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர். ஏ. புஷ்பராஜு அவர்கள் விழாவினை தலைமையேற்று தலைமை உரை வழங்கினார்.
மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர் .நாராயணன் அவர்கள் விழா குறித்த முன்னுரை வழங்கினார்.
கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சாலச்சிறப்பாக நடைபெற்றது.
இவர்களுடன்
வேளாண்துறை அலுவலர்கள் பஜன்கோவா மற்றும் மற்ற கல்லூரி
பேராசிரியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைசார்ந்த அலுவலர்கள் பஜன்கோவா கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக வருகை புரிந்து கல்லூரி மாணவர்களை ஊக்குவித்தனர்.
கல்லூரி துவங்கிய ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் வருகை புரிந்து வாழ்வில் உயர வழிகள் குறித்தும் கல்லூரி நிறைவின் பின் மேல்படிப்பு மற்றும் பல்வேறு பட்ட நுழைவு தேர்வுகள் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்மூலம் மாணவர்களும் பயன் பெற்றனர். மேலும் முன்னாள் மாணவர்கள் இதுபோன்று வருடந்தோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடத்துமாறு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.புஷ்பராஜு அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
பஜன்கோவா முன்னாள் மாணவர் தலைமை வன பாதுகாப்பு அதிகாரியாக கேரளாவில் பணிபுரியும் திரு ஜெஸ்டின் மோகன் IFS அவர்கள், தமிழ்நாட்டில் சென்னையில் கல்வித்துறை செயலாளராக பணிபுரியும் திருமதி ஜெயந்தி IAS , அவர்கள், புதுடெல்லியில் வெளியுறவு துறை அமைச்சகத்தில் துணைச் செயலாளராக பணிபுரியும் திரு சந்துரு அப்பர் IAS , அவர்கள்
தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு எவ்வாறு தங்களது திறமையை வளர்த்துக் கொண்டு தேர்வுகளை எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.
சென்னை இன்ஃபோ நெட் கம்பெனியின் தலைவர் திரு ரவிக்குமார் B.Sc(Agri)., MBA அவர்கள் கல்லூரி படிப்பிற்கு பிறகு "தொழிலதிபர்களாக" மாற ஓய்வு வயது இல்லாத "தொழில் முனைவராக" மாறுவதற்கு பயிற்சி மற்றும் உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
பஜன்கோவா முன்னாள் மாணவர்கள் திரு.கணேஷ் தாளாளர், பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியின் தவளக்குப்பம் அவர்கள் பேசுகையில் வேளாண் பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று கூறினார்.
பஜன்கோவா முன்னாள் மாணவர்கள் திரு. அருண் ஐய்யாவு அவர்கள் வருவாய் அதிகாரி மற்றும் நிர்வாக மாஜிஸ்திரேட் புதுச்சேரி பேசுகையில் வேளாண் துறை மட்டுமல்லாது அரசின் அனைத்து துறைகளிலும் வேளாண் பட்டதாரிகளால் சிறப்பாக செயல்பட முடியும் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
பஜன்கோவா முன்னாள் மாணவர் திரு தயாளன் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் பணிபுரிபவர் பேசுகையில் 1995 ஆண்டு "ஆனந்த விகடன்" பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்ட போட்டியில் பஜன் கோவா சார்பில் "சுட்டி சபை" என்ற தலைப்பில் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபாய் 25,000 பெற்றதை நினைவு கூர்ந்தார், கல்லூரியில் படிக்கும் பொழுது படிப்பு தவிர இதர தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மேலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் இரண்டாம் நாளும் கல்லூரி நிறுவன
நாளுமான 02.10.2023 அன்று கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் வருகை
புரிந்து விழாவினை மேலும் சிறப்பித்தனர்,
கல்லூரி நிறுவன நாளன்று கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் ஓய்வு பெற்ற பேராசிரியர்களுடன் கலந்துரையாடி ஆசிபெற்றனர்.
வருகைபுரிந்த அனைத்து பேராசிரியர்களையும் கல்லூரி முதல்வர் முனைவர். ஏ. புஷ்பராஜு அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார்.
குறிப்பாக பஜன்கோவா வேளாண் கல்லூரியை ஆராய்ச்சி நிறுவனமாக நிலை உயர்த்த பாடுபட்டவர்களுள் ஒரு முக்கியஸ்தரான
கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர். எம்.சுப்ரமணியன் அவர்களை கல்லூரி பேராசிரியர்கள் பணிவன்புடன் மரியாதை செய்தனர்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் தங்கள் பேராசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.
மேலும் கல்லூரியின் வளர்ச்சியில் தாமும் பங்களிக்க விரும்பிய முன்னாள் மாணவர்கள் சுமார் 6 லட்சம் ரூபாய் தற்போது கல்லூரியில் படித்து அதிக மதிப்பெண் பெற மாணவர்களுக்கும், இதர வகையில் உதவி செய்திட மன மகிழ்ந்து வழங்கினர்.
கல்லூரி நிறுவன நாளை நினைவு கூறும் வகையில் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களும் இனைந்து
மரக்கன்றுகள் நட்டு அனைவரும் கூட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு விழா இனிதே நிறைவுற்றது.
Published By :
Nesam Media Works,
Karaikal.
Cell : +91 8668103301
email : nesammedia@gmail.com
website : www.nesammedia.com
online Media : www.nesaganam.com
Android App : Nesaganam
FaceBook: people/நேசம் மீடியா ஒர்க்ஸ்
MediaNesam?s=09

Опубликовано:

 

11 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@justinmohanifs282
@justinmohanifs282 9 месяцев назад
அருமை அருமை 👍👍👍
@pradeeps8186
@pradeeps8186 9 месяцев назад
Nice video
@bornagainamina
@bornagainamina 9 месяцев назад
அருமையான பதிவு 👌👏
@anitha3287
@anitha3287 3 месяца назад
Super
@CEADNGO
@CEADNGO 9 месяцев назад
Good memories. ....
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33
Disadvantages of using mobile phone in tamil
9:24
Просмотров 2,2 тыс.
in-service training
1:44
Просмотров 10
16 July 2024
0:48
Просмотров 81
ECI Stanley Tam Matriculation School
4:28
Просмотров 329