Тёмный

வாராரு வாராரு அழகர் வாராரு...மதுரை சித்திரை திருவிழா | Madurai Kallalagar Chithirai Festival 2024 

GPTAMIL VLOGZ
Подписаться 9 тыс.
Просмотров 685
50% 1

#alagarkovil #chithiraifestival #madurai
#madurai #kallalagar #chithiraithiruvizha #MaduraiMeenakshi #Festival #ChithiraiThiruvilaTherottam #TempleFestival #ChithiraiThiruvizha2024 #gptamilvlogz
சித்திரை திருவிழா பற்றிய நமக்கு கிடைத்த பெருமைமிக்க வரலாறு
--------------------------------------------------------------------
கிபி 1650க்கு முன்பு வரை கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.
மதுரை சோழவந்தான் அருகிலுள்ள தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளழகர் எழுந்தருளி வந்தார்.
கிபி 1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ,வைணவ சமயத்தை ஒன்றினைக்கும் விதமாகவும்,நிர்வாக காரணங்களுக்காகவும் மாசி மாதத்தில் நடந்த
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை சித்திரையில் தேனூர் வைகை ஆற்றில் இறங்கிய அழகர் விழாவுடன் இணைத்து சித்திரையில் மதுரைக்கு மாற்றினார்.
அதற்கு முன்பு வரை கள்ளழகர் அழகர்மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர்,கோட்டைமேடு வழியாக சித்திர பௌர்ணமி அன்று தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார்.
அப்படி தேனூர் வரும் அழகரை இப்போது மதுரை வைகை ஆற்றில் இறங்கும் அழகரை கூடலழகபெருமாள் எதிர்கொண்டு வரவேற்பதுபோல அப்போது குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் மன்னாடிமங்கலம்,சோழவந்தான்,திருவேடகம் வழியாக வந்து அழகரை தேனூரில் எதிர்கொண்டு அழைப்பார்.
மேலும் அப்போது அழகர் ஆற்றில் குதிரை வாகனத்தில் இறங்க மாட்டார். ஆயிரம் பொன் சப்பரம் என்று சொல்லக்கூடிய தங்க சப்பரத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்கினார்.
ஆற்றில் இறங்கிய அழகர் ஒருநாள் முழுவதும் ஆற்றுக்குள் இருந்து விட்டு பின்னர் சித்திர பௌர்ணமி மறுநாள் காலை சேஷ வாகனத்தில் தேனூரை வலம் வருவார்.
அதன்பின் தேனூரில் உள்ள திருபாற்கடல் என்னும் இடத்திற்கு சென்று அங்கு கருட சேவைக்கு மாறி மண்டூகமாக (தவளையாக) உள்ள சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார்.
பின்னர் மீண்டும் அலங்காநல்லூர் வழியாக தங்க சப்பரத்தில் அழகர் மலையை அடைந்து வந்துள்ளார்.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@vaishnavecomputers3307
@vaishnavecomputers3307 5 месяцев назад
Superb
@rajathivettaiyan-fy4dp
@rajathivettaiyan-fy4dp 5 месяцев назад
Superp
@PushparajaKoodalGurusamy
@PushparajaKoodalGurusamy 5 месяцев назад
Superb
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 270 тыс.