Тёмный

விவேகானந்தரை சிகாகோ சர்சமத மகாசபைக்கு அனுப்பிவைத்த தமிழர் யார்? 

Swami Vidyananda Tamil
Подписаться 40 тыс.
Просмотров 10 тыс.
50% 1

அடுத்த பிரச்சனை பணம்! நான் அமெரிக்கா செல்வது தேவியின திருவுளமானால் பணத்தையும் அவளே தருவாள் என்று கூறினார் சுவாமிஜி. சாதாரண மனிதர்களிடமிருந்து ம் ஏழைகளிடமிருந்தும் பணம் வசூலிக்கவேண்டும் என்பது சுவாமிஜியின் ஆவலாக இருந்தது. பெரிய மனிதர்கள். பணக்காரர்கள், ஆகியோரிடமிருந்து பணம் பெறவேண்டாம் என்று சுவாமிஜி கூறிவிட்டார். ராமநாதபுர மன்னர் மற்றும் ஓரிரு பணக்காரர்களிடம் பெற்ற அனுபவமே இதற்கு க் காரணமாக இருந்தது. சுவாமிஜி அமெரிக்கா செல்வதானால் முழுப்பொறுப்பையும் தாமே ஏற்றுக் கொள்வதாக ஒரு பணக்காரரும் வாக்களித்திருந்தார். பின்னர் தொடர்பு கொண்டபோது மிகவும் குறைவான தொகை மட்டுமே அளித்தார். இதை அளசிங்கர் சுவாமிஜியிடம் தெரிவித்தபோது சுவாமிஜி சற்று மனம் வருந்தவே செய்தார். இதனால் தான் இனி பணக்காரர்களிடம் போக வேண்டாம் என்று கூறிவிட்டார்.
மார்ச்- ஏப்ரலில் சென்னை அன்பர்கள் சுவாமிஜியின் மேலை நாட்டுப் பயணத்திற்காகப் பணம் வசூலிக்க ஆரம்பித்தனர். அளசிங்க பெருமாளின் தலைமையில் சிலர் ஒன்று சேர்ந்து , ஒரு குழுவாக அமைத்து செயல்பட்டனர். சுவாமிஜியின் சீடர்கள், அன்பர்கள், நண்பர்கள் என்று பலரையும் சந்தித்துப் பணம் கேட்க முடிவு செய்தனர். சுவாமிஜியின் மேலைப் பயணத்திற்கு இளைஞர்களே அதிகம் பணம் திரட்டினர். அதுவம் நடுத்தர மக்களிடையே தான் அதிகமாக அவர்கள் சென்றனர். தேவியின் திருவுளம் அதுவானால் நான் மேலைநாட்டிற்குச்செல்வேன். அதற்கான பணம் சாதாரண மக்களிடமிருந்து வரவேண்டும் ஏனெனில் நான் மேலை நாடுகளுக்குப்போவது சாதாரண மக்களுக்காக, ஏழைகளுக்காக” என்றல்லவா அவர் இளைஞர்களிடம் கூறியிருந்தார்.
அளசிங்கரும் மற்றவர்களும், இரவுபகலாகப் பாடு பட்டனர். வீடு வீடாகச்சென்றனர். சிலர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் பல அவமதிப்புகளுக்கும் ஏச்சுகளுக்கும் பிறகு கொடுத்தனர். அளசிங்கரும் நண்பர்களும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாபெரும் பணி ஒன்றில் தாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை மட்டும் மனத்தில் கொண்டு அவர்கள் பணி செய்தனர். சென்னையில் பணம் வசூலிக்கின்ற பொறுப்பை நண்பர்களிடம் விட்டுவிட்டு அளசிங்கர் பெங்களூர், ராமநாத புரம், ஐதராபாத் போன்ற இடங்களுக்குச்சென்று பணம் வசூலித்து வந்தார்.
சுவாமிஜியும் சிலரைச் சந்தித்து இது விஷயமாக முயற்சி செய்தார். நீதிபதி சர். சுப்பிரமணிய ஐயரை அவர் சென்று சந்தித்தது பற்றி ராமானுஜாச்சாரி எழுதிகிறார். ஒரு நாள் காலையில் சுவாமிஜி கையில் கைத்தடியுடன் கம்பீரமாக மயிலாப்பூர் லஸ் சர்ச்ரோடு வழியாக நிமிர்ந்த பார்வையுடன் சென்று கொண்டிருந்தார்.
அவருக்குப் பின்னால் சுமார் பதினைந்து இருபது இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். ஓர் ஊர்வலம்போல் அவர்கள் சென்றது நீதிபதியைச் சந்தித்து உதவி கோருவதற்காக சுவாமிஜியின் தோற்றமும் ஆளுமையும் ரோட்டில் நின்றிருந்த அனைவரையும் கவர்ந்தன. பலரும் அவருக்குப் பின்னால் நடக்கத்தொடங்கினர். நானும் தான். நீதிபதியின் வீட்டை அடையும்போது ஒரு பெரும் கூட்டமே சுவாமிஜியின் பின்னால் திரண்டிருந்தது. நான் சுவாமிஜியை முதலும் கடைசியுமாகக் கண்டது அந்த ஒரு முறை மட்டுமே.
ஏழைகளையும் பாமரர்களையும் புறக்கணத்ததால் தான் நமது நாடு வீழ்ச்சி கண்டது என்ற உண்மையை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் சுவாமிஜி. நாட்டு முன்னேற்றத்திற்காகச் செய்யப்படுகின்ற எந்தப் பணியும் அவர்களை முன்னேற்றுவதில் தான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அதைக் கருத்தில் கொண்டே பணிகளையும் திட்டமிட்டார். ஏழைகளின் முன்னேற்றத்திற்குப் பணம் திரட்டுவதற்காக வெளிநாடு செல்கிறேன். அதற்குரிய பணத்தை அவர்களிடமிருந்தே பெறுவேன்.என்று அவர்களிடம் பணம் வசூலிக்க விரும்பியவர் அவர். பணம் வசூலித்து முதலில் பெற்ற ரூ.200 -ஐ சுவாமிஜியிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக கடைத்தெருவிற்குச் சென்றார். குழந்தைகளுக்கு மிட்டாய்களும் விளையாட்டுப்பொருட்களும் வாங்கினார். அவற்றைக் கொண்டுபோய் அவர் வாழ்ந்த இடத்திற்கு அருகில் வாழ்ந்த குழந்தைகளுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார்.
குழந்தைகள் எப்போதுமே சுவாமிஜிக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்தனர். அவர்களுக்காக அவர் கதை சொல்வார். வேடிக்கை வினோதங்கள் காட்டுவார். பாலாஜி ராவின் வீட்டில் சிறுவயது மகனுக்காகச் சில மாயாஜாலங்களையும் காட்டினாராம்! கத்தியால் தமது கையை ஓங்கி வெட்டுவார் சுவாமிஜி. ஆனால் அதிலிருந்து ரத்தம் கசியக்கூட செய்யாதாம்! இதைப் பார்த்து குழந்தைகள் சிரித்து மகிழ்வது கண்டு அவரும் களிப்படைவார்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ந்தது. முதலில் மறுத்த ராமநாதபுரம் மன்னர், மற்ற மன்னர்களும் வேறு பலரும் நிதியுதவி செய்வதைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு தாமும் ரூ.500 கொடுத்தார். இவ்வாறு சென்னை அன்பர்கள் ரூ.4, 000 திரட்டினர்.
பெனின்சுலார் என்ற கப்பலில் மே-31, ஆம் நாள் சவாமிஜிக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. 179 பவுண்ட் (ரூ.2685) சுவாமிஜியின் கையில் பணமாகக் கொடுக்கப் பட்டது.
சுவாமிஜியும் மனத்தளவில் தாம் அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத்தொடங்கினார்.

Опубликовано:

 

27 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@duraijothi1313
@duraijothi1313 2 года назад
முற்றிலும் உண்மை
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 2 года назад
🙏❤❤❤❤❤❤❤🙏
@manikandan-kg8iw
@manikandan-kg8iw 3 года назад
நன்றி ஐயா உங்களை வணங்குகிறேன்
@worldwidefriendsorganizati7575
@worldwidefriendsorganizati7575 3 года назад
நிகழ்வு சர்வமத சபை சுவாமிஜி அளித்தது அத்வைத சிந்தனை உரை அதனை நம் முன்னோர்கள் எத்தகைய நுட்பமான வகையில் பண்பாடாக வைத்திருந்தனர் என்பதைப் பற்றி அத்வைதம் என்பது இறைவன் இல்லாத இடம் இல்லை என்பது தான். மிக சிறப்பான சம்பவத்தை அப்படியே அன்றைய காலகட்டத்திற்கு நம்மை அழைத்து சென்றதுபோல் உள்ளது இப்பதிவு. மிக்க நன்றி!👌🎁🙅👏👏👏
@kunahkannan12
@kunahkannan12 3 года назад
Tdy i thank god bcz lord krishna show me a right way to get know about swami vivekananda, even i got intrnet Facility one decade ago i cry my foult .I like to thank lord krishna onece more. Jai Sitaram jai krishna.!!!!!!!.
@arumugampalanisamy5220
@arumugampalanisamy5220 3 года назад
😘
@pornography190
@pornography190 2 года назад
அது தவிர இங்கு எதுவுமே இல்லே இங்கு இருப்பவை எல்லாமே அதுவே
@seeniinn1
@seeniinn1 3 года назад
Great soul
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 года назад
உண்மை எல்லாம் கடவுள் சித்தம்
@sathishkannan2611
@sathishkannan2611 3 года назад
மன்னர் பாஸ்கர சேதுபதி
@swamividyananda
@swamividyananda 3 года назад
முழுவதும் கேளுங்கள்.மன்னர் பாஸ்கர சேதுபதி இல்லை
@puviarasan4250
@puviarasan4250 3 года назад
@@swamividyananda என் குருதேவர் சுவாமி விவேகானந்தரால் , ராஜரிஷி என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட தமிழ் மன்னர் ராமநாதபுர பாஸ்கர சேதுபதி ஐயாவின் திருப்பெருமையை, நீங்கள் தவறாக உருவகபடுத்திய இப்பதிவு எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது... சிவ நெறிக்கும் , தமிழ் க்கும் தன் வாழ்வை அற்பணம் செய்த மாமன்னர் ராமநாதபுர பாஸ்கர சேதுபதி ஐயாவின் திருவரலாரைப்பற்றி உங்களுக்கு தெளிவுப்பெறவேண்டுமானால் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அணுகவும்... வரலாற்றில் பிழை எற்படுத்த கூடாது....நன்றாக விசாரித்து இப்பதிவை திருத்தி அமையுங்கள்..... நன்றி....
@swamividyananda
@swamividyananda 3 года назад
@@puviarasan4250 நான் பேசியது எதுவும் என்னுடைய கருத்து இல்லை. ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்தேன் அவ்வளவுதான்...அரை குறையாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை படிக்காமல் முழுமையாக படிக்கவும்...
@a.snataraj2756
@a.snataraj2756 3 года назад
நுப்பத்தி ஒன்று என்று சொல்லக்கூடாது. “முப்த்தி ஒன்று” என்று சொல்வதுதான் சரி.. இனியாவது தமிழைச் சரியாக உச்சரிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
@swamividyananda
@swamividyananda 3 года назад
நான் இன்னும் படிக்க வேண்டியது ஏராளம் உள்ளது.இந்த வாழ்நாள் போதாது.
@shivally2077
@shivally2077 3 года назад
That's kannada
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 2 года назад
முப்த்தி என்று சொல்லக் கூடாது. முப்பத்தி என்று சொல்லவும். இனியாவது தமிழை நன்றாக கற்கவும்.
@kummutha
@kummutha 3 года назад
அருமையான சொற்பொழிவு தான். அது என்ன 'தென்னாட்டு மன்னர்கள் ராஜ புத்திரர்கள் அல்ல' 'தென்னாட்டு மன்னர்கள் வாக்கை காப்பாற்ற மாட்டார்கள்/காப்பாற்றுவார்களா?' உண்மையிலேயே இவற்றை சுவாமிஜி தான் சொன்னார்களா? ஒருவர் செய்த பிழையை ஒரு சமுதாயத்தின் மீதே ஏற்றிச் சொல்வது நியாயம் இல்லையே! சுவாமிஜியை தமிழர்கள் சேர்ந்து பணம் திரட்டி சிக்காக்கோ அனுப்பினாலும் திரும்பி வந்த அவர் என் இன மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் (I got it from another source) என்று வங்காளம் திரும்பினாரே அது எதற்காக? மன்னிக்க வேண்டும். நான் ராமகிருஷ்ண பரமஹம்சரை மானசீகமாக வணங்குபவள். யாரையும் குறைத்து கூறவில்லை. வருத்தம் தான். ஏன் இந்த தெளிவற்ற போக்கு. இது விவேகானந்தருடையதா அல்லது வாசிப்பவருடையதா. ராஜராஜ சோழன், சிபி சக்கரவர்த்தி, செண்பக பாண்டியன் இப்படி பல பல தமிழ் மன்னர்கள் பெருந்தன்மையோடு வாழ்ந்த இனம் தமிழ் இனம். உங்கள் கருத்து மிக மிக தவறு சுவாமிஜி. வேதனை! வேதனை! வேதனை!
@swamividyananda
@swamividyananda 3 года назад
சுவாமி விவேகானந்தரது காலத்தில் அரசர்கள் அனைவரும் பிரிட்டிஷ்காரர்களின் அடிமைகளாக இருந்தார்கள்.அப்போது நாட்டை ஆட்சி செய்தது அரசர்கள் அல்ல,திவான்களே. அரசர்கள் வேட்டையாடி பொழுதை போக்கிக்கொண்டிருந்தார்கள். தென்னாட்டில் உள்ள அரசர்கள் அனைவரும் அந்த காலத்தில் உயிருக்கு பயந்தே வாழ்ந்தார்கள். சுவாமி விவேகானந்தருக்கு முதலில் உதவி செய்வதாக ராமநாதபுரம் மன்னர் வாக்களித்திருந்தார் பின்னர் சுவாமிஜிக்கு உதவினால் பிரிட்டிஷ்காரர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம் என்று அஞ்சி பின்வாங்கினார்...மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்..
@puviarasan4250
@puviarasan4250 3 года назад
@@swamividyananda என் குருதேவர் சுவாமி விவேகானந்தரால் , ராஜரிஷி என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட தமிழ் மன்னர் ராமநாதபுர பாஸ்கர சேதுபதி ஐயாவின் திருப்பெருமையை, நீங்கள் தவறாக உருவகபடுத்திய இப்பதிவு எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது... சிவ நெறிக்கும் , தமிழ் க்கும் தன் வாழ்வை அற்பணம் செய்த மாமன்னர் ராமநாதபுர பாஸ்கர சேதுபதி ஐயாவின் திருவரலாரைப்பற்றி உங்களுக்கு தெளிவுப்பெறவேண்டுமானால் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அணுகவும்... வரலாற்றில் பிழை எற்படுத்த கூடாது....நன்றாக விசாரித்து இப்பதிவை திருத்தி அமையுங்கள்..... நன்றி....
@puviarasan4250
@puviarasan4250 3 года назад
@@swamividyananda தென்னாட்டில் உள்ள மன்னர்கள், அரசர்களைப் பற்றி கூறும் போது ஆழ்ந்த கவனம் தேவை.....
@swamividyananda
@swamividyananda 3 года назад
@@puviarasan4250 ஆழ்ந்த கவனம் தேவை என்றால் என்ன அர்த்தம்? நீயும் சற்று கவனமாகவே இரு...சிகாகோ செல்வதற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் கடிதம் மூலம் தெரிவித்தார். ..சுவாமி சிகாகோவில் பிரபலமானபிறகு மன்னரின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. மன்னர் சுவாமி விவேகானந்தரின் சீடனானார்..விவேகானந்தர் அவரை ராஜரிஜி என்று அழைத்தார். அவைகள் எல்லாம் பிற்காலத்தில் நிகழ்ந்தது...1893 ல் நடந்த நிகழ்வு பற்றி மட்டுமே அதில் பேசியிருக்கிறேன். மேலும் நான் பேசியது எதுவும் என்னுடைய கருத்து இல்லை. ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்தேன் அவ்வளவுதான்...அரை குறையாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை படித்துக்கொண்டு என்னை கவனமாக பேசும்படி எச்சரிக்கும் முட்டளே நீ கவனமாக இரு...
@puviarasan4250
@puviarasan4250 3 года назад
@@swamividyananda ஐயா உங்களின் கடைசி வரி உங்களின் உயர்ந்த ஆன்மீகத்தையும் அமைதியையும் காமிக்கின்றது கவனத்தேவையை இறைவன் அறிவிப்பான்.
Далее