Тёмный

வீரப்பன் இல்லாத காடு I யானைத் தந்தம் பிடிபடுவது எப்படி I அன்புராஜ் பேட்டி  

kadhaivattam TAMIL
Подписаться 206 тыс.
Просмотров 77 тыс.
50% 1

#veerappanforest #veerapanlife #veerappan #anburaj #trible #elephent #ivory #moolakaadu
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஐந்திணை என்கிற இயற்கை வேளாண் விற்பனை நிலையம் நடத்தி வரும் அன்புராஜ் நமக்கு பல்வேறு பேட்டிகளில் ஏற்கனவே அறிமுகமானவர்.
வீரப்பனுடன் பல வருடம் வாழ்ந்து போலீஸில் சரண்டராகி, ஆயுள் தண்டனை பெற்று மைசூர் சிறையில் இருந்தவர். சிறையிலேயே நாடகப்பட்டறை ஒன்றை நடத்தி கர்நாடக மந்திரிகள் முன்னிலையில் நடத்தி சிறந்த கலைஞராகவும் உருவெடுத்தார்.
இவரின் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். சிறையிலேயே காதல் மலர்ந்து தனக்கு ஒரு இல்லத்துணையை ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் வாழ்க்கை முழுக்க தற்போது ஒரு பக்கம் பழங்குடி மக்களுக்கான இயக்கமாகவே நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நீண்டகாலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்யவும் இயக்க ரீதியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
வீரப்பன் இறந்து 18 ஆண்டுகள் கடந்தும் இ்ன்னமும் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பழங்குடி மக்களுக்கு உதவிகள் செய்வதோடு, அவர்களின் மேம்பாட்டுக்கும் பாடுபட்டு வருகிறார்.
அப்படியானவரிடம் வீரப்பன் சமாதி இருக்கும் மூலக்காடு குறித்தும், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும், அவர்கள் மேம்பாட்டுக்கு என்ன செய்யலாம் ; வீரப்பன் இல்லாத காடுகள் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றியெல்லாம், ‘வீரப்பன் கிராமங்கள் இப்போது எப்படியிருக்கு?’ என்ற தொடருக்காக ஒரு பேட்டி கண்டோம். அதன் காணொலி வடிவம் இங்கே.
வீரப்பன் கிராமங்கள் இப்போது எப்படியிருக்கு? முந்தைய பகுதிகள்:
பகுதி: 1- லிங்க்: • வீரப்பன் சமாதியில் போல...
பகுதி: 2. லிங்க்: • #veerappan #stf #vee...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
Далее