Тёмный

வேல மரப்பட்டை கரைசலை ஏன் பயன்படுத்த வேண்டும்? Brittoraj 9944450552 

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Просмотров 19 тыс.
50% 1

#நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
கருவேல மரப்பட்டை கரைசல்
செய்முறை
10 லிட்டர் கோமியம்
3 கிலோ கருவேல மரப்பட்டை
100 கிராம் கடுக்காய் பொடி
பத்து லிட்டர் கோமியத்துடன் 3 கிலோ சிறிதாக நறுக்கப்பட்ட கருவேல மரப்பட்டை ஊறவைத்து அதனுடன் 100 கிராம் கடுக்காய் பொடி சேர்த்து குறைந்த பட்சம் ஒரு வாரம் ஊற வைத்த பின்பு அதனை சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்.
பத்து லிட்டர் தண்ணீருடன் அரை லிட்டர் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.
வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
1. வெள்ளை வேல மரப்பட்டை - 10 கிலோ
2. நாட்டு சர்க்கரை - 15 கிலோ
3. தென்னைக்குறும்பை - 5 கிலோ
4. கடுக்காய் -250 கிராம்
5. கொடி பிரண்டை - 2 கிலோ
6. கறுப்பு பன்னீர் திராட்சை - 1கிலோ
7. தண்ணீர் - 15 லிட்டர்
8. வாழைப்பழம் -10
9. வைக்கோல் - 1கிலோ
10. பிளாஸ்டிக் டிரம்(200லி) -1
செய்முறை
50 லிட்டர் தண்ணீரில் ஊற்றப்பட்ட டிரம்மில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட வேல மரப்பட்டை, இரண்டாக உடைக்கப்பட்ட தென்னம் குறும்பைகள், நாட்டு சர்க்கரை, நறுக்கப்பட்ட பிரண்டை, பொடியாக அரைக்கப்பட்ட கடுக்காய்ப் பொடியை ஒன்றாகப் போட்டு கலக்க வேண்டும். தோலுடன் உரித்து வாழைப்பழம், திராட்சை மற்றும் வைக்கோலையும் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும்.
காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து 15 நாட்கள் கலக்கி வர வேண்டும். பின்பு 16 ஆம் நாள் டிரம்மின் முழுக் கொள்ளளவு வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 17 ஆம் நாள் முதல் இக்கரைசலை பயன்படுத்தலாம்.
டிரம்மின் வாய்ப்பகுதியை ஈக்கள் , கொசுக்கள் செல்ல முடியாதவாறு சாக்கு அல்லது துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும்.
இக்கரைசலை 1 வருடம் வரை தினம் தோறும் இருவேளைகள் கலக்கி பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களிலும் பாதி அளவு மட்டும் எடுத்து 100 லிட்டர் அளவுக்கு தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
10லி தண்ணீரில் 100 மி.லி கலந்து இலைகள் மீது தெளிக்கலாம்.
பயன்கள்
தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம். பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய் உட்பட, பூச்சி, புழுக் கட்டுப்பாட்டிற்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம்.
மாதம் இரண்டு முறை தெளிக்கலாம்.
அன்புடன்
JPS @பழனிச்சாமி
Resource Person
+91 9788324448
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Telegram Groups

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@rainbowtalkies6902
@rainbowtalkies6902 3 года назад
வாழ்க வளமுடன் உங்கள் சேவை
@baskarbaskar6327
@baskarbaskar6327 Год назад
கரைசல் தயாரிக்க பிரண்டை நாட்டுசக்கரை குரும்பை திராட்சை வைக்கோல் வேல மர பட்டை தண்ணீர் இவற்றின் அளவு என்ன ஐயா
@selvakani1976
@selvakani1976 3 года назад
நன்றி சார் உபயோகரமான பதிவு
@prakashrambo2460
@prakashrambo2460 3 года назад
Nandri JPS Anna &Brito Raj sir
@பழைமைவிவசாயிகள்
மாவு பூச்சிகளை கட்டுபடுதுதுமா? ஐயா
@prakashrambo2460
@prakashrambo2460 3 года назад
Ennoda thottam ku payanpaduthi iruka palan nandra ka ulla thu sir
@prakashrambo2460
@prakashrambo2460 3 года назад
Nandri sir prakash tirupur
@sivasivapraksamd2495
@sivasivapraksamd2495 3 года назад
கரு வேல் மற்றும் வெள் வேல் இலைக்கு பதிலாக ஓதிய மரப்பட்டை பயன்படுத்தலாமா .........
@desingup558
@desingup558 11 месяцев назад
வெல்ல வேளம்பட்டை எது.தயவு செய்து கூறுங்கள்
@neermelanmai
@neermelanmai 10 месяцев назад
படத்தில் காட்டியுள்ள மரம் ஐயா
@nsubramanian7176
@nsubramanian7176 3 года назад
Tharipu yeapadi
@naturalfood366
@naturalfood366 3 года назад
அய்யா வணக்கம் ,வறும் ஆடி பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யலாமா ஆடி பட்டம்என்பது மழைக்காலம் தொடங்கும் காலம் சின்ன வெங்காயத்திர்க்கு ஏற்ற காலமா .வெங்காயத்தின் நடவு முறை எப்படி செய்யவேண்டும் அய்யா.
@deverdever3036
@deverdever3036 2 года назад
அய்யா வெள்ளை வேல மர பட்ட கரைசலை ரோஜா செடிக்கு பயன் படுத்தலாமா
@DeltaOrganicpbg
@DeltaOrganicpbg Год назад
allcrops
@ramramramram4947
@ramramramram4947 3 года назад
கடைகளில் கிடைக்குமா சார்
@subramani9249
@subramani9249 Год назад
மல்லிகை செடிக்கு பயன்படுத்தலமா
@DeltaOrganicpbg
@DeltaOrganicpbg Год назад
yes all crops
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 3,3 млн