Тёмный

💧Health Tips | How much water should drink Per Day | தமிழ் மயில் 

தமிழ் மயில்
Подписаться 6 тыс.
Просмотров 117
50% 1

Health Tips | How much water should drink Per Day | Awareness About Water | தமிழ் மயில்
அதிகமாக தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? ஆபத்து !- மருத்துவர்கள் எச்சரிக்கை !
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
யார் யார் எவ்வளவு லிட்டர் நீர் குடிக்கலாம் ?
கைக்குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மூலமாகவே உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தைக்கு போதுமான குடிநீரை தரவேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படாது. தாய்மார்கள் அவ்வப்போது தண்ணீர் கொடுத்துப் பழக்க வேண்டும்.
3-6 வயதுள்ள குழந்தைகளுக்கு, அவர்களது தேவைக்கு ஏற்ப அவ்வபோது குடிநீரை குடிக்க சொல்லி பழக்க படுத்தலாம்.
வளரும் குழந்தைகளின் உடலுக்குத் தண்ணீரை உறிஞ்சும் சக்தி அதிகம். 6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறுவர் / சிறுமியர் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், டிரெயினரின் வழிகாட்டுதலின் படி ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
வயதாக ஆக, பசி, தாகம் ஏற்படும் உணர்வு குறையும். வெயில் காலங்களில் வயதானவர்கள் கண்டிப்பாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் தாகம் எடுக்கும் உணர்வு அவ்வளவாக இருக்காது. அவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரக செயல்இழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் தண்ணீர் அதிகம் அருந்தக்கூடாது. சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதால், தண்ணீர் வெளியேறாமல், நுரையீரல், கால் என உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, மருத்துவர் பரிந்துரையின் பேரில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்குச் சிறுநீர் அதிகமாகப் பிரியும். சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 800 - 900 மி.லி அளவே இருக்கும். அதனால், இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. இரவில் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால், தூக்கம் தடைப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று இல்லை... சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் ஆகியவற்றைக் குடிக்கலாம். கார்பனேட்டட் பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். திராட்சை ஜூஸ், மாம்பழ ஜூஸ் போன்றவற்றை அளவுடன் சேர்க்கலாம். ஜூஸைவிட பழங்களாக சேர்த்து கொள்வது பெஸ்ட்.
சிறுநீரகம், சிறுநீர்ப்பைக் கற்கள் பாதிப்பு உள்ளவர்கள், கட்டாயம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெயிலில் அலைந்து திரியும் பணியில் உள்ளவர்கள், தண்ணீர் குடிக்காமல் இருந்தால் தலைசுற்றல், மயக்கம், கல்லீரல் வீக்கம், கால் வீக்கம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
#HealthTips #Water #தமிழ்மயில் #தண்ணீர்
Thanks for watching....
Please Subscribe the Channel for More Videos:
/ @sugunauthayakumar
Twitter@SugunaUthayakumar
/ sugunauthayaku1
E-mail: tamilmayil99@gmail.com
Regards,
#SugunaUthayakumar
Media Partner : © 2019 தமிழ் மயில் (Tamil Peacock)

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
Далее