Тёмный
No video :(

04.009 திருஅங்கமாலை திருப்பதிகம் | திருப்பூந்துருத்தி | தலையே நீ வணங்காய் | திருநாவுக்கரசு சுவாமிகள் 

Panniru Thirumurai
Подписаться 28 тыс.
Просмотров 28 тыс.
50% 1

04.009 திருஅங்கமாலை திருப்பதிகம் | தலையே நீ வணங்காய் | திருநாவுக்கரசு சுவாமிகள்
#Thirupoonthuruthi | #PushpavaneswararTemple | #ThirunavukarasarPathigam
சோழ நாட்டில் பல தலங்கள் சென்று உழவாரப் பணி செய்த அப்பர் பிரான் பூந்துருத்தி தலம் வந்தடைந்த போது அங்கே ஒரு மடத்தினை நிறுவி, அதிகமான நாட்கள் அங்கே தங்கி உழவாரப் பணி புரிந்தார். அப்போது பல பதிகங்கள் பாடினார். அத்தகைய பாடல்களில் ஒன்று தான், அங்கமாலை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். உடலின் உள்ள உறுப்புகளை எவ்வாறு நல்வழிப்படுத்தி இறை பணியில் ஈடுபடுத்துவது என்பதை கூறுவதால், இந்த பதிகத்திற்கு அங்கமாலை என்ற பெயர் வந்தது.
உயிர் தனது வினைகளைத் தானே கழித்துக் கொள்ள முடியாததால், தான் சார்ந்துள்ள உடலிலுள்ள கருவிகளை இறைப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் வினைகளை கழிக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு வினைகளைக் கழிப்பதன் மூலம் உயிர் நல்வழிக்குச் செல்ல இயலும் என்பதால், உடலிலுள்ள கருவிகள் செய்யவேண்டிய செயல்களை எடுத்துரைக்கும் இந்த பதிகத்தினை சேக்கிழார், "நற்கதிக்கு வழிகாட்டும் பதிகம்" என்று பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சௌந்தரநாயகி
திருமுறை : நான்காம் திருமுறை 009 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார்
திருக்கோயிலை வலம் வரும் சமயத்தில் சொல்லக்கூடிய பதிகமாக கருதப்படுகின்றது. உயிர்கள் தங்களுடன் பிணைந்த வினைகளைக் கழிப்பதற்காக, இறைவன் உயிரினை உடலுடன் பொருத்தி, வினைகளைக் கழிக்கும் முயற்சியில் உதவுதற்காக கருவி கரணங்களையும் அளிக்கின்றான். அத்தகைய கருவி கரணங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, சிவபெருமான் தான் உண்மையான் மெய்ப்பொருள் என்று அறிந்துகொண்டு உலக மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும்.
அதற்காக நாம் இறை வழிபாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த வழிமுறைகளைச் சொல்லும் பதிகம் என்பதால், முக்திக்கு வழிகாட்டும் பதிகமாக இந்த பதிகம் கருதப்படுகின்றது. தினமும் சொல்ல வேண்டிய பதிகங்களில் ஒன்றாக பெரியோர்களால் இந்த பதிகம் கருதப்படுகின்றது.
தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய். ..... (01)
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சு உண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னைக்
கண்காள் காண்மின்களோ. ..... (02)
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ. ..... (03)
மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய். ..... (04)
வாயே வாழ்த்துக் கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய். ..... (05)
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய். ..... (06)
கைகாள் கூப்பித் தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர். ..... (07)
ஆக்கையால் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையால் பயன் என். ..... (08)
கால்களால் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயன் என். ..... (09)
உற்றார் ஆர் உளரோ - உயிர்
கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆர் உளரோ. ..... (10)
இறுமாந்து இருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் கீழ்ச்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ. ..... (11)
தேடிக் கண்டு கொண்டேன்
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை
என்னுளே தேடிக் கண்டு கொண்டேன். ..... (12)
பதிகப் பலன் : திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி, அவன் என் நெஞ்சத்தினுள்ளே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@VijayKumar-uz1nq
@VijayKumar-uz1nq 3 месяца назад
சிவாயநம 🙏🙏🙏
@yogarajanithi6517
@yogarajanithi6517 Месяц назад
ஓம் சிவ சிவ ஓம்
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 Месяц назад
ஓம் நமச்சிவாய 🙏
@jayaramanpn6516
@jayaramanpn6516 Год назад
இனிமை.கோயில் வலம் வந்து கேட்பது போல் உள்ளது.பிறவிப்பயன்.சிவசிவ.உலகத்தை காப்பாற்றுங்கள் மகாதேவா
@user-vl3yo1du9q
@user-vl3yo1du9q 4 года назад
கேவலம், சகலம், சுத்தம் இம்மூன்று நிலைகளிலும் உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ. ..... சிவாய நம
@nagarajanrajan8342
@nagarajanrajan8342 5 месяцев назад
அற்புதமான திருமுறை அபாரமான குரல்வளம் நன்றி அய்யா..
@vijayalakshmichidambaram478
@vijayalakshmichidambaram478 2 года назад
🙏🙏🙏 சிவாய நம 🙏🙏🙏🙏🙏 அருமை 🙏🌹🙏நன்றி ஐயா 🙏🙏🙏
@jayalakshmipalanisamy4723
@jayalakshmipalanisamy4723 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@sowmya7648
@sowmya7648 3 года назад
அருமை! மிக்க நன்றி 🙏🏽🙏🏽
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 Год назад
திருஅங்கமாலை திருப்பதிகம் சிவ மகேஸ்வர ஓதுவார் குரலில் கேட்பதற்கு அற்புதமாக உள்ளது நன்றி ஓம் நமசிவாய
@balasupramaniam9979
@balasupramaniam9979 9 месяцев назад
ஓம் நமசிவாய ஓம்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@arunadevi6443
@arunadevi6443 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
ஓம் நமசிவாய🙏
@SundarKumar-ix6fy
@SundarKumar-ix6fy 10 месяцев назад
திருச்சிற்றம்பலம்
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Год назад
ஓம் நமச்சிவாயம்.
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Год назад
Om namah shivaya potri potri.
@venivelu5183
@venivelu5183 2 года назад
Om namasivaya🙏🙏🌼🌼
Далее
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 15 млн
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 15 млн