Тёмный
No video :(

5 ஜீவசமாதிகள் திருப்போரூர் கோயில் அருகில் ||Tiruporur temple near 5 Jeevasamadhi 

Sithan pokku
Подписаться 43 тыс.
Просмотров 1,4 тыс.
50% 1

#tiruporur #tiruvannamalai #chidamabaraswamigal #sithanpokku #tiruvannamalai #siddhargal #சதுரகிரி
#deepam
Contact - sithanpokku786@gmail.com
Thiruporur Arulmigu Kanthasamy Temple
g.co/kgs/pm5aXW
Thiruporur Arulmigu Kanthasamy Temple
044 2744 6226
Kailasanathar Temple Thiruporur
g.co/kgs/WtkkRT
Sri Chidambara Swamigal Sammadhi
Map link
g.co/kgs/yNMMbV
கோபால் சுவாமிகள் ஜுவசமாதி
Map link
g.co/kgs/h6Prkr
சென்னைக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். சுமார் 700 வருடப் பழைமையான ஆலயம் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது.
அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார். சிதம்பரசுவாமிகளும் வந்து முருகக் கடவுளைத் தரிசித்திருக்கிறார்.
தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300&க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.
முருகனுக்கு அப்பனுக்கே பாடம் சொன்னவன் என்றும் ஞானகுரு என்றும் பெயர்கள் உண்டு. திருப்போரூர் முருகப்பெருமான், மற்ற தலங்களைப் போல் அல்லாமல், ஸ்ரீபிரம்மாவுக்கு உரிய அட்சமாலையை கையில் ஏந்தியபடி, திருமாலைப் போல இடது கரத்தை தொடையில் வைத்தபடி சிவனாருக்கே உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாத் திகழ்கிறார்.
பிரளயத்தால் ஆறு முறை அழிவைச் சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்டதாம் இந்தக் கோயில். அதுவே இன்றளவும் நிலைத்து, கம்பீரத்துடன் காட்சி தருகிறது!
ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளது.
எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..
திருத்தணி, சுவாமிமலை தலங்களில் முருகக்கடவுளின் சந்நிதிக்கு எதிரில் ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல், மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், வள்ளி தெய்வானைக்கு திருப்போரூர் திருத்தலத்தில் தனித்தனி சந்நிதி அமைந்துள்ளதும் வேறெங்கும் காண்பதற்கு அரிதான சிறப்பு!
முருகன் சந்நிதியின் கோஷ்டப்பகுதியில், பிரம்ம சாஸ்தா எனும் வடிவம் வைக்கப்பட்டு உள்ளது. இதை முருகனின் இன்னொரு வடிவம் என்று போற்றப்படுகின்றனர்.
திருப்போரூர் ஆலயத்தில், நவக்கிரக சந்நிதி இல்லை. மாறாக, கந்தஸ்வாமியைத் தரிசித்தாலே சகல கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்!
வைகாசி விசாகமும் தைப்பூசத் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. விசாக விழாவில், சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும் தைப்பூசத் திருவிழாவின் போது தெப்போத்ஸவமும் சிறப்புற நடைபெறும்!
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்கு உள்ள அம்மனை வழிபடுகின்றனர். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், வேண்டியது விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இங்குள்ள சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை செய்தும், அபிஷேகம் செய்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஸ்ரீமுருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுகின்றனர் பக்தர்கள். பிரணவ மந்திரப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகவே தினந்தோறும் காட்சி தருகிறார்.
கோயிலுக்கு அருகிலுள்ள சிறு குன்றில் கயிலாசநாதர், பாலாம்பிகை அம்பாள் கோயில்கள் உள்ளன. முன்பு, முருகன் சிலை மட்டும் இருந்தது. பின்னர் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர்.
சிவாலயங்களில் அம்பாளுக்கும் பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் நவராத்திரி விழா சிறப்புற நடைபெறும். உமையவளின் மருமகள்களான வள்ளி தெய்வானைக்கும் நவராத்திரி விழா இங்கே கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும்.

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@jeethurit6708
@jeethurit6708 7 месяцев назад
ஓம் சிதம்பரதேவ போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@Sithanpokku
@Sithanpokku 7 месяцев назад
திருவண்ணாமலை சாதக்களின் சொர்க்க பூமி #siddhargal #livingsiddhars #tiruvannamalai #sathuragiri #sadhus #annamalayar #deepam #திருவண்ணாமலை ரகசியம் அனுபம் பற்றிய வீடியோ. திருவண்ணாமலை ரகசியத்தைப் பற்றி திருவண்ணாமலை பற்றிய #சாதுக்களின் Reach us: Sithanpokku786@gmail.com Instagarm : instagram.com/sithan_pokku?igsh=MWtoaWFzN2RqenFuOA%3D%3D& Facebook page: facebook.com/profile.php?id=100076001142884&mibextid=LQQJ4d ---11------------ Sadhu Nagaraj : 9840563445 Address : Sivandyar Sadhukal trust Anjeneyar layout , tiruvannamalai Landmark - Near Nithyanada pedam . சாதுக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு சிவனடியார் sirhan pokku facebook link: facebook.com/groups/197925291543690/?ref=share Tiruvannamalai 2021 videos திருவண்ணாமலை பற்றிய சாதுக்களின் அனுபவம் -4||Tiruvannamalai sadhus life - part 4. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cdZ8V-2XXrE.html திருவண்ணாமலை பற்றிய சாதுக்களின் அனுபவம் -3||Tiruvannamalai sadhus life - part 3 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rqGIRJWbXb8.html திருவண்ணாமலை சாதுக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு சிவனடியார்||Tiruvannamalai ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mQYU9JLTxv8.html திருவண்ணாமலையும் அதன் தெரியாத அதிசயமும்||Tiruvannamalai unknown facts ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s5bMVj058rE.html திருவண்ணாமலை சாதுக்களுக்கு தானம் செய்த அடியார்களுக்கு நன்றி||Tiruvannamalai sadhus ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kiDml_KDsUg.html திருவண்ணாமலையில் முகம் தெரியாத ஒருவர் நம்மிடம் ஞானி போல் பேசிய காட்சி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-l5FoCvAwB34.html Part 1 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3Evv2uj7Pf4.html Part 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M7Nk1GDt8B4.html Part 3 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rqGIRJWbXb8.html Part 4 திருவண்ணாமலை சாதுக்களுக்கு தானம் செய்த அடியார்களுக்கு நன்றி||Tiruvannamalai sadhus ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kiDml_KDsUg.html
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 месяцев назад
சிவாய நம🙏🙏🙏🙏🌹🌹
@Sithanpokku
@Sithanpokku 8 месяцев назад
ஓம் நமசிவாய
@vigneshudayakumar8998
@vigneshudayakumar8998 8 месяцев назад
Om namashivaya🙏
@Sithanpokku
@Sithanpokku 8 месяцев назад
Om namashivaya
@venkatraamanloganathan4173
@venkatraamanloganathan4173 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 8 месяцев назад
ஓம் நமசிவாய
@Sithanpokku
@Sithanpokku 8 месяцев назад
ஓம் நமசிவாய
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 7 месяцев назад
Velaikara sidhar living near kailasanathar temple. But you hv not covered.
@Sithanpokku
@Sithanpokku 7 месяцев назад
May I know address
@salamseksalamsek7642
@salamseksalamsek7642 3 месяца назад
He died. Yesterday sir 14-5-24
Далее