Тёмный
No video :(

Day 3 மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரைத்திருவிழா || சுவாமி கைலாச பர்வத வாகனம் அம்பாள் காமதேனு வாகனம் 

Muthamil Creative Corner
Подписаться 1,4 тыс.
Просмотров 15
50% 1

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இன்று சித்திரை திருவிழா மூன்றாம் நாள்
மதுரை சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவில் இன்று காலை 8 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் கோயிலுக்குள் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் கைலாச பர்வதம் -காமதேனு வாகனங்களில் திருவீதியுலா.
திருவிழாத் தத்துவமும் பலனும்
மூன்றாம் நாள் திருவிழா, மூவினையும், முப்புத்தியும், முக்குணமும், மும்மலமும், முப்பிறப்பும், முக்குற்றமும், முப்பற்றும் ஆனவற்றை ஒழித்தற் பொருட்டாகும்.
கைலாச பர்வத வாகனம்:
மூன்றாம் நாள் இரவு, இராவணனது உடம்பின் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழுந்தருளுகிறார்
துன்பம் தருபவர்களுக்கும் இன்பம் அளிக்கும் சுந்தரேஸ்வரர் இன்று பவனி வரும் போது, நாம் பிறருக்கு துன்பம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்பை வேண்டலாம். அந்தக் கருணைக்கடல் நம்மை ஆட்கொள்வார் இராவணான், ஆணவ மலம் முதிர்ந்த ஜீவாத்மா. அகங்காரத்தால் எதுவும் செய்யக் கூசாதவன், அவன் தனது திமிரால் கைலாச பர்வதத்தைத் தூக்கி எடுக்க, சிவபெருமான் கால்விரலை ஊன்ற, அவன் அலறிக் கை நரம்பால் வீணை உண்டாக்கி சாமகானம் பாடினார். இறைவன் மகிழ்ந்து அவனுக்கு அருள்புரிந்தார். இது ஸ்திதி அல்லது காப்பாற்றுதலைக் குறிக்கும். இதிலிருந்து இறைவனுக்குத் தீங்கு செய்தவர்களும், அடங்கி நின்று வழிபடுவாராயின், அவர்தமக்கும் இறைவன் அருள்புரிவான் என்பதும், இறைவனது பெருந்தகைமையும் நன்கு விளங்கும்.உடல் பலம், செல்வ வளம் இவற்றின் காரணமாக மனிதன் ஆணவம் கொள்கிறான். அதைப் போக்க சிவன் கைலாய பர்வத வாகனத்தில் பவனி வருகிறார். இவரைத் தரிசித்தால் ஆணவம் விலகி நல்ல புத்தி உண்டாகும்.
காமதேனு வாகனம்:
அன்னை மீனாட்சியோ கருணைக் கடல். தன் பிள்ளைகள் தவறு செய்பவர்களாயினும், அவர்களையும் மன்னித்து ஏதேனும் ஒரு வகையில் படியளக்கும்படி சுந்தரேஸ்வரரை துாண்டுபவள். தேவலோகத்திலுள்ள பசு காமதேனு. கேட்டதை வழங்கும் தன்மை கொண்டது. பால் சுரந்து பசி தீர்க்கும் பசு போல, மீனாட்சியும் நமக்கு வேண்டும் வரம் அளிக்க காமதேனுவில் பவனி வருகிறாள். அவளிடம் அருளும், பொருளும் வேண்ட மாசி வீதிகளுக்கு இரவு 7 மணிக்கு செல்வோம்.
#madurai
#viral
#trending

Опубликовано:

 

13 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
ஏன் தெரியுமா?🤔🤔
45:17
Tanish holatmi?😅❤️
00:41
Просмотров 329 тыс.
Tanish holatmi?😅❤️
00:41
Просмотров 329 тыс.