ஜெகதீஸ்வரன் என்ற பரமேஸ்வரன் புகழ் பாடிய அழகு ராணி அஞ்சலி தேவி.. சுசீலாவின் இனிமைக்கு இனிமை சேர்க்கும் அந்த கன்னியர் தந்த கோரஸ்.. இரண்டாவது சரணத்தை வான் மழுவாட.. மானாட மயிலாட.. வண்டாட .. மங்கையருடன் சேர்ந்து ஆடும் இந்திரலோக தேவதையாக ஆடிய அஞ்சலி தேவியின் அழகான நளினம்... ஆதி நாராயண ராவ் இனிய குழலோசைக்கு வானிலகிலுருந்து மண்ணுலகில் நீராட வந்த அழகிகள்...
மண்ணச்சநல்லூர் ஸ்ரீ முருகன் தியேட்டரில் இந்தப் பாடல் தினமும் ஒலிபரப்பாகும்.இந்தப் பாடல் நின்று விட்டால் தியேட்டரில் திரைப்படம் ஆரம்பமாகி விட்டது என்று பொருள்.