நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைச்சவரே 1. அன்பாய் இருப்பேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டுப் போவார்கள் அன்பு தருபவரும் நீர்தான் ஐயா உம்மை அன்றி எனக்கு யார் ஐயா 2. உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் உதவி செய்பவரும் நீர்தான் ஐயா உம்மை அன்றி எனக்கு யார் ஐயா 3. உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா உம்மை அன்றி எனக்கு யார் ஐயா