Тёмный
No video :(

Vaccination and Vaccination Card - தடுப்பூசி மற்றும் தடுப்பூசி அட்டைகுழந்தைக்கு மிகவும் அவசியம் 

Dr A.Mahalingam A
Подписаться 477
Просмотров 921
50% 1

தடுப்பூசி மற்றும் தடுப்பூசி அட்டை
குழந்தைக்கு மிகவும் அவசியம்
Vaccination and vaccination card is very important for the child
குழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி, பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும். பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் கூடாது.. பெற்றோராகிய நம்முடைய மிகப் பெரிய பொறுப்பு... உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது மட்டும்தான்.
இந்திய அரசின் சுகாதாரத் துறை, குழந்தை பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவற்றுடன் பெற்றோரின் விருப்பத்தின் பெயரில் போடக்கூடிய புதிய தடுப்பூசிகளையும் சேர்த்து, 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (IAP) ஒரு அட்டவணையைப் பரிந்துரைக்கிறது. இதில் பெரும்பாலான ஊசிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இலவசமாகவே போடப்படுகின்றன.
சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டால் உங்கள் குழந்தையை இறப்பு மட்டுமல்ல தடுக்கக்கூடிய போலியோ, டெட்டனஸ், தட்டம்மை, வறட்டு இருமல் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காப்பாற்றலாம். இந்த தடுப்பூசிகள் அந்த நோயின் ஆன்டிஜென்களில் இருந்து செய்யப்பட்டவை இவை உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டி அந்த நோயிற்கு எதிராக வேலை செய்யும். தொடர்ச்சியாக, உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டி உங்கள் குழந்தையை உயிர் கொல்லி நோய்களிடமிருந்து பாதுகாக்கும்.
பச்சிளங் குழந்தைக்கு தடுப்பூசிபோடுவது மூலம் அவர்களை மட்டும் கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களை சுற்றி உள்ள நண்பர்களையும் பாதுகாக்கிறது. இது உங்கள் எதிர்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும்.
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அட்டவணை
சீரான முறையான ஆராய்ச்சிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட, குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை தடுப்பூசி அட்டையில் இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு தடுப்பூசியும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இடையில் உள்ள இடைவெளி அந்தந்த வயது அல்லது நேரத்திற்கு ஏற்ப குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியின் தேவைக்கு தகுந்தவாறு இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை பச்சிளங் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.
உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையில் உங்கள் குழந்தையின் முழு மருத்தவ பதிவுகளும் இருக்கும். நீங்கள் வேறு மருத்துவமனையோ, நகரமோ அல்லது மாநிலமே மாறினால் கூட, உங்கள் குழந்தையின் தடுப்பூசிகளை தற்போது வரை தடுப்பூசி அட்டையை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
சரியான நேரத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளின் நன்மைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன மற்றும் அதனை பதிவு செய்வது மிக சிறப்பு. உங்கள் குழந்தையின் தடுப்பூசிகளை சரிவர தடுப்பூசி அட்டவணையின் உதவியுடன் தொடருங்கள்.
திருமதி ச.ஜெயலட்சுமி
கிராம சுகாதார செவிலியர்
வெள்ளானூர்(ஆவடி அருகில்)
வில்லிவாக்கம் ஒன்றியம்,சென்னை
இமெயில் முகவரி: vhn.sjayalaksh@gmail.com

Опубликовано:

 

4 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@mithunmithrasettaigal191
@mithunmithrasettaigal191 2 года назад
Super clear cut message
@thilakamsp586
@thilakamsp586 2 года назад
Superb sister
@ammu486
@ammu486 11 месяцев назад
Sister entha car tharamatranga sister eppati vanguvathu
Далее