Тёмный

இந்த 5 புத்தகத்தில் இருந்து படிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள் | Maridhas Answers 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 79 тыс.
50% 1

படிக்கும் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இந்த 5 புத்தகமும் என் பரிந்துரை…
01) A Short History of Nearly Everything. (இது தமிழிலும் கிடைக்கும்)
இந்தப் புத்தகத்தை எழுதிய Bill Bryson தான் எனக்குப் பிடித்த நபர்களில் முக்கியமானவர். புள்ளி விவரங்களில் உள்ளே தான் உண்மை உள்ளன - எண்கள் வெறும் எண்கள் அல்ல அவை ஒரு குணம். அந்தக் குணம் என்ற பண்பு புரிய வேண்டும் என்பதைத் தொட்டு அறிவியல் மீது ஆய்வாளர்கள் மீதும் வரலாற்றின் மீது ஒருவித ஈர்ப்பை உருவாக்கியவர் இவர் தான்.
இந்தப் புத்தகம் அறிவியல் ஆய்வாளர்களைத் தூண்டிவிட்டு இன்று உலகம் இந்தவிதம் இருக்கக் காரண கர்த்தாவாக விளங்கும் முக்கியமான அமைப்பான Royal Society சார்ந்தும் அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகள் சார்ந்தும் கண்டுபிடிப்புகள் சார்ந்தும் அதன் பின்னணி சுவாரசியங்கள் சார்ந்தும் எழுதி இருப்பார். நியூட்டன் தொட்டு ஸ்டிபன் ஹாக்கிங் வரை கடந்த 300ஆண்டுகளில் பல ஆயிரம் திறமையாளர்களை வெளியில் கொண்டுவந்த பெருமை இந்த Royal Societyயை சாரும்.
அனைத்துக் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் இருக்கும் சுவாரசியங்களை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கொடுக்கும். எனக்கு சாதாரணமாக நம் வீட்டில் உள்ள தீ பெட்டியில் ஆரம்பித்து நமது ஜீன்ஸ் பேண்டில் உள்ள ஜிப் வரை கண்டுபிடிப்புகளின் பின்னால் இருக்கும் அந்தச் சுவாரசியமான கதையைத் தெரிந்து கொள்ள ஆர்வம் அதீதமாக உருவாகக் காரணம் Bill Bryson தான். அவரின் தேடல் உங்களையும் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த புத்தகம் பரிந்துரை செய்கிறேன்.
02) அள்ள அள்ளப் பணம் (1,2)
இது சோம. வள்ளியப்பன் அவர்கள் எழுதிய புத்தகம் - பங்குச்சந்தை சார்ந்து நிறுவனங்கள் எப்படி தங்களுக்கு தேவையான நிதியைப் பெறுகின்றன என்பது போன்ற பெரும்பாலான தேடல்களுக்கு இந்தப் புத்தகம் உங்கள் குழந்தைகளுக்கு விடையைக் கொடுக்கும். அறிவியலில் மட்டும் அல்ல ஒவ்வொரு குழந்தைக்கும் பொருளாதார புரிதல் வேண்டும் என்பதால் இந்தப் புத்தகத்தை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
பலர் என்னிடம் எப்படி பங்குச்சந்தை சாந்து தெரிந்து கொள்வது என்று கேட்பது உண்டு. என்னைக் கேட்டால் இந்த இரண்டு புத்தகங்களை கொஞ்சம் புரிந்து கொண்டு - பின் சிறிய அளவில் முதலீடுகள் செய்து பார்த்து அனுபவத்தின் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
03) Jerusalem: The Biography
இந்தப் புத்தகம் Simon Sebag Montefiore எழுதியது.. இது ஒரு chronograph அதாவது நீங்கள் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் - அந்த மன்னர் அப்படி வாழ்ந்தார் அப்படி ஆட்சி செய்தார்;... நமது முன்னோர்கள் அப்படி வாழ்ந்தார்கள் இப்படிச் சாதித்தார்கள் என்று பேசுவது - மன்னா மன்னாதி மன்னா என்று புகழ்ந்து எழுதப்படும் எந்த விதமான வரலாற்றுப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்காதீர். ஏன் என்றால் அது வரலாறே கிடையாது.
வரலாற்றுப் புத்தகங்கள் படிக்க வேண்டும் , வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் ஆதாரங்களுடன் கோர்க்கப்பட்ட அய்வுகட்டுரைகளை தான் தேடி படிக்க வேண்டும்.
வரலாற்றில் யாரையும் நல்லவன் கெட்டவன் என்று பிரிக்க கூடாது. தேடித் தெரிந்து கொண்டு இது எல்லாம் நடந்தது இப்படி தான் மனிதன் பரிணாமம் அடைந்தான் என்று உணரவேண்டும் என்பதாகத் தான் வரலாறு எழுதப் படவேண்டும் தவிர இவன் எல்லாம் நல்லவன் இவன் எல்லாம் கெட்டவன் என்று எழுதுவது சமூகத்திற்கும் நல்லது அல்ல - அது வரலாறும் அல்ல. வரலாறு வெறுப்பை விதிப்பதாக உணர்ச்சியைத் தூண்டிவிடுவதாக ஒரு புத்தகம் எழுத்திருக்கப்படும் என்றால் அது வரலாற்றுப் புத்தகமே கிடையாது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நல்லவனுக்கு எல்லாம் நல்லவன் என்ற ரீதியில் எந்த ஒருவனுக்கும் வரலாறு இருக்காது. வரலாறு என்பது பல கோணங்களில் இருந்து பார்க்கவேண்டிய ஒரு சிக்கலான உண்மை. அந்த உண்மையை 100% அறிந்து கொள்ளவும் முடியாது - அதே நேரம் அந்த உண்மையை நாம் உணர முடியும் , புரிந்து கொள்ள முடியும் - ஒழுங்கா எடுத்துச் சொல்லவே முடியாது. அந்த விதமாக இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கமும் பல நூறு ஆதாரங்களைத் திரட்டி - யூதம் , கிருஸ்தவம் , இஸ்லாம் இந்த மூன்று பெரும் மதங்களில் தோற்றமும் சண்டைக்கு காரணமுமான இந்த ஜெருசலம் என்ற மேட்டைப் பற்றி அதனைச் சுற்றியுள்ள வரலாற்றைப் பற்றி ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள புத்தகம் இது.
04) ஏன் எதற்கு எப்படி (1,2,3)
தமிழில் அறிவியல் சார்ந்த ஆர்வத்தைத் தூண்டியதில் சுஜாதா அவர்களுக்கு நிச்சயம் பெரிய பங்கு உண்டு. இந்தப் புத்தகம் அவர் கேள்வி பதிலாக வெளிவந்த தொடரின் மொத்த தொகுப்பு. இதில் அனைத்து விதமான அறிவியல் கேள்விகளுக்கும் முடிந்தவரை எளிமையாகப் பதில் கொடுத்திருப்பார். இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் Bill Bryson அவர்களைச் சுஜாதா கொஞ்சம் காப்பி செய்துள்ளதாகவே எனக்குத் தோன்றும். Bill Bryson காட்டிய சில வழிகளைக் கொஞ்சம் மாற்றி இவர் எழுதியுள்ளார் என்று சில இடங்களில் எனக்குத் தோன்றியது உண்டு என்பதை வெளிப்படையாகக் கூறுகிறேன்.
எது எப்படி என்றாலும் இந்தப் புத்தகம் அறிவியல் சார்ந்து பெரும் தேடலை தூண்டும்.
05) At Home
இந்தப் புத்தகமும் Bill Bryson அவர்களுடையது தான். இது எப்படி புத்தகம் என்றால் வீட்டில் படிக்கட்டுகள் ஆரம்பித்து நமது வீட்டுக்குளேயே நம்மை சுற்றியிருக்கும் அனைத்து பொருள்களுக்கும் பின்னால் இருக்கும் சுவாரசியமான வரலாற்றைத் தேடுவதாக இருக்கும். புத்தகம் எழுதியுள்ள Bill Bryson ஒரு Anglo-American. எனவே சில பொருட்களுக்கு நமக்கும் தொடர்பு இருக்காது என்றாலும் சுவாரசியமான பல தகவல்களை தனக்கே உரியச் சிறந்த நடையில் எழுதி சுவாரசியத்தை கூட்டி இருப்பார்.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
Author's Note - Writer Maridhas

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 521   
@vasudevrameshbabu3427
@vasudevrameshbabu3427 5 лет назад
Most sensible and useful youtuber in Tamil Nadu.. Good job
@Prabakaran-ey9mt
@Prabakaran-ey9mt 5 лет назад
True
@arumugamkandeepan4905
@arumugamkandeepan4905 4 года назад
Yes brother 💪💪 you really great.
@subashchandrabose.r8849
@subashchandrabose.r8849 4 года назад
Absolutely
@SK_explorer.
@SK_explorer. 5 лет назад
எப்ப பாத்தாலும் போராட்டம் போராட்டம் என்று வீடியோக்கள் உள்ள youtube பில். ஆக்கப்பூர்வமான பதிவிற்கு நன்றி.
@karthick.r3426
@karthick.r3426 5 лет назад
அண்ணா மாதம் ஒரு முறை இது போன்ற பயனுள்ள புத்தகங்கள் பற்றி ஒரு விடியோ பதிவு போடுங்கள்
@Nimmishiva
@Nimmishiva 5 лет назад
Appo book vaanga maateenga
@frontmate
@frontmate 5 лет назад
Karumam pudhicha mobile phone konjam orangattittuuu keezha irukara website lerndhu ivar sonna English books freeya download pannikongha Https://libgen.is Library Genesis Vaaazhgha valamudan !
@prasadsandeepan5470
@prasadsandeepan5470 5 лет назад
100% true; 100K subscribers ungaluku perumiyo illiyo; unga fans, naga perumai padrom . Valthukal Maridhas ji 😊
@jyothilekshmi5100
@jyothilekshmi5100 5 лет назад
Exactly💜💜💜
@brainclipsstudy1393
@brainclipsstudy1393 4 года назад
nw 3 nd half bro.. 💪
@chockalingam2689
@chockalingam2689 3 года назад
Yes.. Namala mari students ku anna romba neriya visayam sollithanthu irukaru
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 лет назад
அருமை வாழ்த்துகள் வாழ்த்துகள் மாரிதாஸ்
@chandraganesan8000
@chandraganesan8000 5 лет назад
Maridas is someone who is working hard to save Tamil Nadu from corrupts and who have no management capabilities like dmk. The least we can do is to share his videos and make sure that reaches as many people as possible. The way Maridas brings National unity and prokes Patriotism by reducing the so called hindi hatred is commendable. This so called dravidian parties and their ideologies will be eliminated from Tamil Nadu within 5-10 years for sure if all of us unite. Let's unite for Tamil Nadu!
@Prabakaran-ey9mt
@Prabakaran-ey9mt 5 лет назад
Yes
@avs5167
@avs5167 5 лет назад
இன்றைய இளைய சமூகத்திற்கு மரியதாஸ் ஒரு இனிய வரம். எத்தனை அறிவு , எத்தனை புத்தி சார்ந்த பேச்சு ! நம்மை வியக்க வைக்கும் ஒரு தீக்ஷணம் ! மாணவர்களே, இவர் நமது ஒரு அரிய வரம். இவரது பேச்சை கேட்டு நல்வழி பட வேண்டும்.
@selvasuresh2049
@selvasuresh2049 5 лет назад
ssssssss
@jaganmohankv2062
@jaganmohankv2062 4 года назад
இது ஒரு பயனுள்ள பேசு. எல்லோரும் கண்டிப்பாக கேட்கவேண்டும். அவர் சொன்ன புத்தங்களை படிக்கவேண்டும்.
@Ashokkumar-nm7bv
@Ashokkumar-nm7bv 5 лет назад
தேசத்தின் மீதும், இளைஞர்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறை எங்களை வியக்க வைக்கிறது.. உங்களுக்கு சகல விதமான செல்வங்களையும் இறைவன் தர மனதார வேண்டுகிறேன்...
@prakakarthi4558
@prakakarthi4558 5 лет назад
கண்டிபா SIR books always everything useful 👌👌👌👍👍📚 இன்றைய இளைய சமூகம் சினிமா.புரட்சினு நோக்கி போகாமல் புத்தகங்களை நோக்கி போவோம் நல்லதோறு பொருளாதார சமூதாய மாற்றத்தை முன்னேடுத்து வைப்போம்
@Prakash-cd3oc
@Prakash-cd3oc 5 лет назад
கண்டிப்பாக
@frontmate
@frontmate 5 лет назад
Karumam pudhicha mobile phone konjam orangattittuuu keezha irukara website lerndhu ivar sonna English books freeya download pannikongha padingha ... Https://libgen.is Library Genesis Vaaazhgha valamudan !
@kannanr3589
@kannanr3589 4 года назад
மிக்க நன்றி குருதேவா நான் தங்களிடம் எதிர்பார்த்த பதிவு இது தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் நன்றி 🙏
@rajadhivi7016
@rajadhivi7016 4 года назад
தனி மனிதன் ஒருவன் உண்மை என்ற மலையை இழுத்து கொண்டு வருகிறார் வேடிக்கை பார்த்தது போதும் வாருங்கள் மாரி தாஸ்க்கு கை கொடுப்போம்
@krishnanra6371
@krishnanra6371 4 года назад
திரு.மாரிதாஸ், நீங்கள் உங்களுடைய மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இளைஞர்களுக்கு இப்பொழுது தேவையான மிகச்சரியான பரிந்துரையைச்சொல்லியுருக்கிறீர்கள். மிக்க வந்தனம்.
@rishi4578
@rishi4578 5 лет назад
பல நாட்களாக இந்த பதிவுக்காக தான் காத்துக் கொண்டு இருந்தேன். மிகவும் நன்றி மரிதாஸ் அண்ணா.
@kasturirangan6635
@kasturirangan6635 5 лет назад
*அருமையான பதிவு! இளைய தலைமுறையினருக்கான நல்ல ஆலோசனைகள்_ இந்த வீடியோ வை எதற்காக 28 பயலுக Unlike பண்ணியிருக்கானுங்கனு தான் தெரியல! 1000 வீடியோ சேனல்களுக்கு மத்தியில் உருப்படியான ஒரே சேனல் உங்களோடது மாரிதாஸ்! வாழ்த்துக்கள் ! உங்களின் பங்கு சமுதாயத்துக்கு மிக அவசியம்!*
@arunachalamvarma2361
@arunachalamvarma2361 3 года назад
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@muralivenugopalan5113
@muralivenugopalan5113 5 лет назад
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. விவேகானந்தர் சென்ற துடிப்புள்ள அறிவுமிகுந்த இளைஞனை திரு. மாரிதாஸ் அவர்களிடத்தில்லை பார்க்கிறேன். வாழ்க உங்கள் பொதுசேவை.
@ShyaKar
@ShyaKar 4 года назад
Your students who gets opportunity to meet you daily are blessed.
@bharathkasthuri
@bharathkasthuri 5 лет назад
Mariadhas our next APJ Kalam for us. Wonderful contribution to young people. I wonder who disliked this useful videos🙄
@rathnamano9813
@rathnamano9813 5 лет назад
Saaman thombigal 😂😂😂😂
@umamaheswariumz4483
@umamaheswariumz4483 4 года назад
மாரிதாஸ் அவர்களே சிறந்த வழிகாட்டி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேர்👍👍👍
@Prabhakaran-td9gd
@Prabhakaran-td9gd 5 лет назад
I never thought I will see the day where a Tamil youtuber would advocate for reading books. Everywhere I see it is filled with garbage film reviews and gossips. I am extremely happy to see this video. Keep up the great work Mr.Maridas! You have earned a subscriber in me today.
@balaji-108
@balaji-108 5 лет назад
உண்மையிலேயே பயனுள்ள பதிவு உளமார்ந்த நன்றி
@umaraman6219
@umaraman6219 5 лет назад
மாரிதாஸா தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை தங்களது சேவை நம் இளைஞர்களுக்கு மிகவும் தேவை அகவை அறுபதைக் கடந்த பின்னும் தாங்கள் பரிந்துரைத்த புத்தகங்களை வாங்க புறப்பட்டு விட்டேன் " நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள 'இளைஞர்களின்' வாழ்வு முன்னேற"
@MonkMode..
@MonkMode.. 5 лет назад
Book 1: 👌 Book 2: 👍 Book 3: 👏🙌 Book 5: 💪🤘💜 Please watch this completely guys. Next one month la , I will be having these books. Start panren.
@eldergod4817
@eldergod4817 5 лет назад
Please read these books also Urban naxals by Vivek agnihothri, breaking India forces by Rajiv Malhotra
@frontmate
@frontmate 5 лет назад
Karumam pudhicha mobile phone konjam orangattittuuu keezha irukara website lerndhu ivar sonna English books freeya download pannikongha Https://libgen.is Library Genesis Vaaazhgha valamudan !
@kravig3899
@kravig3899 4 года назад
How was your experience bro
@viswanathans4250
@viswanathans4250 5 лет назад
அருமையான பதிவு புத்தகம் படிப்பதால் 100% அறிவுத்திறனும் சிந்தனைத் திறனும் அதிகரிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான பதிவு நன்றி.
@neovenkata
@neovenkata 5 лет назад
One of the best things to happen to TN is Maridhas. Thanks for your noble effort.
@gtm5103
@gtm5103 5 лет назад
நன்றி மரியதாஸ் அண்ணாஓம் சிவசிவஓம்
@arulprakasan7758
@arulprakasan7758 3 года назад
Good for students
@anand281989
@anand281989 5 лет назад
Congratulations for crossing 1 lakhs subscribers .... Keep going
@WalkWithNani
@WalkWithNani 5 лет назад
Wow...it was my favorite book "a short history of nearly everything".....but I suggest everyone to read in English....it's very informative...good luck my friends... Kudos to maridhas bro...from Taipei
@shivaakrish
@shivaakrish 5 лет назад
bro whats the problem with tamil version?
@pramod120895
@pramod120895 4 года назад
@@shivaakrish 2 um padinga. English la padikira po neenga science pudicha vara irundha neraya key words simple meaning oda therinjikalam
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 5 лет назад
சமூக அக்கரையுள்ள பதிவு .வணக்கம் சகோதரரே
@RameshTim
@RameshTim 5 лет назад
மிக அருமையான பரிந்துரைகள். அதிலும் பங்கு சந்தை பற்றிய புத்தகம் எல்லா இளைஞர்களும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும், பொருளாதாரம் எப்படி உலகத்தை இயக்குகிறது என்ற அறிவு மிக அவசியம், வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்
@shyam9416
@shyam9416 5 лет назад
புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இனிமேல கமெண்ட் போடுவேன் நன்றி 🙏👏👏👏👏👏👏👏👏
@karthikvenkat3591
@karthikvenkat3591 3 года назад
Dear Maridas, Thank you for this video. Am going to buy these books for my son. Every youth in India should see your videos.
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 лет назад
அருமை..நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மற்றும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்..
@AkashS-ht3lc
@AkashS-ht3lc 4 года назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா.... தங்களின் வீடியோ இணைப்பு அனைத்தையும் நான் இப்போது தான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.... தங்களின் தேடல்கள் தொடரட்டும்
@amirdhasv3201
@amirdhasv3201 5 лет назад
I have read Sujatha book. The rest no... Today I am going to get them Thanks for creating an interest
@MrGopal88
@MrGopal88 5 лет назад
Great work to the student society, I learned Bill Bryson only after I became 24 years, your guidance should help the students
@nunthuthumi
@nunthuthumi 5 лет назад
புத்தக வாசிப்பு என்பது அருமையான அனுபவம்
@aparajits1397
@aparajits1397 5 лет назад
Yes.. Useful tips not only for today's youngsters.. Will also b helpful to elders...to make their minds expand further in their life journey..
@venki600
@venki600 5 лет назад
என்னருமை இளைஞனே! உன்னைப்போல் இவ்வளவு சரளமாக, விபரமாக நூல் நயம் கூற இக்கால ஆசிரியர்களால் கூட இயலுமா என்பது ஐயமே!. தமிழகத்து இளைஞர்களுக்கான ஒரு வழிகாட்டியாக விளங்கும் நின் சேவை பல்லாண்டு தொடர, "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்னும் நிலை மேவ எல்லாம் வல்ல இறைவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக! வாழ்க பாரதம்! வளர்க மணித்தமிழ்நாடு!. இங்ஙனம் : நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யெனப் பெய்யும் மழை எனக் கொண்ட இம்மண்ணின் குடியிவன்!
@hihahahihi5923
@hihahahihi5923 5 лет назад
இந்தப் பட்டியலில் இடம்பெறத் தகுதியான புத்தகம் மதனின் " வந்தார்கள் வென்றார்கள் " . இந்திய மன்னர்களின் வரலாறு , அந்நிய படையெடுப்பு முதலான விவரங்கள் வெகு சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட புத்தகம்.
@darrenmaverick7703
@darrenmaverick7703 2 года назад
Excellent books which I have already read. And my humble, thanks for suggesting books to tamil readers, request to make videos about books to open our eyes of knowledge. Thank you
@senthilkumarsenthilkumar6732
@senthilkumarsenthilkumar6732 5 лет назад
திரு மரியதாஸ் தங்கள் சமூக பணி மிக பாரட்டதக்கது வாழ்க வளமுடன்
@rageshsa5034
@rageshsa5034 5 лет назад
Seriously mind blowing... thoughts , you have made the things so clear and simple which I personally dealt and fought with. Its a fantastic job by Mariyadhas.
@kumaragurukannan4435
@kumaragurukannan4435 5 лет назад
Thanks Mari dhas sir, தொடரட்டும் தங்களின் சிறப்பான பணி. வாழ்த்துக்கள்..
@dkraja5419
@dkraja5419 5 лет назад
சரியான தேர்வு bro. At Home தவிர எல்லாமே படிச்சாட்சி பெருமைக்காக சொல்லவில்லை இந்த அருமையான புத்தகங்களை படிக்க உங்களை மாதிரி ஒரு mentor இல்லாமல் பல புத்தகங்களை படித்துதான் ஒரு நிலைக்கு வந்தேன். இப்போது இருக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், எல்லாமே ஈஸியா அவர்களோடு கைகளுக்கே வந்துவிடுகிறது உங்களை மாதிரி இருக்கும் நல்லவர்கள் துணையுடன்.....
@karthickrajalearn
@karthickrajalearn 5 лет назад
உண்மை than sir Enaku nambika ye poyiduchu Neenga sollratha naan gavinikiren sir
@SS-qr6dk
@SS-qr6dk 5 лет назад
I SUGGEST BHAGAVATH GEETHAI I recently started studying Slow and Steady
@ராசுப்புராஜ்ஓம்
இன்னும் பயனுல்ல தகவல் உங்களிடம் எதிர்பாக்கிறேன் நற்பவி அன்பரே உங்கள் சேவை தொடற
@ManojKumar-ss5ij
@ManojKumar-ss5ij 5 лет назад
Thanks sir, future days I am daily reading this kind of books.🤝🤝🤝👍🤔🇮🇳🇮🇳🇮🇳
@jeyarekha55
@jeyarekha55 5 лет назад
Thanks for referring very useful books to students. Its very pertinent that they should develop a habit of regular book reading.
@ranganathans420
@ranganathans420 5 лет назад
Thanks dear Maridhas Answers for reforming the state. I am using some of your information to share with my circle. India must be saved by electing Modiji and similarly TN also must be saved from DMK and congress. Please continue your mission, we are all with your
@sriniseenu6332
@sriniseenu6332 5 лет назад
Indha maadhiri monthly oru video podunga sir useful aa irukum Because Indha maadhiri ellam video yaarum poduradhu illa humble request 👌👌👌👌👌👌
@karthikk3941
@karthikk3941 5 лет назад
thanks for your advice. the one who care about youth life👍
@RajaRaja-vn5ts
@RajaRaja-vn5ts 5 лет назад
அருமை. மற்றொரு புத்தகம் "Here is Help" by MR. Kopmeyar, இது தமிழிலும் கிடைக்கும், பெயர்: "இதோ உதவி"
@thesixthsense1
@thesixthsense1 5 лет назад
அற்புதமான பதிவு !! இளைஞர்களுக்கான உங்களது வழிகாட்டுதலுக்கு நன்றிகள் பல. இந்த ஐந்தில் நான் மூன்று புத்தகங்கள் படித்துள்ளேன். நல்ல பரிந்துரைகள். ஆறாவதாக Sapiens-A brief history of humankind என்ற ஆகச்சிறந்த, என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.
@muniyandik9470
@muniyandik9470 Год назад
அற்புதமான ஒரு பதிவு நன்றி 💯💯💯💯👍
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 5 лет назад
I use to watch all your videos. I'm not a BJP supporter. I like your speaking style. Theliva, confident a irk unga speech. I recommend you to add subtitles. Then inda madri general topics pathiym pesunga.
@Prasanth_Venkatachalam
@Prasanth_Venkatachalam 5 лет назад
Good job bro.I will read all the books Keep posting more videos like this .All the best
@Covid19_Lover
@Covid19_Lover 4 года назад
அருமையான பதிவு ❤️❤️❤️❤️🙏👌
@kaviselvan6404
@kaviselvan6404 5 лет назад
சரியான ஆம்பளைன்னா... தண்ணீர் துறையில் தனியார்களின் பங்கு பற்றியும், வருங்காலத்துக்கு தண்ணீர்த் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று ஒரு காணொளி வெளியீடு பார்ப்போம்...
@jothikumarse4508
@jothikumarse4508 5 лет назад
Purchased and started with ur first book, a short history of nearly everything. Thanks.
@esakkirajaraja7894
@esakkirajaraja7894 5 лет назад
உங்களுடைய வழிகாட்டுதலுக்கு நன்றி சகோதரா
@chennagovindan1471
@chennagovindan1471 4 года назад
100% true valga valamudan
@nonesurvives
@nonesurvives 5 лет назад
A short history of nearly everything - Bill Bryson Alla alla panam - 5 books in that starting from share market, small and long term investment, day trading. Jerusalem the biography - Simon sebag En edharku eppadi - Sujatha At Home - Bill Bryson
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 5 лет назад
Thanks Mr Marridass your Involvement
@PK-fw1xl
@PK-fw1xl 5 лет назад
Bill Bryson soninga, unga knowledge yevlo broad a irruku nu theriyaadhu, you are well read. My sincere respect for you 🙏. May you succeed in your ambitions.
@c.arimanimani3830
@c.arimanimani3830 5 лет назад
Yes, sariya sonnenga Bro. Vazhthugal. Jai hind
@muralivenkatakrishnan
@muralivenkatakrishnan 5 лет назад
மிகவும் புதுமையான ஸ்வாரஸ்யமான தகவல்....
@NaveenKumar-nm3dl
@NaveenKumar-nm3dl 5 лет назад
Right now ur a gem for Tamil Nadu..people and youth of Tamil Nadu should utilise ur knowledge..congrats and hats off to ur great effort..
@muralivenugopalan5113
@muralivenugopalan5113 5 лет назад
தமிழ் எழுத்தாளர்கள் பலர் கட்சிசார்பு உடையவர்கள்.. எனவே கண்டிப்பாக கவனமாக உன்னிப்பாக பார்த்துப் படிக்கவும்..
@aravind2663
@aravind2663 5 лет назад
Aman mostly dmk people.
@lawstudentofdemocraticcoun8871
5 Books ah padichi mudikiren..munnerugiren...nandri anna
@ச.இராஜா
@ச.இராஜா 5 лет назад
அருமையான பதிவு பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி சார்
@PrasanthRaj1995
@PrasanthRaj1995 5 лет назад
You are doing a good job Maridhas sir! Please continue to do so. I can strongly feel your patriotism and your deep insights on uprooting the corruptive thoughts on young minds. Hope you reach high in your life.
@brillit888
@brillit888 5 лет назад
I recommend " Rich Dad Poor Dad " by Robert Kiyosaki , best financial book
@Rishikumarsundaram
@Rishikumarsundaram 4 года назад
Such a great information🔥
@maheshjayaraman6856
@maheshjayaraman6856 5 лет назад
Maridhas ji. Really excellent books.. That too share market is really required. Apart from these books..many people are not having knowledge on basic economics.. Please recommend a book for the same
@ganeshgs2241
@ganeshgs2241 5 лет назад
Superb.... Interesting...... Thank you very much bro.....
@manojragunath5468
@manojragunath5468 5 лет назад
Sir I have studied all five volumes of Soma Valliappan sir books .After this book only I have got good knowledge in Share market.Really its very valuable and the writings in the book is very simple and easy to understand .
@--Asha--
@--Asha-- 5 лет назад
Great video.👌👌Sir. Your students are lucky sir.
@jayganeshp.513
@jayganeshp.513 5 лет назад
I am impressed his speech
@karthikeyan7153
@karthikeyan7153 5 лет назад
Super...for suggesting the books..sujatha and share market book..long time thought...one of I he valuable video..
@eamganesh
@eamganesh 5 лет назад
Anna, the way you speak and the passion in you, it's so visible in your face. I wish you all the very best in guiding our youngsters into better and better things... My humble and heartfelt thanks to you. :)
@m.venkateshmadrashighcourt4771
I most expected one thing, which was about share marketing how to invest my money. A long back I found a solution to my investment. Thank you.. And I like your final words of this video about News/Media. To stay as far as from the news channels
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 5 лет назад
Educative Sir Great Guidance for young generation
@இணைந்துஇருப்போம்
௮ண்ணா நான் ஒரு வரலாற்று மாணவன், வரலாற்று புத்தகங்களை படிப்பதில் எனக்கு மிக ஆர்வம் ௮து மட்டும் அல்ல ௮ரசியல் மீது ஈர்ப்பு உண்டு, நீங்கள் சொல்வதால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க உள்ளேன். சில நாட்களாக பங்குச் சந்தை , பொருளாதார ரீதியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன், பங்குச் சந்தை சார்ந்த சில வகுப்புகளை அட்டன் செய்துள்ளே அதில் அவர்கள் எடுத்தாதில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன அந்த சந்தேகம் நீங்கள் கூறியா புத்தகத்தின் மூலம் தீரும் என்று நம்புகிறேன். நன்றி
@sarathchandrababub7936
@sarathchandrababub7936 4 года назад
En kuzhanthayai naan ethai nokki nakartha vendum endru neengal unarthineergal. Naan ivlo naal vazhnthathellam oru vazhkkaya endru naan ennaye keettukkiren. Thank you so much sir.
@vigneshviki9031
@vigneshviki9031 5 лет назад
Yen edharku epadi.. by sujatha.. really very useful book which every students should read it
@bhuvaneshkumar2464
@bhuvaneshkumar2464 4 года назад
"A Short history of nearly Everything" From today I started reading this book thanks to Maridhas Anna
@narkrigo
@narkrigo 5 лет назад
Superb superb Maridhas....👌👌...U are great Benefactor to our tamil society....👍...We support u ..👍.😍. Continue with Great work👍
@keerthikutty4992
@keerthikutty4992 4 года назад
Remmpa Nandri Anna ... Please share pannunga Ellarum ... 🙏🙏🙏
@IamVickyAV
@IamVickyAV 5 лет назад
I would recommend நிலமெல்லாம் ரத்தம் by Mr. Ragavan for starters instead of the 3rd book Jerusalem mentioned by Mr. Maridhas
@lohith_sai
@lohith_sai 5 лет назад
Really excellent. Glad to see one of the book which I read- Bill Bryson's a short history of nearly everything
@pongatha4459
@pongatha4459 5 лет назад
தற்போதுள்ள இளைஞர்களுக்கு அவர்கள் நாம் சார்ந்து சிந்திக்க கூடிய விவரங்களையும் முன்னேற என்னவெல்லாம் தெரிந்து கொள்ளவும் எப்படி தேட வேண்டும் என்பதும் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி அண்ணா
@RajA-wu8ox
@RajA-wu8ox 5 лет назад
Wonderful. Keep recommending the books like this sir. Thanks so much to you.
@subhavenkat6277
@subhavenkat6277 5 лет назад
Very useful video sir. Pleasantly surprised by your selection of Bill Bryson's A short history of nearly everything. This book was suggested for KVPY interview preparation. Keep up the wonderful work.
@pronoobstamil1755
@pronoobstamil1755 5 лет назад
நான் சமீபத்தில் படித்து பயனுற்ற புத்தகங்கள் : Worth Reading 😉 1.பிரமாண்ட சிந்தனையில் மாயாஜாலம்(Power of Thinking Big) 2. பணக்காரத்தந்தை ஏழைத்தந்தை ( Rich dad Poor Dad)
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 4 года назад
நன்றி 🙏
@venk113
@venk113 5 лет назад
- Bill Bryson - The Short History of Nearly Everything - சோம வல்லியப்பன் - அல்ல அல்ல பணம் - The Jerusalem The biography - Sujata - ஏன் எதற்கு எப்படி - Bill Bryson - At Home
@arung818
@arung818 5 лет назад
Great subject, Maridoss. I would also recommend 7 habits of effective person by Steven Covey. Its bit rewritten for Teens as well and I presented that to my kid when he was 15.
@georgefernandaz4226
@georgefernandaz4226 5 лет назад
Arun G it's psychology books
@antonyjanario2412
@antonyjanario2412 3 года назад
Very good information.. Thankyou sir!
Далее