Тёмный
No video :(

குழந்தைக்கு பல் முளைக்கும்போது பிரச்சினைகள் வருமா?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 149
50% 1

குழந்தைகளுக்கு பல் முளைப்பதால் எதாவது பிரச்சினைகள் வருமா? எப்ப பல் முளைக்கும்? எத்தனை பல் முளைக்கனும் அப்படிங்கறதப் பற்றி பார்ப்போம்.
குழந்தைகளுக்கு பல் முளைத்தால் பிரச்சினைகள் வரும் என்று நம் ஊரில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் நம்பிக் கொண்டு இருந்தனர். 19 ம் நூற்றாண்டு காலம் வரையுமே இந்த நம்பிக்கை இருந்தது. காரணம் என்னவென்றால் குழந்தைக்கு பல் முளைக்கும் காலமான 6 முதல் 12 மாதங்கள் வரை தொல்லைகள் வரக் கூடிய நேரம். தாய்ப்பாலில் இருந்து கிடைக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி குறையும் காலம் என்பதால் பல தொற்றுகள் ஏற்படும்.
ஆனால் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிக்குப் பிறகு பல் முளைப்பதால் எந்த தொல்லைகளும் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டது. சில நேரங்களில் பல் முளைப்பதில் தாமதம் என்றால் என்ன காரணம் என்று பார்ப்பது மிக அவசியம். தைராய்டு சுரப்பி குறைவாக இருப்பதனால், எலும்பு வளர்ச்சியில்லை, எலும்பு திசுக்கல் வளர்ச்சியில் பாதிப்பு இருந்தால், வைட்டமின் டி சத்து குறைச்சலாலும் பாதிப்பு ஏற்படலாம் இது தவிர பல் முளைப்பது தள்ளிபோவது மிக மிக குறைவு.
பல் முளைக்கும் போது லேசான வீக்கம் இருக்கும், அரிப்பாக இருக்கும் இதனால் குழந்தை நை நை என்று இருக்கும். வலிக்குது, விரல்களை வாய்க்கு கொண்டு செல்கிறது என்றால் குருகுரு என்று இருக்கிறது என்று அர்த்தம். குருகுருப்பை போக்குவதற்காக காய்கறிகளையோ, பழங்களையோ தரலாம் இதனால் குருகுருப்பு குறையலாம்.
பெற்றோர்களே நம்ம குழந்தைக்கு பல் முளைக்கும் காலம் முக்கியமாக 6ல் இருந்து 12 மாதங்கள் வரைக்கும், முதலில் 6 மாதத்தில் முளைக்கும் பால் பல்லில் ஆரம்பித்து இரண்டரை வயது வரை கொஞ்ச கொஞ்சமாக முளைக்கும்.

Опубликовано:

 

15 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@ammusiraj7848
@ammusiraj7848 4 месяца назад
Thank you sir😊
Далее
❌Разве такое возможно? #story
01:00
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
❌Разве такое возможно? #story
01:00