Тёмный
No video :(

குழந்தையை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வளர்ப்பது எப்படி?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 213
50% 1

மகிழ்ச்சியான ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பது என்பதுதான் அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும் .எங்கு நோக்கினும் புத்தகங்களும் ஏகப்பட்ட இணைய தளங்களும்இந்தப் பெற்றோர்களின் தாகத்தை தீர்க்க பரவி உள்ளன
ஏதாவது ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து முடிவு தெரிந்திருந்தால்நன்றாக இருக்கும் என்ற நம்முடைய தாகத்தை தீர்க்கிறது 1958ல் இருந்து இங்கிலாந்தில் தொடரும் ஆராய்ச்சி. 1958 இலிருந்து 10 ஆண்டுகால இடைவெளியில் நான்கு கால கட்டங்களில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் குழந்தைகளின் வாழ்க்கையை பின்தொடர்கிறது இதைப் பற்றி இதுவரை900 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகி உள்ளன .
மகிழ்ச்சியான உடல் நலம் மிக்க குழந்தைக்கு மிக முக்கியம் பெற்றோரின் சமூக பொருளாதார சூழல் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு எதிர்காலம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது முதல் முடிவு .
பெற்றோரின் பொருளாதார சூழல் சரியாக இல்லை என்றாலும் தாய் தந்தையர் குழந்தையின் மேல் அன்பு ,பாசம், நேசம் கொண்டு குழந்தையின் வளர்ச்சிக்காக நேரத்தையும் காலத்தையும் செலவு செய்தால் இந்த குழந்தைகளும் ஆரோக்கியமானவர்களாகவும் மகிழ்ச்சியானவர்களாக மாறுவார்கள் என்பது இரண்டாவது முடிவு.
கருவுருவதற்கு முன் தாயின் எடை தாயின் உயரம் பிறக்கும் குழந்தையின் எடையினை அதன் வாழ்நாள் உடல் நலத்தினை பாதிக்கும் .
அதிக நேரம் குழந்தையுடன் உறவாடி படித்துக் காட்டும் பெற்றோர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குகின்றன. சிறுவயதில் ஏற்படும் மனநல பிரச்சனைகள் பிற்காலத்திலும் தொடரும் என்பது இன்னும் ஒரு முக்கியமான முடிவு ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றில் ஒரு பங்கு குழந்தையினர் அதில் முழுவதுமாக விடுபடுகிறார்கள்.
நல்ல உணவு ஆரோக்கியமான குடும்ப சூழல் போதுமான ஓய்வு ,சரியான
விளையாட்டு ,நல்ல உறக்கம் சக்கை உணவுகள் தவிர்ப்பு ஆகியவைகள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாக அமையும்

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее