Тёмный

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ‘நீரதிகாரம்’ | அ.வெண்ணிலா - அ.லோகமாதேவி உரையாடல் 

Shruti TV Literature
Подписаться 33 тыс.
Просмотров 2,6 тыс.
50% 1

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ‘நீரதிகாரம்’
அ.வெண்ணிலா - அ.லோகமாதேவி உரையாடல்
Neerathikaaram - A.Vennila interview
#Neerathikaaram
வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம். அதுதான் முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் விறுவிறு எழுத்தால் விவரித்து ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். ஒரு தொடர் இவ்வளவு நீண்ட நாள் எழுதப்பட்டதிலிருந்தே, அந்தத் தொடருக்கு வாசகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்பது புலனாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே அணை கட்டுமான ஒப்பந்தம் ஏற்படும் முன்பே, இருந்த சிக்கல்கள், நிபந்தனைகளில் ஆரம்பித்து, அணை கட்டுமானம் முடிப்பது வரை மிக விரிவாகவும் அழகாகவும் விவரித்து பெரும் வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அ.வெண்ணிலா. 150 ஆண்டுகளுக்கு முன் மிக உயர்ந்த மலைமேல் கட்டப்படும் அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள், காலரா நோய் பரவி தொழிலாளர் பலரைப் பலிவாங்கிய துயரம், காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், இயற்கை இடர்ப்பாடுகள் என பல இன்னல்களுக்கிடையே நடைபெற்ற பெரியாறு அணையின் கட்டுமானப் பணி எத்துணை சவால் நிறைந்தது என்பதை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துகிறது இந்த நீரதிகாரம். ‘முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் பென்னிகுக்' என அந்த அணை பற்றி சில வார்த்தைகளிலேயே அறியப்பட்டிருந்தது. ஆனால், அணை கட்டுமுன் இருந்த சிக்கல்களையும் அணை கட்டு மானத்தின்போது நடந்த துயரங்களையும், பெரும் முயற்சிகளையும் சொல்லிக்கொண்டு பெரும் வரலாறாகப் பாய்ந்து செல்கிறது இந்த நீரதிகாரம்!
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Опубликовано:

 

9 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@varunvarun9714
@varunvarun9714 Месяц назад
மிக அருமைஅக்கா
@kuppusamydhanapackiam9019
@kuppusamydhanapackiam9019 3 месяца назад
அழகிய,அறிவார்ந்த உரையாடல்
@lingeswari1873
@lingeswari1873 3 месяца назад
உரையாடல் மிக அருமை. அறிவார்ந்த அக்காக்கள் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை இமைகொட்டாமல் பார்த்த நிறைவு.லோகமாதேவி அக்காவோட அதழ் தளத்தில் அவர் எழுதுகிற அனைத்துப் பதிவுகளையும் படித்து விடுவேன்.அவரை ரொம்ப பிடிக்கும்.நீரதிகாரத்தை விரைவில் படிக்கவேண்டும்.இருவருக்கும் நன்றிகள்.
@ramarajrajagopal3821
@ramarajrajagopal3821 3 месяца назад
மகளே, வெண்ணிலா, வாழ்த்துக்கள், தமிழ் எழுத்துலகில் உங்கள் நாவல் அழியாத இடம் பெற்றுள்ளது, தொரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
@pooranisiva454
@pooranisiva454 3 месяца назад
Great Work Vennila🎉
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 3 месяца назад
👏👏👏🙏💐
@amudham06
@amudham06 3 месяца назад
வாக்தேவிக்கு வணக்கம் ❤
@PaavalarVaiyavan
@PaavalarVaiyavan 3 месяца назад
வாழ்த்துகள் வெண்ணிலா. புத்தகம் வேண்டும். முருகேஷை தொடர்பு கொள்கிறேன்
@rathakrishnannandagopal6713
@rathakrishnannandagopal6713 3 месяца назад
உரையாடல் மிக சுவாரசியமாக சுவையாக இருக்கிறது. பாராட்டுகள். பாதி நாவல் படித்து போல் இருக்கிறது. முமையாக எழுத்து வடிவில் படிக்க தீர்மானித்துள்ளேன். நாவல் நேரில் பெற ஆவலாக உள்ளேன். தோழன்.. ந. இராதாகிருட்டிணன்.
@vichandraenterprisesfloori4359
@vichandraenterprisesfloori4359 3 месяца назад
மிக அருமையான உரையாடல். கதை தொடர் விகடனில் படித்தபோது கிடைத்த சுவாரசியம் மேலும் கூர்மையாக இருந்தது. மிக்க நன்றி. இறையருள் திகழ்க எழுத்தாளர் வெண்ணிலா அவர்களே.
@dexterrajesh
@dexterrajesh 3 месяца назад
Good Discussion... thanks.
Далее
skibidi toilet multiverse 039 (part 4)
06:06
Просмотров 3,7 млн
СОБАКИ ГОЛОДАЮТ ИЗ-ЗА ЛЕРЫ 🥲
01:00