Тёмный

செல்வச்சந்நிதியில் நடந்த அதிசயம் வல்லை வெளியில் இறங்கிச்செல்லும் மக்கள் 🦚ௐ🐓⚜️ । Vlog Jaffna 

ஆற்றுப்படை Aatrupadai
Подписаться 7 тыс.
Просмотров 5 тыс.
50% 1

வித்தியாசமான அமைப்பைக் கொண்ட இவ்வாலயம் வரலாற்றுப் புகழ் மிக்கது. முன்பு வீரபாகுத் தேவர்[1] சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்து முத்தியடைந்தார்களாம். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தல விருட்சமாக பூவரச மரம் அமைந்துள்ளது. முருகப்பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சி கொடுத்தது பூவரச மரத்தின் கீழேயே என்று கூறப்படுகிறது. 65 ஆலமர இலையில் முருகனுக்கு அமுது படைத்து பின்பு பக்த கோடிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும் முறை இன்றும் இருக்கின்றது.
12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கன் என்ற சோழ அரசனின் ஆட்சியில் கருணாகரத் தொண்டமான் என்ற சிற்றரசனால் வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டமானாறு கட்டப்பட்டது. தொண்டமானால் வெட்டப்பட்ட தொண்டமானாறு வல்லி நதியுடன் இணைந்த பகுதியாகும். இந்த வல்லி நதியின் தொடுவாயிலையே கருணாகரத் தொண்டமான் வெட்டி ஆழப்படுத்தி கடலுடன் இணைத்ததால் அது தொண்டமானாறு என்று அழைக்கப்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயராலும் அதன் பின்பு ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்ட ஆலயம் ஒல்லாந்தர்கால பிற்பகுதியில் மருதர் கதிர்காமர் என்ற பக்தரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்நிதி முருகன் தன்மீது அளவு கடந்த பக்தி கொண்டு தன்னை வழிபடும் மருதர் கதிர்காமர் என்பவரிடம் தனக்கு பூஜை செய்யும் உரிமையைக் கொடுக்க விரும்பினார்.
தொண்டமனாறு ஆற்றங்கரையிலே மீன் பிடித்து தனது காலத்தைக் கடத்தி வந்தார் மருதர் கதிர்காமர் இவர் வழமைபோல் அன்றும் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு குரல் 'கதிர்காமா இக்கரைக்கு வா" என்றது. ஆச்சரியத்துடன் கரைக்குச் சென்ற கதிர்காமரிடம் சந்நிதிமுருகன் ஒரு சிறுவனாகக் காட்சி கொடுத்தார். அந்தச் சிறுவன் கதிர்காமரை நோக்கி 'இந்த தொண்டைமான் ஆற்றங்கரையிலே இருக்கின்ற பூவரச மரத்தடியில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்த வழிபடுக" என்று பணித்தான். உடனே கதிர்காமர் நானோ கடற்தொழில் செய்பவன். எனக்கு பூஜை முறைகள் தெரியாது என்று பணிவுடன் கூற, சிறுவன் கதிர்காமாரை கண்ணை மூடுமாறு பணித்து கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பூஜை முறைகளை காண்பித்து, வழிபாட்டுக்கு ஒரு வேல் ஒன்றையும் வழங்கியதாக நூல்கள் கூறுகின்றன. அன்று தொடக்கம் முருக ஆசாரசீலராகிய கதிர்காமர் தொண்டைமனாற்றங்கரையிலே செழிப்புற்று வளர்ந்துள்ள பூவரச மரத்தடியில் வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
இவ்வாறு பூஜை செய்து வந்த தொண்டமனாறு கதிர்காமர் மனதில் ஒரு வருத்தம் தென்பட்டது. சந்நிதி முருகனுக்கு நைவேத்தியம் படைக்க தெரியாதே என்று, அப்படியிருக்கையில் ஒரு நாள் முதியவர் ஒருவர் கதிர்காமரை நோக்கி, நான் களைப்பாக இருக்கின்றேன். எனக்கு ஒரு ஆலம் இலையில் கொஞ்சம் பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்கறியும் வைத்துத் தந்தால் போதும் என்றார். பூரிப்பு அடைந்த கதிர்காமர் விரைவாக பொங்கல் பொங்கி, பயற்றங்காய் குழம்பையும் ஊற்றி ஆலம் இலையில் கொடுக்க, முதியவர் அற்புதமான பொங்கல் என்று பெருமிதமடைந்து கொண்டே அங்கே அறுபத்துமூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களும் உனக்கும் சேர்த்து அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது தரவேண்டும் என்று சொல்லி முருகனாக காட்சி கொடுத்தார். கதிர்காமர் சந்நிதியை நோக்கி ஓடினார். 'வேல்" வழமைக்கு மாறாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. சந்நிதி முருகன் ஆலம் இலையில் வைக்கப்பட்ட பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்காய் குழம்பும் உண்டதாக வரவாறு சான்றுபகர்கிறது. இதனால் தான் இன்றும் செல்லச்சந்நிதியில் பூஜை நேரங்களின் போது அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது படைக்கும் மரபு காணப்படுகிறது.
இந்த ஆலயத்துக்கான தேர்வடம் கூட கடலிலேயே வந்து சேர்ந்த அற்புதம் இன்று அடியார்களின் மனதிலே ஆழப்பதிந்த ஒரு அதிசயம். தமது நல்ல காரியங்களைக் கூட இங்கேயே தொடங்குகின்றனர். இவ்வளவு பெருமை பொருந்திய செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு இந்த மஷோற்சவத்தின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவர். இலங்கையில் அநேக அன்னதான மடங்களைக் கொண்ட ஆலயம் சந்நிதி முருகன் ஆலயம்தான் இதனால் தான் சந்நிதி முருகனை, அன்னதானக் கந்தன் என்றும் அழைப்பார்கள்.
This temple has a unique structure and is famous for its history. It is said that earlier Veerabakhut Devar had planted his feet at a place called Kallodai when he went on a mission to Soorapadman and then on his way back he had to perform the Sanktala Puja.
The historic Thondamanaru was built by Karunakarath Thondaman during the reign of the Chola king Kulothungan in the early 12th century. Thondamanaru is a confluence with Valli River cut by Thondaman. Karunakara Thondaman cut and deepened the tributary of this Valli river and connected it to the sea, so it is called Thondamanaru.
Destroyed by the Portuguese and then the Dutch in the 16th century, the temple was reopened in the late Dutch period by a devotee named Marudhar Kadirgamar. Sannidhi Murugan wanted to grant the right of worship to Maruthar Kadirgamar, who worshiped him with extreme devotion.
#jaffna #Selvasannithy #jaffnavlog #srilanka #murugankovil #srilankanfood #srilankatamilvlogs ##maruthadi #murugan #manipay #manipai #செல்வச்சந்நிதி #tamil vlogjaffna #murugantemple #hindutemple #selvasannithi #selvachsannithi #murugankovil #jaffnatemples

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@pamelacicilia5321
@pamelacicilia5321 6 месяцев назад
Nice video and Wonderful explanation🎉
@aatrupadai
@aatrupadai 6 месяцев назад
Thanks a lot 😊
@ravijendiranbenghazi4905
@ravijendiranbenghazi4905 6 месяцев назад
வல்லைவெளி கோவில்களில் முதன்மையானது முனீஸ்வரர் ஆலயமாகும். அதன் பின் பிள்ளையார் , ஆஞ்சநேயர் ஆலயங்கள் கொலுவக்கப்பட்டன.
@nirovlog
@nirovlog 6 месяцев назад
Nice video 😊
@aatrupadai
@aatrupadai 6 месяцев назад
Thanks 🙏
@NoMerzzyEditz
@NoMerzzyEditz 6 месяцев назад
Nice
@aatrupadai
@aatrupadai 6 месяцев назад
Thanks
@antonynirushan1426
@antonynirushan1426 6 месяцев назад
Good
@aatrupadai
@aatrupadai 6 месяцев назад
Thanks
@sassinadesu7842
@sassinadesu7842 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@aatrupadai
@aatrupadai 6 месяцев назад
❤️
Далее