Тёмный
No video :(

தத்து எடுத்த குழந்தையின் வளர்ப்பு?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 133
50% 1

ஆங்கில மூலம். மரு. நியூட்டன் லூயிசு
கருப்பைக்கு பதிலாக உங்கள் இதயத்தில் குழந்தை வளர்வது தான் தத்தெடுப்பது --- யாரோ சொன்னது
வாழ்த்துக்கள்! ஒரு குழந்தையை நீங்கள் இப்போது தத்து எடுத்து விட்டீர்கள். உங்களுக்கு நிறைய சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருக்கலாம் ஒவ்வொரு தாயும் நிறைய கவலைகளுடன் குழந்தை பிறக்கும்போது இருப்பாள். உங்கள் கருப்பையில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தது போல இந்தக் குழந்தையையும் நேசிப்பீர்கள் .அன்பு என்பது குழந்தைக்கு தேவையானதை தரும் அனுபவத்தில் இருந்துதான் வருகிறது.
இனி உங்களுடைய கேள்விகளுக்கு பதிலைப் பார்ப்போம்
1. தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
பிறந்த தாயோடு இருந்தாலும் இல்லை என்றாலும் அன்பினையும் பாசத்தினையையும் பெற்றோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் குழந்தையை பொருத்தவரையில் நீங்கள் அவனை மிக அதிகமாக நேசிப்பவர் உங்கள் குழந்தையின் மகிழ்ச்சி உங்களுடைய மனநிலை முதிர்ச்சியை பொருத்தது .உங்கள் குழந்தையைச் செல்லம் கொடுத்து கெடுத்து விட வேண்டாம் அவனை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள் அதிக அன்பினைத் தாருங்கள் தவறு செய்தால் தயங்காமல் கண்டித்து திருத்துங்கள்.
அவர்கள் பெற்றோர்கள் செல்லம் கொடுத்து கெடுக்காமல் இருந்தால்தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல மகிழ்வோடு இருப்பார்கள்.
2.தத்து எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான நல்ல குழந்தை கிடைக்கும்
உங்களுக்கு பிறப்பதை , விடத் தத்து எடுப்பதன் மூலம் நம்பிக்கையோடு பெறலாம் என்பது ஒரு வியப்பான உண்மை. பிறக்கும் குழந்தைகளில் நூறில் ஒருவர் ஏதோ ஒரு பிரச்சனையோடு இருக்கிறார் அது இருதயத்தில் ஓட்டை, பிளவுபட்ட உதடு அல்லது அறிவுத்திறன் பிரச்சினையாகக்கூட இருக்கலாம்
தத்துதருவதற்கு முன் சட்டப்படி, வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு தீவிர நோய்களான ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய் சிபிலிஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் .ஒரு குழந்தை மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து உடல்நிலை பற்றிக் குறிப்பிட்டு மருத்துவ சான்றிதழ்தரவேண்டும் .எனவே தத்து எடுப்பதற்கு முன் உங்கள் தத்து குழந்தை நலமாக உள்ளது என்பதனை உறுதி செய்துகொள்ளலாம்
3. குழந்தையை பெற்றெடுத்த தாய்திரும்பி வந்து குழந்தையைக் கேட்டால்!
குழந்தையின் தாய், தனது சட்டபூர்வமான உரிமைகளை அதிகாரபூர்வமாகக் கைவிட்ட பிறகுதான், குழந்தை தத்துக்கு தரப்படுகிறது. தத்து தரும் நிறுவனம் குழந்தையை இவர் தத்தெடுத்து இருக்கிறார் என்பதைத் தாய்க்கு சொல்லுவதோ அல்லது இவர்தான் குழந்தையின் தாய் என்று தத்து எடுத்தவர்களுக்கு தெரிவிப்பதோ சட்டப்படி தவறு. உறவினர்களிடம் இருந்து குழந்தையை ,சட்டவிரோதமாக தத்து எடுப்பது ஒரு வழக்கமாக இருக்கிறது. குழந்தையின் தாய் வருங்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தையை திரும்ப கேட்கலாம் என்ற ஆபத்து இதில் உள்ளது இப்படி நடந்தால் உங்களுக்கும் குழந்தைக்கும் எவ்வளவு மன அழுத்தம் வரும் என்பதனை யோசித்துப் பாருங்கள் அப்படி தத்தெடுக்கப்பட்டாலும் குழந்தைக்கு சட்டரீதியாக உங்கள் சொத்துக்களில் எந்த பங்கும் கிடையாது.
4. வளர்ந்த குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமா?
சிறு வயதுக்குழந்தையைத் தத்து எடுப்பது மிக நல்லது உங்களுடைய வேலைப்பளுவை இது அதிகரிக்கலாம் ஆனால் பெற்றோர் மற்றும் குழந்தையிடம் மிகுந்த நெருக்கத்தையும் நேசத்தையும் இது உருவாக்கும்
5. சட்டபூர்வமான தத்தெடுப்பு செலவு பிடிக்கும்! நாளும் ஆகும்!
முக்கியமான சட்ட பூர்வ நடைமுறைகளை செய்வதற்கு, காத்திருக்கும் நேரமும் ,செய்யும் செலவும்,உதவிகிறது. அதன் மூலம் உங்கள் குழந்தையின் உரிமைகளை நிலை நிறுத்தப்படும் நீங்கள். வங்கியில் குறிப்பிட்ட அளவு பணத்தை நிரந்தர வைப்பு தொகையாகக் குழந்தையின் பெயரில் போடவேண்டும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி பிறகு அந்தத் தொகை அவனுக்கு கிடைக்கும்
6. தத்து எடுக்கப்பட்ட குழந்தை என்று எப்போது
சொல்வது
ஏதாவது ஒரு நேரம் அல்லது மற்ற சமயத்தில் ஒவ்வொரு குழந்தையும் தான் தத்து எடுக்கப்பட்டவன் என்பதை அறிந்து கொள்ளும். எனவே நீங்களே குழந்தைக்கு இந்த விஷயத்தை சொல்லி விடுவது என்பது நல்லது. வேறு யார் வழியாகத் தெரிந்துகொண்டால் அவன் தான் ஏமாற்றப் பட்டோம் என்று எண்ணலாம். அதன் காரணமாக தத்து எடுக்கப்பட்டது ஒரு வெட்கச்செயல் என நினைக்கலாம் இந்த காரணத்திற்காக நீங்கள் உங்கள் குழந்தையை மாற்றுக் குறைவாக நேசிப்பதில்லை எனவே அவனும் உங்களை குறைவாக நேசிப்பான் என கவலைப்பட வேண்டாம். அவனுக்கு ஐந்து வயது ஆகி, தத்து எடுத்தல் பற்றிய புரிதல் வந்தபிறகு நீங்களேசொல்லுங்கள். இந்த வயதில் அறிவியல் பூர்வமான விளக்கங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் எனவே நீங்கள் தான் அவன் தாய் எங்கு அவன் பிறந்தான் என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. தன்னுடைய உண்மைத் தாயை பற்றி கற்பனை செய்துகொள்ள விரும்பினால் விட்டுவிடுங்கள் அதனால் எவருக்கும்எந்த பிரச்சனையும் இல்லை இது ஒரு இடைப்பட்ட காலநிலை. ஒரு போதும் அவன் சொன்ன வார்த்தைகளுக்குப் பழிவாங்குவதற்காக அவனின் உண்மைத்தாயைப் பற்றி எதிர்மறை யாகப் பேச வேண்டாம்
டாக்டர்.நியூட்டன் லூயிசு வின் கட்டுரை
childhealthtod...

Опубликовано:

 

23 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@shunmugavelganaraj9892
@shunmugavelganaraj9892 2 месяца назад
நாங்கள் தத்து எடுத்திருக்கும் குழந்தை பற்றிய ஆலோசனைகள் எதிர்பார்த்திருந்தோம்.நல்ல ஆலோசனை கிடைத்து.நன்றி.சார்.
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 12 млн
Wolfram Physics Project Launch
3:50:19
Просмотров 1,7 млн