Тёмный

திவ்யப் பிரபந்தம் - பச்சை மாமலை போல்... 

இல்லந்தோறும் அருளமுத மழை
Просмотров 13 тыс.
50% 1

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய
திருமாலை
(திருவரங்கத்து எம்பெருமானைப் பற்றியது)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே! (2)
பதவுரை
அச்சுதா - அச்சுதனே
அமரர்ஏறே - நித்யஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர்தம் கொழுந்தே - இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே
தவிர - விட்டுவிடும்படி
வேண்டேன் - (அதனை) விரும்பமாட்டேன்.
விளக்க உரை
உரை:1
இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரியபெருமாள் “ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன; இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது; அது எனக்கு வேண்டா என்கிறார்.
உரை:2
பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. "ஆயர் தம் கொழுந்தே" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய "தொன் மிகு பெரும் மரம்" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்!
English Translation
“O Lord of Arangama-nagar, with the hue of a huge green mountain! Lord of coral lips, lotus-red eyes, Achyuta! Lord of Eternals, O Cowherd-Lord”, -- denying the joy of praising you thus, if I were given to rule Indra’s kingdom, - even if you gave it, - I shall not want it.
மனத்திலோர் தூய்மை யில்லை* வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா,*
புனத்துழாய் மாலை யானே!* பொன்னிசூழ் திருவ ரங்கா,*
எனக்கினிக் கதியென் சொல்லாய்* என்னையா ளுடைய கோவே!
பதவுரை
புனம் துழாய் மாலையானே - தண்ணிலததிலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே;
பொன்னி சூழ் திரு அரங்கா - காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே;
என்னை ஆள் உடைய கோவே - அடியேனே அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே;
மனத்தில் - (என்) மநஸ்ஸிலே;
ஓர் தூய்மை இல்லை - தெளிவு கொஞ்சமும் இல்லை;
விளக்க உரை
“குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும், ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ?” என்று கேட்க; நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை! எல்லா வித தீமைகளும் என் பக்கம் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார். மனத்தில் ஓர் தூய்மை இல்லை -- காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும் பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்தசுத்தி ஏற்படும், அப்படியுமில்லை யென்கை.
English Translation
O Fresh Tulasi-garland Lord, Lord of Ponni-surrounded-Tiru-Arangam! O King whom I serve! I have no purity in my heart, no sweetness in my speech. With impotent rage and anxious looks, I have uttered fiery words. What is going to be my fate now?
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
நன்றி தமிழ் வேதம்.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@kazhagesan2366
@kazhagesan2366 Год назад
பச்சை மலை போல் மேனியில் தோன்றிய இறைவா பெருமானே போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🎉❤❤❤
@gandhimathisornam428
@gandhimathisornam428 3 года назад
அருமை இனிமையான குரல்
@user-yc8zp5zl8j
@user-yc8zp5zl8j Год назад
அருமை.🙏🙏🌹🌹
@palanie788
@palanie788 Год назад
அழகான குரல் வளம் அருமை
@srinivasaraghavans191
@srinivasaraghavans191 3 года назад
Arumai. Glory to Lord Mahavishnu. And I want to be in Srirangam.
@venkatramansrinivasan2672
@venkatramansrinivasan2672 3 года назад
இசையும், இனிய திருமாலின் திருவுருவும் இனிமை .அருமை
@user-vl5ic1th6u
@user-vl5ic1th6u 3 года назад
நன்றி 🙏
@manjulaheramban536
@manjulaheramban536 Год назад
Fine rendering
@kamarajn4603
@kamarajn4603 3 года назад
Nice song
@venugopalakrishnan8103
@venugopalakrishnan8103 5 месяцев назад
Ranga bestows your Blessings to all.
@meenakshisrinivasan9507
@meenakshisrinivasan9507 Год назад
Nice patti. Wonderful to hear
@user-vl5ic1th6u
@user-vl5ic1th6u Год назад
Thank you 🙏
@meenakshisoundararajan2555
@meenakshisoundararajan2555 3 года назад
அருமை
@user-vl5ic1th6u
@user-vl5ic1th6u 3 года назад
நன்றி 🙏
@meenakshisrinivasan9507
@meenakshisrinivasan9507 Год назад
Enga patti is always rocking
@rajeshgoel7789
@rajeshgoel7789 Год назад
SUPER. SONG
@uthirakalyanasundaram736
@uthirakalyanasundaram736 Год назад
நமஸ்காரங்கள் மாமி
Далее
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 5 млн
திருப்பல்லாண்டு (1-12)
7:53
குருவே சிஷ்யா
21:14
Просмотров 99 тыс.