Тёмный

பா.உமா நந்தினி💥எட்டாம் திருமுறை 💥01 💥 🌸சிவபுராணம் 🌸 

Umaa Kanna
Подписаться 20 тыс.
Просмотров 38 тыс.
50% 1

💥எட்டாம் திருமுறை 💥 🌺மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்🌺
🌸1. சிவபுராணம்🌸
🌻1/12/2020 செவ்வாய்க்கிழமை🌻
ஈரோடு தொண்டர் சீர் பரவுவார் திருவடிகள் சரணம்!
சம்பந்த சரணாலயர் திருவடிகள் சரணம்!
ஆரூர் அடிகள் திருவடிகள் சரணம்!
குருவருளாலும் திருவருளாலும்
6 ஏப்ரல் 2020 முதல் 30/11/2020 வரை தொடர்ந்து 239 நாட்கள் தினமும் 4 தேவாரங்களை பாடி, பதிவிட்டும், மாலையில் அடியார்களுடன் குழுவில் இணைந்து பாடியும் வந்தார் நமது குருகுல ஓதுவார் செல்வி. பா.உமா நந்தினி. தேவாரம் முதல் 7 திருமுறைகளில் மொத்தம் 795 பதிகங்கள், 8239 திருப்பாடல்கள் பாடி நிறைவு செய்துள்ளார். ஆரூர் அடிகளின் வழிகாட்டுதலின் படி எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் திருவாசகம் தொடங்கி பாடிக்கொண்டிருக்கிறார். போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
1. சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு
/ %e0%ae%aa%e0%ae%b5%e0%...
தயா சிம்சுபாவின் வலையொளி தளத்தின் தொடர்பு
/ kaveritamilcreations
தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு
• தமிழினி அருள்ராஜ்

Опубликовано:

 

2 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@rajagopalvellingiri3624
@rajagopalvellingiri3624 Месяц назад
வார்த்தைகள் தெளிவாய் உள்ளது. உன்னை பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் உனக்கு எனது ஆசிகள்
@bharathiarunkrishna1964
@bharathiarunkrishna1964 2 года назад
இறையருள் தாயே உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு
@hindusthaan9
@hindusthaan9 Год назад
தாயே உமா...
@srikumarbijus
@srikumarbijus Год назад
சிவ சிவ ❤
@sivailavarasu7096
@sivailavarasu7096 2 года назад
Ganananthiniammavukku nooruvayathu om shiva shiva shiva om
@vemburajarumugam6695
@vemburajarumugam6695 Год назад
Very great achievement சாதனையாளர் திருமதி உமா நந்தினி
@UmaaKanna
@UmaaKanna 11 месяцев назад
செல்வி உமா நந்தினி
@narayananka1615
@narayananka1615 Год назад
மிகவும் அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
@hariharan2545
@hariharan2545 Год назад
சிவ சிவ அருமையை அக்கா
@sivailavarasu7096
@sivailavarasu7096 2 года назад
Omshivayanamaha aushunooruma ponnu shivane shiva shiva shiva shiva shiva
@user-wb2ck1wh1t
@user-wb2ck1wh1t 2 месяца назад
இறைவனுக்கு நன்றி மகிழ்ந்தேன் மகிழ்ச்சி சிவாய நம
@rathitamilsangam6181
@rathitamilsangam6181 3 года назад
அழகுத் தமிழை பாடும் வண்டு
@muthukumar.t8665
@muthukumar.t8665 2 года назад
Siva siva ❤
@Omvaalai
@Omvaalai 2 года назад
நன்று சிவா புத்தகலாயம் கோவை !!
@sivaselvan328
@sivaselvan328 3 года назад
இனிமையோ இனிமை கேட்க கேட்க திகட்டாதது திருவாசகம் எனும் தேன் நற்றுணையாவது நமசிவாய
@Quantumanandha
@Quantumanandha 2 года назад
உண்மை நமச்சிவாயத்தை நான் மறவேனே.
@spiritualrevolution2497
@spiritualrevolution2497 3 года назад
இறைவனை உணர்ந்து இன்புற்று வாழ்க நீடூழி வாழ்க வாழ்க வாழ்க
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 года назад
திருச்சிற்றம்பலம்!
@MIX-us6go
@MIX-us6go Год назад
amma
@spiritualrevolution2497
@spiritualrevolution2497 2 года назад
அருமையான தமிழ் உச்சரிப்பு நீ தமிழ்த்தாய்க்கு கிடைத்த பெரும்சொத்து நீண்ட ஆயுளுடன் நிறைவோடு வாழவேண்டும்
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Год назад
குருவேசரணம்,,நன்றிசகோதரி,,நமசிவாய,,நமசிவாய, நமசிவாய,,,🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sreeramanvl8160
@sreeramanvl8160 Год назад
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க....... ஈசன் அடி போற்றி...........
@Natarajan152
@Natarajan152 3 года назад
OM Nama Sivaya 🙏
@latharajamani8269
@latharajamani8269 3 года назад
Thiru chitrambalm🙏 Super ma. Nama shivaya🙏
@angavaiak9709
@angavaiak9709 3 года назад
கேட்பதற்கு இனிமையாக உள்ளது.சிவன் அருள் உனக்கு உண்டு. சிவாயநம . 🙏🙏🙏
@sundaravelam5711
@sundaravelam5711 3 года назад
நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@chockalingam6402
@chockalingam6402 3 года назад
ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை கொடுத்தது சிவபெருமானும் உமையம்மையும். தங்களுக்கு ஞானசம்பந்தன் கொடுத்ததாக உணர்கிறேன். வாழ்த்துகள்.
@muthun.5972
@muthun.5972 2 года назад
தெய்வத்திருமகள். சிவசிவ
@swarnalathap6974
@swarnalathap6974 Год назад
தேனினும் இனிய குரல்.அருமையாக பாடி இருக்கிறீர்கள் நீடூழி வாழ்க
@georgemichaelgeorgemichael6224
@georgemichaelgeorgemichael6224 2 года назад
அறுமை அறுமை பாப்பா தெய்வீகக்குரல்.
@futurebanker9375
@futurebanker9375 Год назад
Tq
@daramarraja6114
@daramarraja6114 3 года назад
அருமையான இருக்கு தங்கை.
@murughanapn2505
@murughanapn2505 3 года назад
Nanri Nanri Valka Valamudan
@gnanavelt.n.1937
@gnanavelt.n.1937 3 года назад
உளமார்ந்த வாழ்த்துக்கள்
@dskdsk103
@dskdsk103 3 года назад
ஓம் நம சிவாய
@saravanakumarv9401
@saravanakumarv9401 3 года назад
சரஸ்வதி தேவி அனுகிரகம் முழுவதும் கெடைக்க பெற்ற குழந்தை. பாப்பா நம்ம இலக்கு இதோடமுடியலடா இன்னும் நெறைய சாதிக்கனும்
@gokulakrishnan430
@gokulakrishnan430 3 года назад
அருமையான பணி. வாழ்த்துகள். தங்களின் ஆன்மீக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தங்களின் குருமார்கள் மற்றும் பெற்றோர்களின் பணிகளும் அளப்பரியது. இனறயருளால் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க. திருச்சிற்றம்பலம்.
@prabhanjan_
@prabhanjan_ Год назад
நின் குரலில் கேட்கும் போது ஏதோ ஓர் உணர்வால் நெஞ்சம் திளைத்து உருகி 🥹🥹🥹🤗🙏🏼🙏🏼 சரண் அடைகிறது. நன்றி மீனாட்சி 🥹🥹💫🫶🏼 ஓம் நமசிவய மீனாட்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 என்னையும் ஒரு பொருளாகி ஆட்கொண்ட தேனோ.... ❤️ ஆயுள் முழுதும் உன்னுடன் அதுவும் நீ தந்ததுவே!
@cookwithme3018
@cookwithme3018 3 года назад
அருமை. நீடூழி வாழ்க. உங்களை போல அனைத்து இந்து பெண்களும் இவற்றை படிக்க வேண்டும்.
@e.seenuvasan6779
@e.seenuvasan6779 3 года назад
ஓம் நமசிவாய
@naveenasiva3375
@naveenasiva3375 3 года назад
வணங்குகிறேன் நந்தினி
@snagasivam8
@snagasivam8 2 года назад
அருமை தங்கையே
@thirunavukkarasuchennai1829
@thirunavukkarasuchennai1829 3 года назад
நல்ல குரல் வளம். நல் வாழ்த்துகள் உமா நந்தினி.
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 3 года назад
Sivayanama Siva Siva
@NotAnyMore_Gang
@NotAnyMore_Gang 3 года назад
Thiruchitrambalam
@hemchandar3356
@hemchandar3356 2 года назад
சிவசிவ சிறப்பும்மா அருமையான குரல்வளம் பெருமானின் திருவருள் தங்கமே வாழ்க வாழ்க வளர்க வளர்க
@meenakshijayaraman2474
@meenakshijayaraman2474 3 года назад
இளங்கன்றே திருமுறையும்திருவாசகவளர்கமும் உன்னை திருஉள்ளத்தோடு வரவேற்கிறது வாழ்க வளர்க. நமசிவாய
@rasika5183
@rasika5183 6 месяцев назад
🙏🙏🙏
@danyaravikumar3288
@danyaravikumar3288 3 года назад
Valkapallandu arumai
@velmurugan1607
@velmurugan1607 3 года назад
பராசக்தி,பரசிவனருளால் பா.உமா நந்தினி அவர்கள் ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகை தரும் 16 பேரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!வாழ்க!🙌🏻🙌🏻புண்ணியன்(சிவன்) அருளினாள் வழிவழியாக நல் புகழ் பெற்று வாழ்..ழ்......க!🙏🏻திருச்சிற்றம்பலம்.!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சிராப்பள்ளி.
@akhilasuresh1707
@akhilasuresh1707 3 года назад
அருமை கண்ணம்மா வாழ்க வளமுடன்
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
🙏🙏
@vasanthakumaranparamasivam9554
@vasanthakumaranparamasivam9554 3 года назад
🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.
@rajinarayan8744
@rajinarayan8744 2 года назад
Oh wow !!Beautiful voice 👏👏👍👌blessed child ❤️ thank you 🙏
@sivapithan.
@sivapithan. 2 года назад
இனிமையான குரல்..தங்கள் சிவத்தொண்டு தொடரட்டும்... 🌼🌸ஓம் நமசிவாய🌸🌼
@bsaadhavan7275
@bsaadhavan7275 3 года назад
சிவத் தொண்டிற் சிறந்த எம் திருமகளே!, ஈசன் அருளே நிறைக!💐💐 இனிய வாழ்த்துக்கள்💐💐
@srisritharan5656
@srisritharan5656 3 года назад
இனிய தமிழ் இசையால் திருமுறையை தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@saranya555
@saranya555 3 года назад
Siva siva
@ChandraSekar-my1te
@ChandraSekar-my1te 3 года назад
Siva,siva, sivayanama allamallak
@geminiganesan5435
@geminiganesan5435 3 года назад
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி என்ற ராகம் என்று நினைக்கின்றேன். அருமை(சுசி லா பாடல்)
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
மோகன ராகம் ஐயா🙏 சிவ சிவ🙏
@tamilcb3s576
@tamilcb3s576 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி வளர்க வாழ்க வளமுடன்
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
போற்றி ஓம் நமசிவாய 🙏
@RameshK-yc2rj
@RameshK-yc2rj 3 года назад
திருச்சிற்றம்பலம் ராமா ராமா ராமா
@visvaananth861
@visvaananth861 2 года назад
🌻🌻🌺🕉🌺🌻🌻🌻.. சிவா திருச்சிற்றமபலம் ! ",/ "
@nandinis1112
@nandinis1112 3 года назад
Gud goin💕 God bless ur work
@Thuruva.5
@Thuruva.5 4 месяца назад
Uma na உன் fan
@dhanushkodipalanisamy2832
@dhanushkodipalanisamy2832 3 года назад
You are great .God bless you
@skylabbardhavi5617
@skylabbardhavi5617 2 года назад
உங்கள் குரலில் கேட்கும்பொழுது கண்ணீர் பெருகுகிறது உள்ளம் உருகுகின்றது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிவ புராணம் தன்னை தங்கள் குரலில் கேட்கவே சிந்தை மகிழ்ந்தேன் அற்புதம் ஆச்சரியம்
@sivanesh1288
@sivanesh1288 3 года назад
சிவ 🙏
@licharimf
@licharimf 3 года назад
திருச்சிற்றம்பலம் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏
@originality3936
@originality3936 3 года назад
அருமை...ஒம் நமசிவாய
@balasubramanian150
@balasubramanian150 3 года назад
வாழ்க! வாழ்க! வருங்காலத்தின் நம்பிக்கை உடுமலை உமையே ! வாழ்க!நீ ,என்றென்றும் !
@kathiravannadaraj327
@kathiravannadaraj327 3 года назад
superb.....om namashivaya
@nahetrader9801
@nahetrader9801 3 года назад
நம சிவாய
@banklootful
@banklootful 2 года назад
Great rendering daughter. Proud of you Amma. I like this rendering more than people splitting Sivapuranam and giving portions. Ex: Ilayaraja. அருமையான வழங்கல் மகளே. சிவபுராணத்தைத் துண்டு துண்டா வெட்டிப்பாடுவதில் உகப்பில்லை. இப்படி முழுமையாக வழங்கியதே சிறப்பு
@gopal920
@gopal920 2 года назад
சிவன் கோயில்களில் முன்பு தேவாரம் திருவாசகம் செழுமையாக இருந்தது. இப்போது அதை மீட்டு எடுக்கும் திருப்பணியை திறம்பட ஆற்ற அவனருளாலே இயக்கப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பொலிக பொலிக பொலிக உனது இறைப்பணி அவன் மகிழ்ச்சிக்காக. முறையாக ஓதுவார் இடம் பயின்று பழைய பாணியில் மெதுவாக பண்ணிசைத்து போற்றுவது மேலும் நலம் பயக்கும். சங்கீத ஞானமும் மேலும் மெருகேறும். வாழ்க வளமுடன்.
@KaveriTamilCreations
@KaveriTamilCreations 3 года назад
மிக அருமை வாழ்த்துக்கள் 🌹🌹 உமா நந்தினி
@vadivadisivam5551
@vadivadisivam5551 3 года назад
🙏🙏👏👏👏👏👏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷🌺
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@somaskandans4136
@somaskandans4136 3 года назад
அருமை சிவ சிவ
@sivayanamesivayaname6135
@sivayanamesivayaname6135 3 года назад
அருமை தங்கை நல்லா பாடுரிங்க உங்கக்கூட பேசனும் மா சிவாயநம
@KrishnaMurthy-sl4vp
@KrishnaMurthy-sl4vp 2 года назад
சிவனருளுடன் வாழ்க வளமுடன் நீடூழி
@chitrakrishnakumar722
@chitrakrishnakumar722 3 года назад
Aum Namachivaya
@naveenasiva3375
@naveenasiva3375 3 года назад
திருச்சிற்றம்பலம்
@arasanuma4258
@arasanuma4258 3 года назад
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி... சிவாயநம
@Hemalatha-eu3mj
@Hemalatha-eu3mj 3 года назад
மிகவும் அருமை திருச்சிற்றம்பலம் சிவ சிவ
@shamapararajasingham7357
@shamapararajasingham7357 3 года назад
you are a gifted child. your parents are blessed.in this useless kaliyugam children are not praying because of ego
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
@vijaysurya709
@vijaysurya709 3 года назад
Arumai !
@krishnamurthy-wj6sh
@krishnamurthy-wj6sh 3 года назад
அருமை அருமை valthkkal
@neilvisumbuvasudevan9591
@neilvisumbuvasudevan9591 3 года назад
உமாநந்தினி, பெற்றோர் உன்னைப் பெற எந்நோற்றார்கொல்!!!!
@meenakshijayaraman2474
@meenakshijayaraman2474 3 года назад
திருவாசகமும்
@mbslakshmi6838
@mbslakshmi6838 3 года назад
Aha arupudha padal❤️
@sreeramanvl8160
@sreeramanvl8160 Год назад
அவனருளாலே அவன் தாள் வணங்கி........
@krishnamoorthy2772
@krishnamoorthy2772 3 года назад
வாழ்க பல்லாண்டு. உன் பக்தி பெருகட்டும். உன் தொண்டு பெருகட்டும். 63நாயன்மார்ல் அருளும் உனக்கு உண்டு. சிவனே உன்னை ஆட்கொண்டு வீட்டார். உன்னையே கூறவேண்டும் என்றால் காரைக்கால் அம்மையாக தோன்றுகிறீர்கள். ஓம் நமசிவாய.
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
போற்றி ஓம் நமசிவாய🙏🙏
@NotAnyMore_Gang
@NotAnyMore_Gang 3 года назад
Thankyou sister
@ramachandranramasamy710
@ramachandranramasamy710 3 года назад
I pray the Almighty for the blessings be showered on this divine child to be with good health and happy to create world record
@7d2h3an9d8
@7d2h3an9d8 3 года назад
This sirrumi singing so beautifully inspires us elders to move Godwards !
@ananthnachimuthu6498
@ananthnachimuthu6498 3 года назад
God Bless you
@kamakshi53
@kamakshi53 3 года назад
🙏🙏🙏🙏🙏
@baskarann8457
@baskarann8457 3 года назад
Esa empiran,Ellam valla Eraiva param porul. Om esane potree potree potree
@flutekumar2361
@flutekumar2361 10 месяцев назад
குரல்வளம் நன்றாக உள்ளது புல்லாங்குழல் இசையுடன் பாடினால் இன்னும் அருமையாக இருக்கும்.
@umamaheswari841
@umamaheswari841 3 года назад
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!! அவன் அருளாளே அவன் தாள் வணங்கி.... அவன் அருள் முழுமையாக வாய்க்கப் பெற்றவரால் மட்டுமே அவன் புகழ் பாட முடியும். உன் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன் தாயே!! ஞானக் குழந்தை நீ!! அவன் அருளாளே நீடூழி வாழ்க வளமுடன்!! வாழ்க பல்லாண்டு!!
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
சிவாய 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@umamaheswari841
@umamaheswari841 3 года назад
வகுப்பு எடுக்குறிங்களா மா?? இணைய வழியில்?
@umasenthil9114
@umasenthil9114 3 года назад
கண்ணீர் வந்துவிட்டது தா யே
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
சிவ சிவ 🙏
@kumuthagopalan-lo8mt
@kumuthagopalan-lo8mt Год назад
திருச்சிற்றம்பலம் 🙏 வாழ்த்துகள் மா... 7-ஆம் திருமுறை பதிவு உள்ளதா மா...?
@senthilkumarn6627
@senthilkumarn6627 Год назад
Pitiyathan thevara padal tamil meaning please
@rajeshvmadhusudanan
@rajeshvmadhusudanan 2 года назад
Namasivaya ! Please given name as Thiruvasakam in English also..
@chithraganesan4058
@chithraganesan4058 2 года назад
உருத்திராட்சம் எங்கே ?
@ushak7386
@ushak7386 3 года назад
Parents are resposible for proper guidance see! Othet relogion ..they gi to the praying place with parents
Далее
BRO, EXCEEDED EXPECTATIONS 🥶 #shorts
00:13
Просмотров 355 тыс.