Тёмный
No video :(

பிறந்த குழந்தைக்கு காது பரிசோதனை தேவையா?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 124
50% 1

இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் சுமார் 8 பேருக்குப் பிறவியிலேயே காது கேட்பதில்லை என்கிறது ‘இந்தியன் பீடியாட்ரிக்ஸ்’ எனும் மருத்துவ இதழ். நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்திருந்தால், கர்ப்பிணிக்கு ருபெல்லா, மேகநோய் போன்ற நோய்கள் ஏற்படுமானால் அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வீரியமான மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால், பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேட்காமல் போகலாம். அடுத்து, குறை எடையுடன் குழந்தை பிறந்திருந்தாலோ, குழந்தை பிறந்த சில மாதங்களில் அதற்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டோலோ, பிறவிக் குறைபாடுகள் காணப்பட்டாலோ குழந்தையின் உட்காது பாதிக்கப்பட்டு, கேட்கும் திறனும், அதைத் தொடர்ந்து பேச்சுத் திறனும் இல்லாமல் போகும். இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது, காது உட்பதியக் கருவி.எப்படிச் செயல்படுகிறது?வயதானவர்களில் சிலர் பொருத்திக்கொள்ளும் ‘காது கேட்கும் கருவி’ நமக்குத் தெரியும். ஒருவர் பிறந்து வளர்ந்த பிறகு காதுகேளாமை ஏற்பட்டால், அப்போது அவருக்குக் காது கேட்க உதவும் கருவி இது. காது உட்பதியக் கருவி என்பது வேறு.இந்தக் கருவியில் வெளிக்கருவி, உட்கருவி என இரண்டு பகுதிகள் உள்ளன. வெளிக்கருவியைக் காதுக்குப் பின்புறம் வெளியில் தெரிவதுபோல் பொருத்துகின்றனர். இதில் மைக்ரோபோன், ஒலிபெருக்கி, ஒலியை உள்ளே அனுப்பும் அமைப்பு, பேட்டரி ஆகியவை உள்ளன. மைக்ரோபோன் ஒலியைக் கிரகிக்கிறது. ஒலிபெருக்கி ஒலியின் அதிர்வுகளை அதிகப்படுத்தி, ‘டிஜிட்டல் சிக்னல்’களாக மாற்றுகிறது. இந்த சிக்னல்களை கம்பிபோல் இருக்கும் ஓர் அலைபரப்புக் கருவி (Transmitter) காதின் உட்கருவிக்கு அனுப்பிவைக்கிறது. உட்கருவியில் ஒலிவாங்கி, ஸ்டுமுலேட்டர் (Stimulater), காந்தம் ஆகியவை அடங்கியுள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதைக் காதின் பின்புறம் தோலுக்கு அடியில் பொருத்தி, தையல் போட்டு மூடிவிடுகின்றனர். கம்பிபோல் இருக்கும் ஸ்டுமுலேட்டரை உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்திவிடுகின்றனர். அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டுமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது. பிறகு, ஸ்டுமுலேட்டரானது டிஜிட்டல் சிக்னல்களை மின்சிக்னல்களாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் செயலுக்கு வருகிறது. பிறந்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைக்குக் காது கேளாமை உள்ளதைக் கண்டுபிடித்துவிட வேண்டும். ஐந்து வயதுக்குள் இக்கருவியைப் பொருத்திவிட வேண்டும். அப்போதுதான் குழந்தைக்குக் கேட்கும் திறனையும் பேச்சுத் திறனையும் உண்டாக்க முடியும். தமிழகம் முதலிடம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத ஏழைக் குழந்தை களுக்கு ‘காக்ளியர் இம்பிளான்ட்’ (Cochlear implant) எனும் உட்பதியக் கருவியைப் பொருத்தி, காது கேட்க வைக்கும் நவீன சிகிச்சைமுறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் இதற்கு ரூ. 7 லட்சம் செலவாகிறது. சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்பட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் இதை இலவசமாகவே மேற்கொள் கின்றனர்.
இந்த இலவச அறுவை சிகிச்சைத் திட்டம் இந்தியா முழுவதும் 2012-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவருக்கு இதயத் தமனியில் ‘ஸ்டென்ட்’ பொருத்தியவுடன் மாரடைப்பு சரியாவதுபோல் அல்ல இது. குழந்தைக்கு உட்பதியக் கருவியைக் காதில் பொருத்தியதும் இயல்பான காதுபோல் ஆகிவிடுவதில்லை. இதைப் பொருத்திக்கொண்ட குழந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான ‘பேச்சு ஒலிகளை உணறும் பயிற்சிகள்’ (Audio Verbal Therapy) தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிதான் குழந்தைக்குக் கேட்கும் ஒலிகளை உணரவைத்து, அதைத் தொடர்ந்து பேசவும் வழி செய்கிறது.
எழுதியவர்:- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

Опубликовано:

 

16 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R1qhBbZaG3g.html
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aREaXz_x5AQ.html
@v.muthukumarmuthu2781
@v.muthukumarmuthu2781 3 месяца назад
Sir 9month baby ku aval kodukalama
@selvanRathinasamy
@selvanRathinasamy 3 месяца назад
வீட்டில் சமைக்கும் அனைத்து உணவுகளையும் நன்கு பிசைந்து தரவும்
Далее