Тёмный
No video :(

3500 years old house in vadailuppai - kanchipuram ( Very Old House In The World ) 

Shalini's Tamil Viral Videos - தமிழ் வைரல் வீடியோ
Просмотров 3,6 тыс.
50% 1

காஞ்சிபுரம் அருகிலுள்ள வடஇலுப்பை மருந்தீஸ்வரர் கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அம்பிகையுடன் காட்சியளிக்கிறார். இவரை ராகு காலத்தில் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.
தல வரலாறு: பாலாற்றின் கரையில் அமைந்த தலம் வட இலுப்பை. இங்குள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் பலரும் 350 முறை வந்து, தங்கி பூஜை நடத்தியுள்ளனர். வடமாநில யாத்திரை செல்ல இருந்த காஞ்சிப்பெரியவர் இந்த ஊரிலுள்ள குமார சுவாமி தீட்சிதர் வீட்டில் தங்கியிருந்தார். வீட்டின் எதிரிலுள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு அவர் சென்ற போது, பெரியவருக்கு காமாட்சி அம்மன் தரிசனம் நேரில் கிடைத்தது. அதனால், "காமாட்சியம்மனின் சாந்நித்யம் இங்கு பூரணமாக இருக்கிறது' என்று பக்தர்களிடம் தெரிவித்தார்.
தபோவனம் ஞானானந்த சுவாமி, சேஷாத்ரி சுவாமி, பூண்டி மகான் போன்ற ஞானிகளும் இங்கு வந்து தரிசித்துள்ளனர். மேற்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் மருந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். இவருக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்திற்கு நோய் தீர்க்கும் மருத்துவ சக்தி உண்டாகிறது.
அம்பிகையுடன் பைரவர்: இங்குள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அம்பிகையுடன் காட்சி அளிப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு. தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலத்தில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
மங்கள ஆஞ்சநேயர்: தட்சிணாமூர்த்தி சன்னிதியின் எதிரில் சர்வ மங்கள பக்த ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் விதத்தில் வீற்றிருக்கின்றனர். இவர்களைத் தரிசிப்போருக்கு தடை நீங்கி விரைவில் திருமண யோகம் உண்டாகும். புத்திர தடை விலகி, குழந்தை பாக்கியமும் கிடைக்கும். ஜூலை 6ல் குரு பெயர்ச்சி நடக்க உள்ளதால், இத்தலத்து தட்சிணாமூர்த்தியையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் குரு தோஷம் அகலும்.
பிருந்தாவனம்: வேதத்தை உயிர் மூச்சாக கருதி வாழ்ந்த குமாரசுவாமி தீட்சிதரின் பிருந்தாவனம், கோவில் வளாகத்தில் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இவரை வழிபடுகின்றனர்.
திருப்பணி: தற்போது மருந்தீஸ்வரர், காமாட்சி, ஆஞ்சநேயர், சுவர்ண ஆகர்ஷண பைரவர், பரிவார தேவதைகளின் சன்னிதிகள் பிரதிஷ்டை செய்யும் திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
இருப்பிடம்: காஞ்சிபுரம்- ஆற்காடு சாலையில் 16 கி.மீ.,
திறக்கும் நேரம்: திருப்பணி முடியும் வரை மதியம் 2.00- இரவு 7.00 மணி.
அலைபேசி: 98401 13169, 93455 93227.

Опубликовано:

 

12 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@gopalakrishnanvai.7960
@gopalakrishnanvai.7960 2 года назад
மஹான்கள் அனைவருக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏🙏🙏
@sitalakshmivenkatesan5058
@sitalakshmivenkatesan5058 Год назад
இந்த மாதிரி ஒரு புண்ணிய ,அமைதியான இடத்தை தினமும் பக்தர்களுக்காக பார்க்க ஏன் அனுமதி இல்லை?
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 7 месяцев назад
Sir Your information seem to be story and not fact. It cant be 2500 years old. When kanchi kamatchi temple built. This can be maximum 200-250 years old. Please dont confuse public. Where from you got the details of 2500 years old and Adi shankararar visited this house. Need script to prove and make public to believe. Without concrete evidence dont spread news. Already youngsters ask many questions to produce proof and people like add further doubts.
Далее