Тёмный
No video :(

உங்களின் பள்ளிக் குழந்தைக்குச் சரியான டிஜிடல் பெற்றோராக இருப்பது எப்படி?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 88
50% 1

இன்றைய சூழ்நிலையில் டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டன. தவறு என்று தெரிந்துமே பிறந்த குழந்தைகள் முதல் எல்லாக்குழந்தைகளுக்கும் டிஜிட்டல் சாதனங்களை காண்பிக்கிறோம். குழந்தை அழுதால், குழந்தை பிடிவாதம் பிடித்தால், கேப்பதற்காக, சந்தோஷப்படுத்த எனப் பல விஷயங்களுக்காக டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். பயன்படுத்தும் அதே வேளையில் நம் மனதில் ஒரு பயம் இருக்கும். நிறைய மருத்துவர்கள் டிஜிட்டல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள் எனச் சொல்கிறார்கள். அதிகத் திரை நேரம் குழந்தைகளைப் பாதிக்கும் எனக் கூறுகிறார்கள். இதையெல்லாம் தெரிந்த பிறகும் கொடுக்காமலும் இருக்க முடியல, கொடுத்தாலும் பயமாக இருக்கும். எப்படி ஒரு சிறந்த டிஜிட்டல் தந்தையாக, தாயாக, பெற்றோராக இருக்கனும் என்பதைப் பார்ப்போம்.
குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை டிஜிட்டல் சாதனங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இரண்டு வயதில் இருந்து 6 வயது வரை ஒரு மணி நேரமும் அதன் பிறகு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கவும்., பள்ளிக் கூடங்களில் டிஜிட்டல் வழியாக வீட்டுப் பாடங்கள் தந்தால் தயவு செய்து அதை மாற்றச் சொல்லுங்கள், பள்ளிக்கூடத்தில் தினமும் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கச் சொல்லுங்கள்.
இது தவிர வீட்டில் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் நாம் ஒரு முன்மாதிரியாகக் குழந்தைகளுக்கு இருப்பது தான். நாம் பயன்படுத்துகிற திரைச் சாதனங்கள், திரை நேரத்தைக் குறைக்க வேண்டும். தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவு செய்வது, குழந்தைகளைப் பாதிக்க கூடிய நிகழ்ச்சிகளைத் குழந்தையுடன் சேர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 13 வயதுக்கு மேல் facebook, twitter, snapchat, insta சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதி தரலாம். 18 வயதுக்கு மேல் தான் youtube தளங்களை அவர்களாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆனால் இன்றைச் சூழ்நிலையில் ஆறாம் வகுப்பு தாண்டிய உடனே ரீல்ஸ், போடுகிற குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறையஇருக்கின்றன
, முதலில் குழந்தைகளிடம் பேச வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லித் தரக்கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்ல வேண்டும், சுற்றி வளைத்து மறைமுகமாகச் சொல்ல வேண்டியதில்லை. சொல்லும் போது கோபப்பட்டு, திட்டி, நமது நிதானத்தை இழக்காமல் அமைதியாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். எந்த வயதில் எந்த மாதிரியான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்?, பயன்படுத்தும் போது என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?, நாள் ஒன்றுக்கு எவ்வளவு மணி நேரம் பயன்படுத்த வேண்டும்? எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித் தர வேண்டும். அவற்றைக் குழந்தைகள் கடைபிடிக்கச் செய்ய வேண்டும். அவர்கள் பயன்டுத்துகிற சமூக வலைத்தளங்கள், விளையாட்டுகள், செயலிகள் எல்லாவற்றையும் நாமும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். உங்கள் குழந்தைத் தேவையில்லாததைப் பார்க்கிறார்கள், ஆபாசமான விஷயங்கள் அவர்கள் அறியாமலேயே வருகிறது என்றால் parental controls பயன்படுத்தவும்.
குழந்தை எதனைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை பேசி முடிவு செய்யலாம். இந்தக் கட்டுப்பாட்டு விதிகளை வீட்டில் உள்ள அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாடுகளை குழந்தை மீறினால் , அதிக நேரம் பயன்படுத்தினால் அவர்களுக்குக் கொடுக்கும் சில சலுகைகள் மறுக்கவும். குழந்தைகள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் .இன்ஸ்டா போன்றவற்றில் நீங்களும் நண்பராக இருந்து கண்காணியுங்கள், பின் தொடருங்கள்.
அவர்களுக்கு மோசமான விஷயங்கள் ஏதவாது பகிரப்படுகறதா? என்பதைக் கவனிக்கவும். குழந்தையுடன் வலைத்தளத்தை இருவரும் ஒன்றாகப் பயன்படுத்தும் போது, விளையாடும் போது சரியான , தவறான விஷயங்கள் எவை என்று புரியவைக்கலாம். சமூக வலைத்தளங்களில் உங்களின் புகைப்படங்களைத்\செய்திகளைத், தவறான பரப்பினால், உங்களை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.
காணொலிகளைக்காண சொடுக்கவும்.
மின்னணுச்சாதனங்களும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளும் : • மின்னணுச்சாதனங்களும் க...
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் : • குழந்தைகள் செல்போன் பய...

Опубликовано:

 

6 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее