Тёмный
No video :(

குழந்தை உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும்போது செய்ய வேண்டியது / கூடாதது என்ன?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 106
50% 1

இந்த வருடம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன.. கோடைவிடுமுறையில் உங்கள் வீட்டிற்கு நிறைய உறவினர்கள் வந்து இருப்பார்கள், நீங்களும் நிறைய உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வந்திருப்பீர்கள். இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்திருக்க வேண்டும், நாம எப்படி நடந்து கொண்டோம் என்பதையோசனை செய்து பார்க்க வேண்டும். இது அடுத்த வருடம் கோடைவிடுமுறைக்கு நமது வீட்டிற்கு வருகை தரும் உறவினர்களுக்கும் நமக்கும் உதவியாக இருக்கும்.
வெளியூர் மற்றும் உள்ளூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நாம் போகும் போது குழந்தைகளுக்குச் சாப்பிடுவதற்கு திண்பண்டங்களை வாங்கிப் போகவும். எந்த வீட்டிற்குப் போகும் போதும் அவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு எந்த வகையாகத் திண்பண்டங்கள் ஒத்துக்கொள்ளும், ஒத்துக்கொள்ளாது எனத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற் போல் வாங்கிக் கொண்டு செல்லலாம். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து விட்டு, ஆரோக்கியத்திற்கு உதவக் கூடிய, நல்ல சத்துக்களைத் தரக்கூடிய பழங்களை வாங்கிக் கொண்டு செல்லலாம். உதரணமாக ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று பிரசித்திபெற்றதாக இருக்கும் சேலம் மாம்பழம், ஈரோடு நகப்பலம், சத்தியமங்கலம் கதலி வாழைப்பழம் இது போல வாங்கிக் கொடுக்கும்போது அந்த ஊரைப்பற்றி, ஊரின் சிறப்பைப் பற்றிய விஷயங்களை குழந்தை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும், குழந்தையிடம் நல்ல உணவுப் பழக்க வழக்கம் ஏற்படும்.
குழந்தையின் வயதுக் குஏற்றார்ப் போல் சிறு குழந்தைகள் என்றால் சத்தம் எழுப்பக் கூடிய பொம்மைகள், ஜெ பி சி செட், கட்டிடம் கட்டக் கூடிய பொம்மைகள் வாங்கித் தரலாம். பல வண்ணங்கள் நிரப்பக் கூடிய புத்தகங்கள் வாங்கித் தரலாம். பெரிய குழந்தைகளாக இருந்தால் தனியாக விளையாடக் கூடிய Cubes, Sudoku, பந்து போன்றவை வாங்கித் தரலாம் அல்லது பள்ளிக்கு பயன்படக் கூடிய பேக், ஜியோமெட்ரிபாக்ஸ் போன்றவை வாங்கித் தரலாம். பொருட்களை வாங்கித் தருவதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் செய்யும் நல்ல செயல்களைக் கண்டு பாராட்டவும் செய்யலாம்.
குழந்தைகள் என்றாலே விளையாடுவது மிகவும் பிடிக்கும், அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்று விளையாட வைத்து அழைத்து செல்லலாம். டிவி, செல்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு நல்ல கதைகள் சொல்லலாம்.
உறவினர் வீட்டில் அதிக நாட்கள் தங்கும்பொழுது அவர்களின் வீட்டில் செய்யக் கூடிய சிறு சிறு பணிகளை நாம் பகிர்ந்து செய்யலாம். குழந்தைகள் தூங்கும் நேரத்தில் வெளியில் சுற்றிப் பார்க்கச் செல்லுவதை தவிர்க்கலாம். வீட்டில் இருந்து கிளம்பும்போது குழந்தைகள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக உண்டியலுடன், சிறு தொகையும் தரலாம். இது குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும்.
நாம் உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் போது குழந்தைகள் ஏதாவது தவறு செய்திருந்து அவர்கள் பெற்றோர் குழந்தையைத் தண்டிக்கும் போது இடையில் புகுந்து விடுங்கள் என்று கூறி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையின் பெற்றோர் செய்வது தவறு என்று தெரிந்தால் மட்டும் அவகளிடம் தனியாக இருக்கும் போது ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். குழந்தைகள் தவறாகக் கற்றுக்கொள்ளக் கூடிய செயல்களை நாம் செய்யக்கூடாது. வீட்டில் உள்ளவர்கள் எப்போது இவர்கள் வீட்டைவிட்டுப் போவார்கள் என்று எண்ணாமல், இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போங்கள் என்று சொல்லும் அளவிற்கு நம் செயல்கள் இருப்பது சிறப்பாக இருக்கும். உறவினர்கள், குழந்தைகள் இருக்கும் இடத்தில் உறவுகள் மேம்பட விட்டுக்கொடுத்துச் செல்வது மிகவும் அவசியம்.

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Running With Bigger And Bigger Feastables
00:17
Просмотров 32 млн
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13