கடந்த சில ஆண்டுகளாக ஜம்முவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களைக் கூர்ந்து கவனித்தால், தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடாமல் இருப்பது ஒரு புதிய போக்காக வெளிப்படுகிறது.
இந்தப் போக்கு, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்முவின் பூஞ்ச் மற்றும் மெந்தார் பகுதிகளில் தீவிரவாதிகளுடனான மோதலில் மொத்தம் ஒன்பது ராணுவ வீரர்கள் இறந்தபோது துவங்கியது.
இந்த இரண்டு மோதல்களுக்கு பிறகு இந்திய ராணுவம் காடுகளில் ரோந்துப் பணிகளைத் துவங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடர்ந்த காடுகளில் மோதல்கள் நடப்பதாகச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
இது இன்று வரை நீடிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல வாரங்களுக்குப் பிறகும், தீவிரவாதிகள் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#JammuAttack #JammuAndKashmir #Jammu
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
28 окт 2024