Тёмный
No video :(

Thiruppugazh thaNdaiaNi (thiruchchendhUr) - திருப்புகழ் தண்டை அணி (திருச்செந்தூர்) 

Yaazh Music
Подписаться 46 тыс.
Просмотров 600 тыс.
50% 1

Thiruppugazh thaNdaiaNi (thiruchchendhUr) - திருப்புகழ் தண்டை அணி (திருச்செந்தூர்)
#thirupugazh #thirupugal #murugansong #tamildevotionalsongs #tamildevotional #tamilnadu #pazhanimala #arunagirinathar #yaazhmusic #pazhani #thiruchendur
Written by - Saint Arunagirinadhar
Music Programming and Arranging - Rajaravivarma
Mixing and Mastering - KeerthiVasan (Rogue Wav Records)
Murugar 3d Art - Sathesh Kumar
Kumbani Scene Art - Theena
Video editing and graphics - FB Design Studio Adhi Instagram - / fbdesignstudio
Vocals - Venkatesan Thirunaukkarasu Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
......... சொல் விளக்கம் .........
தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி,
வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி,
கிண்கிணி,
சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும்,
தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன்
கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க
நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன்
இன்பவுரி கொண்டு ... வலம்வந்து
நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து
நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே,
கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட,
கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய
மணிமுடிகளும்,
கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும்,
சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும்,
கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும்,
சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும்,
கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக
என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற
மாட்டாவோ?
புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்)
உலகமும்,
கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட
வெளியண்டங்களூம்,
பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ,
வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது,
பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி
அழகு சிறந்து
எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று
புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை
சிவனும்
சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக
கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள்
செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும்,
என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி
நடனம் கொள்ளும்
கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே
கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின்
சந்தன மணம் வீசும்
உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும்
தம்பிரானே.
thaNdaiaNi veNdaiyang kiNkiNisa dhangaiyun
thaNkazhalsi lambudan ...... konjavEnin
thandhaiyinai munparindhu inbavuri koNdunan
santhodama Naindhunin ...... RanbupOlak
kanduRaka dambudan sandhamaku dangaLum
kanjamalar sengaiyum ...... sindhuvElum
kaNgaLumu gangaLum chandhiRani RangaLum
kaNkuLira endranmun ...... sandhiyAvO
puNdarikar aNdamum koNdabagi raNdamum
pongiezha vengaLang ...... koNdapOdhu
pongiriye namchiRandhu enginumva Larndhumun
puNdarikar thandhaiyum ...... sindhaikUrak
koNdanada nampadham sendhililum endranmun
konjinada namkoLum ...... kandhavELE
kongaikuRa mangaiyin sandhamaNam uNdidum
kumbamuni kumbidun ...... thambirAnE.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@iamindian2463
@iamindian2463 5 месяцев назад
திருச்செந்தூர் பாதையாத்திரை போகும் போது night 11: 30 to 12 இருக்கும் கால் வலிக்குது nu இந்த song கேட்டு dance ஆடிகிட்டு வந்தேன் என்ன அறியாமல் ஏன் ஆடுனோம் அப்புறம் யோசிச்சேன் இன்னைக்கு தான் அதுக்கு விளக்கம் கிடைத்து இந்த திருப்புகழ் அருணாகிரி நாதர் பாட முருகர் நடன மாடுன song ahm 😍
@mlatha3663
@mlatha3663 3 месяца назад
Sema🎉
@NatrajR-gf8dq
@NatrajR-gf8dq 2 месяца назад
Super
@reghungl2352
@reghungl2352 24 дня назад
Wow muruga
@dilakshansivanesarajah1163
@dilakshansivanesarajah1163 12 дней назад
❤❤❤❤😮❤❤❤❤
@sundaramsrividya2255
@sundaramsrividya2255 7 дней назад
❤❤❤❤❤❤
@YaazhMusic
@YaazhMusic Год назад
Vanakam Makkale, Thanks for all your overwhelming support so far. Many of you contacted me about releasing more Thirupugazh songs; I want to let you know the reality from my side and what we can do together. First of all, I am not a full-time RU-vidr; I am working full-time in a company outside India and doing this for my love and passion towards Tamil and Tamil God Murugan. I do this during my weekends usually. I have done more than 25 Thirupugazh songs, all working remotely with many talented music directors across the globe. Unfortunately, we are not able to create the videos at the same speed as it requires many pieces - starting from a creative storyboard, then getting the 3D models/artwork that tells the story of the song, and finally, the video editing and animation. I look for quality and uniqueness in every video, which slows me down further :-). Here are a few things that might help us get more songs out soon, 1.Please support by subscribing and recommending the channel to friends and family. This will give us visibility and help us reach out to budding talents with the same passion to help with some of the video work. 2.Refer any budding talents in 3D modeling, artwork, and video animation who have the love and passion for Tamil and Lord Muruga. I am not looking to work with corporate companies as that will not come with passion. 3. Now that you know my state, any other ideas from you all will help, too. We can make it happen to together for Lord Muruga !
@siva96138
@siva96138 Год назад
Take your own time sir... we always need a good one from you. Don't be stressed....
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x Год назад
உங்கள் தொண்டிற்க்கு முருகப்பெருமான் அருள் என்றுமே துணை செய்யும்...
@Anand13691
@Anand13691 Год назад
முருகன் உங்கள் உடனே இருந்து அருள் புரிவார் 🙏
@dev4142
@dev4142 Год назад
V r love ur art work sir. Go ahead. & May our Lord muruga will give wealthy and healthy life and to do the efficient work in Thirupuggazh. 🎉
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 Год назад
❤தேனினும் இனிய திருப்புகழ் பாடல்கள்! 🎉Heartfelt thanks and love for making such wonderful videos on our favourite Murugan. 🙏 Wishes for your dream come true and sure our dear lord முருகன்❤ will shower his divine blessings to happen this sooner. 🙏
@saikrishna-qh3oi
@saikrishna-qh3oi Год назад
மெய் மறந்து எத்தனை முறைக்கேட்டேன் என எனக்கே தெரியவில்லை விரைவில் வேல் விருத்தம்பாடவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@kazhagesan2366
@kazhagesan2366 11 месяцев назад
திரு ப்புகழ். முருக பெருமான். அருளால் கிடைத்த அருணகிரிநாதர். மூலம் கிடைத்த அரிய பொக்கிஷம் பெருங்கடல் ஒரு தர்மம் என்பது ஒரு நாளும் அழிவில்லாத சனாதன தர்மம் ❤🎉
@arumugamsanthi6706
@arumugamsanthi6706 11 месяцев назад
ஓம் ஶ்ரீ மத் குமரகுருதாச குருப்யோநம: கண்குளிர எந்தன் முன் சந்தியாவோ🚩🚩🚩🚩🚩🚩
@saralakarthiksriram4812
@saralakarthiksriram4812 9 месяцев назад
Daily iam hearing this song. Thanks brother
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 3 месяца назад
கோடானு கோடி நன்றிகள்.முருகனை நேரில் பார்த்த திருப்தி இந்த பாடலின் வடிவில் கிடைத்தது
@sakthirajendran7523
@sakthirajendran7523 7 месяцев назад
🎧இந்த பாடலை கேட்க தொடங்கிய நாள் முதல்✨என் வாழ்க்கையில் நிறைய மாற்றதை காண்கிறான்💯முருகா...♥️🙏
@ABHILASH1887
@ABHILASH1887 7 месяцев назад
OM SARAVANA BHAVA
@sivakamiramaswamyperumal6060
@sivakamiramaswamyperumal6060 2 месяца назад
​@@ABHILASH1887🎉🎉🎉
@kalaraman4180
@kalaraman4180 Год назад
அனைத்து திரூப்பகழ் பாடல் களையும் யாழ் இசை யில் வெளியிடவேண்டும்.
@sreeammanagrofoods5588
@sreeammanagrofoods5588 9 месяцев назад
ama
@balasingamthujayanthan1289
@balasingamthujayanthan1289 7 месяцев назад
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே. * முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.
@thanshithahomecareandsurgi1599
@thanshithahomecareandsurgi1599 Месяц назад
🙏🙏🙏🙏
@gayathrik3376
@gayathrik3376 25 дней назад
Thank you Porul vilakathutan padalaum pathivittatharku
@sekardevaraj7354
@sekardevaraj7354 7 месяцев назад
நான் என்ன புண்ணியம் செய்தேனோ நான் உன் இனிய குரலில் இப்பாடலை கேட்டேன்
@nithyanithu1040
@nithyanithu1040 Месяц назад
உள்ளத்தை உருக வைக்கும் மாயக் குரலோனே நன்றி என்ற வார்த்தை போதுமா எனத் தெரியவில்லை ஆனால் நன்றி , பாட்டு கற்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது இதே போல பாட வேண்டும் என்பதற்காக திருப்புகழை
@vijayaramsk4490
@vijayaramsk4490 8 месяцев назад
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
@nirmaladevi-cw2ch
@nirmaladevi-cw2ch 6 часов назад
Unga thirupugazh songs all are super creativity and music and singing, Super super innum nariya thirupugazh songs pannuga pls
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் இப்போது காண்பிக்கப்படுகிறது உருவாக்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி திருமழபாடி ஆனந்த்
@spandieswaripandies9985
@spandieswaripandies9985 Месяц назад
முருகா போற்றி நீயே எங்களுக்கு மகனாக வர வேண்டும் முருகா
@user-rq4ql1ih2n
@user-rq4ql1ih2n 2 месяца назад
Supper you took tirupugal to next generation your generations will live long life with health and wealth
@YaazhMusic
@YaazhMusic 2 месяца назад
Thank you 🙏🏽
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS Год назад
🌊முருகா🌊 திரு. வெங்கடேச திருநாவுக்கரசு அவர்களின் குரல்.. நயம்.. ரஸம் ... அருமை 🙏🙏🙏
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Год назад
Muruga saranam 🙏🦚💥 🙏🙏🙏அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 🙏🙏🙏 Vetrivel Muruganuku Arohara 💥🦚🙏
@rakee1451
@rakee1451 7 месяцев назад
Dear Brothers, such a fantastic creation. Hearty thanks to each & everyone. Please dont delete this for any reason. THis Video made my DAY
@deepakchoudhary59
@deepakchoudhary59 7 месяцев назад
Appa neeye ennaku kulanthaiyaga perakkavum appa😭😭😭
@SathishTj-lq5ib
@SathishTj-lq5ib Месяц назад
Super sir meimaranthu ketten
@YaazhMusic
@YaazhMusic Месяц назад
🙏🏽
@kokilasakthivel8213
@kokilasakthivel8213 Месяц назад
வேலும் மயிலும் துணை❤
@NishanthMurugan24
@NishanthMurugan24 Год назад
All your Thirupugahzal songs are addictable.. kudos to singers and music team... ❤ peaceful.... god bless all of u.....
@ushakrishna1301
@ushakrishna1301 Месяц назад
You guys are doing great❤murugan thunai
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
அருணகிரிநாதர் இருந்தால் கண்டிப்பாக பார்த்து கொண்டு இருப்பார்கள் அருணகிரிநாதர் திருப்புகழ் எல்லையற்ற அருள் ஆற்றல் வாய்ந்த வரிகள் உயிரையும் மறந்து விட்டேன்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 месяцев назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
அனைவருக்கும் திருப்புகழை பற்றி செல்ல வேண்டாம் முருகனை உணர செய்ய வேண்டும் தமிழை கடித்து சுவைத் உண்ணவேண்டும் திருப்புகழ் நம் உயிர் போன்றது
@nidhinsivaraman
@nidhinsivaraman 4 месяца назад
2:29 Goosebumps
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 10 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
@SathiyaPriya-su5ui
@SathiyaPriya-su5ui Месяц назад
En valkai muluvathum unnai maraven en appa
@theoccationguy
@theoccationguy 10 месяцев назад
Om namasivaya namaga om saravana ❤bava Om muruga muruga muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 2 дня назад
🙏🙏🙏
@vivekvivek-or1kl
@vivekvivek-or1kl 4 месяца назад
Om Muruga Saranam 🙏🕉️🙏
@chandiramoulichandiramouli7477
@chandiramoulichandiramouli7477 2 месяца назад
இந்தப் பாடல்கள் எல்லாம் கேட்டு கேட்டு நானும் இப்பொழுது பாடத் தொடங்கி இருக்கிறேன் நன்றி
@DearThogai
@DearThogai 18 дней назад
Wow.... getting goosebumps 🙏🙏🙏
@maheshwaris9454
@maheshwaris9454 8 месяцев назад
Goosebumps and tears seeing Murugan statue in this song🥹🥰
@nandunramyajeewa9949
@nandunramyajeewa9949 10 месяцев назад
Muruga 😍😍😍😍
@saikrishna-qh3oi
@saikrishna-qh3oi Год назад
3 D முருகர் அருமையா அழகா இருக்கார்
@user-vu4ee9sw9j
@user-vu4ee9sw9j Год назад
ஓம் முருகா சரணம் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹர
@susithraravi2499
@susithraravi2499 Месяц назад
Semaa
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 19 дней назад
🙏🙏🙏💐
@reghungl2352
@reghungl2352 Год назад
அப்பனே முருகா
@reghungl2352
@reghungl2352 9 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h Месяц назад
Muruga iduppu kai kal vali anaithum sariaganum gunamaga vendum muruga 🙏😊
@manivelou7337
@manivelou7337 Год назад
Fantastic rendition. I always follow and hear your Thirupugazh songs. Wonderful
@user-bq7rk8ju5f
@user-bq7rk8ju5f Год назад
நன்றிகள் கோடி! என் அப்பன் கதிர்காம கந்தானுக்கு அரகரோகரா!
@vijayashreev8342
@vijayashreev8342 11 месяцев назад
Miga miga arumaiyana kural mattrum padaipattral. En😮 manamaara vazhthukkal . Unga kuzhu Paar pugazh pera vendugiren
@theoccationguy
@theoccationguy 8 месяцев назад
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா முருகா ❤
@babishaalexander3005
@babishaalexander3005 3 месяца назад
The best❤
@anbbusaravanan1252
@anbbusaravanan1252 2 месяца назад
what a BLISS ❤❤❤
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
திருச்செந்தூர் திருப்புகழ் அப்பா அம்மா என வரிகள் மிகவும் அருமை படைப்புகள் ஐந்து வயது குழந்தை இப்பாடலை பார்த்து பாடுகிறது
@theoccationguy
@theoccationguy 11 месяцев назад
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Anand13691
@Anand13691 Год назад
அருமை🙏 வணக்கம் அண்ணா 🙏 வேண்டுகோள் திருமண திருப்புகழ் 2 பாட வேண்டுகிறோம் 1. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. 2. நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
@YaazhMusic
@YaazhMusic Год назад
Sure. Song ready and video is in progress
@Anand13691
@Anand13691 Год назад
@@YaazhMusic நன்றி அண்ணா 🙏
@Anand13691
@Anand13691 11 месяцев назад
அண்ணா ஆவலோடு எதிர்பார்க்கிறோம் 🙏
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h Месяц назад
Muruga enakkum en kanavar pillaigal marumagal noi illamal neenda ayuludan irukka vendum muruga 🙏 om saravana bava 🙏 engalukku endha kastam vandhalum kakka vendum muruga 🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 11 месяцев назад
ஓம் சரவண பவ 🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@srijithmenon906
@srijithmenon906 Год назад
Vetri vela.. Endrum un adimai 🙏🙏🙏
@sahanayks3194
@sahanayks3194 11 месяцев назад
Om vinayaga om murugappatheivanaivalliamma namaga om murugappatheivanaivalliamma namaga🙏😊🌻❤💐
@navinam13
@navinam13 6 месяцев назад
அருணகிரிநாதர் அருளிய பொக்கிஷம் 🤲🏻
@user-uj9hq1tq8g
@user-uj9hq1tq8g 11 месяцев назад
Vetrivel muruganuku arokara veeravel muruganuku arokara murugan adimai forever
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Год назад
ஓம் சரவணபவ.நன்றி.நமச்சிவாயம்.
@pavithrankpavi
@pavithrankpavi Год назад
இரண்டாம் வரியில் அணைந்து என்பதை அடைந்து என்று பாடியுள்ளீர்கள் வெங்கட் அண்ணா. மற்றபடி தரம்.. ❤❤❤❤❤ .. அருணகிரியார் என்பது சிவனே என்று நம்புபவர்கள் நம்மில் பலருண்டு. அத்தகையில் ஈசனருளும் குகனருளும் உண்டு.
@YaazhMusic
@YaazhMusic Год назад
தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி பவித்ரன், பாடல் வரிகள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய பலமுறை மதிப்பாய்வு செய்தேன், ஆனால் நான் தவறவிட்டதாகத் தெரிகிறது. இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
@SathishVijayaKumar-bd2te
@SathishVijayaKumar-bd2te 7 месяцев назад
Sordhu pogum podhellam nimmady um amaidi um thara niivagalum ivanga team m, magarasana pola vazha vendugiren, murugaa
@siva96138
@siva96138 Год назад
Super voice Nice Editing Thanks for uploading Need more thiruppgal song from you
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 11 месяцев назад
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉
@sekarsumathi833
@sekarsumathi833 3 месяца назад
Murugaperumane ennoda magalukkum viraivil nallavaran manasukku pidithamadhiri thirumanam nadakka arulpuriyanum ayya
@gokulgkrishna1993
@gokulgkrishna1993 Год назад
Arulvai Guhaney....🙏🙏❤
@deepikaraveendran878
@deepikaraveendran878 6 месяцев назад
From this song, I feel murugar is more close me.. I heard this song many times per day., Thanks for creating this thirupugazh lively..
@boopathiraja9806
@boopathiraja9806 8 месяцев назад
அதல சேடனாராட என்ற திருப்புகழ் பாடலையும் இதே போன்று வழங்கவேண்டுகிறேன்❤
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 4 месяца назад
ஓ்சிவசிவஓம் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🏻✨✨✨
@shamilibaskaran2998
@shamilibaskaran2998 11 месяцев назад
Thirupugal all songs podunga Hats off yaaazh music🎉
@shamilibaskaran2998
@shamilibaskaran2998 11 месяцев назад
Om Murugan potri Vetri vel Veera vel Sakthi vel Nanna vel🙏
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 5 месяцев назад
ஓம்சரவணபவ முருகாசரணம் சரணம்.
@Chozhan213
@Chozhan213 8 месяцев назад
🙏தமிழ் கடவுள் முருகா 🌹போற்றி.. 🙏சரணம்..
@ragukishur8034
@ragukishur8034 11 месяцев назад
Wow wonderfull thirupuzal song🌺👍
@mayavi7777
@mayavi7777 3 месяца назад
Tq lovely❤❤❤❤❤
@saranyamanimaran3445
@saranyamanimaran3445 Год назад
Appane muruga 🙏...
@srimahathi119
@srimahathi119 Месяц назад
@anandramamoorthi3730
@anandramamoorthi3730 5 месяцев назад
ஓம் முருகா போற்றி🙏
@brilliantwithbrushes5476
@brilliantwithbrushes5476 11 месяцев назад
I started learning thirupugal by seeing your videos....its easy pronounciation
@mpdinesh1358
@mpdinesh1358 11 месяцев назад
En appanae muruga thunai 🙏❤️
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 11 месяцев назад
வெங்கடேஷ் திருநாவுக்கரசரே திருமழபாடி வர மறந்தாய ஐயா
@alkondan007
@alkondan007 Год назад
broo. kalakiteenga. ketukiteee irkalaam evlonalum. Thanks for Thirupugal series bro. Let you service thrive
@dhanyahospital5761
@dhanyahospital5761 Год назад
Superb voice and visuals 👌 Appreciate your efforts.
@kandasamym6594
@kandasamym6594 11 месяцев назад
ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏
@aishuajira-617
@aishuajira-617 11 месяцев назад
Om muruga neeye thunai appane
@rukmani6134
@rukmani6134 11 месяцев назад
Very fine . No compensation for this Such a beautiful voice.
@sambathxtreme6166
@sambathxtreme6166 Год назад
🙏🙏🙏👍👌👌👌 வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் முருகனின் அருளால் அனைத்தும் நிறைவாகஇட்டும்
@karthikashortedits9317
@karthikashortedits9317 10 месяцев назад
என் உயிர் என் தங்கம் முருகா
@MrInba46
@MrInba46 Год назад
ஓம் முருகா ❤
@Rhyms8690
@Rhyms8690 3 месяца назад
Memerising music and song lines , The way it's sung and presented !!!.. It's giving a divine energy and a pathway to get connected to our Lord Muruga !. Thanks Heaps to Yaazh Music Team
@YaazhMusic
@YaazhMusic 3 месяца назад
Thank you 🙏
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 Год назад
அழகு ♥️ நன்றி 🙏
@aruneswar6224
@aruneswar6224 8 месяцев назад
Migavum arputham.. vazhthukkal for the team.. 👌👏👏
@rrv2603
@rrv2603 Год назад
Karunai kadalae kandha pootri❤om muruga
@user-xd4we2gg9r
@user-xd4we2gg9r Год назад
Very nice voice and good composing
@bhoopv1
@bhoopv1 3 месяца назад
அருமை🙏🙏🙏🙏
@mugilan85
@mugilan85 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤ love from Malaysia
@vijayalakshmiv4148
@vijayalakshmiv4148 10 месяцев назад
Deep love on you muruga.. goosebumps
@chinnarasukumar
@chinnarasukumar Год назад
ஓம் முருகா🦚
@srihariganapathy3113
@srihariganapathy3113 6 месяцев назад
ஓம்சரவணபவ
@sureshjackey5842
@sureshjackey5842 11 месяцев назад
Excellent. We need more like this.
@umayalramasamy29
@umayalramasamy29 9 месяцев назад
Each and every songs super, hats of to you ,thank you so much
@user-ey5cd2xw1k
@user-ey5cd2xw1k 11 месяцев назад
Thirusitramabalam
@VazghaValamudan2683
@VazghaValamudan2683 5 месяцев назад
Singer voice is amazing
@sandhyamurugan271
@sandhyamurugan271 5 месяцев назад
Thank you so much team... All Your very very nice
Далее
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 252 тыс.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,4 млн
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 252 тыс.